எதிர்வரும் பொதுத் தேர்தல் கடமைகளில் 3 இலட்சம் அரசாங்க உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த உத்தேசிப்பதாக தேர்தல் செயலகம் தெரிவிக்கின்றுது.
இம்முறை தேர்தல் கடமைகளில் ஈடுபடுகின்றவர்களின் விபரங்களை தேர்தல் தலைமை செயலகத்துக்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்கா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளைக் கேட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது 2 இலட்சத்து 50 ஆயிரம் அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டனர்.
தேர்தலில் வெற்றிபெறும் கட்சி அபேட்சகர்களின் விருப்பு வாக்குகள் முதலில் எண்ணப்படும் என்றும் ஏனைய வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள் பின்னர் எண்ணப்படும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.