பயிற்றப் படாத, சகல ஆசிரியர்களுக்கும் விஷேட பயிற்சி அளித்து அவர்களின் சேவையை மேம்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நாடளாவிய ரீதியில் 42 மத்திய நிலையங்களில் இந்த ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
நாட்டிலுள்ள அரசாங்கப் பாடசாலைகளில் கடமையாற்றும்; பட்டதாரியல்லாத பயிற்றப்படாத, சகல ஆசிரியர்களையூம் பயிற்றுவிக்கும் இந்த விஷேட திட்டம் இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விப் பிரிவும் தேசிய கல்வி நிறுவகத்தின் நிறுவன அபிவிருத்திப் பிரிவும் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.
வார இறுதி நாட்களில் இப்பயிற்சியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழ் மொழி மூலம் 18 மத்திய நிலையங்களும் சிங்கள மொழி மூலம் 17 மத்திய நிலையங்களும் ஆங்கில மொழி மூலம் 7 மத்திய நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.
இவற்றில் கடமைபுரிய பகுதி நேர அடிப்படையில் வருகை தரும் விரவுரையாளர்களாக சுமார் 200 பேர் வரை ஒப்பந்த அடிப்படையில் பணிக்கமர்த்தப் படவுள்ளனர்.
இப்பாடநெறி இரு வருடங்களைக் கொண்டது. முதலாம் வருடம் அளவீடும் மதிப்பீடும், கல்வி உளவியல், வகுப்பறை முகாமைத்துவம் முதலான பாடப் பரப்புகளைக் கொண்டிருக்கும்
NANTHA
இது ஒரு நல்ல முடிவு. அந்த ஆசிரியர்களின் எதிர்காலம் பிரகாசமாகியுள்ளதை அனுமானிக்க முடிகிறது. தமிழ் மொழி மூலம் 18 நிலையங்களும், சிங்கள மொழிமூலம் 17 நிலையங்களும் நிறுவப்பட உள்ளன என்பதை நோக்கும் போது தமிழர் பகுதிகளில் கல்வியும் ஆசிரியர்களின் தகைமைகளும் “மோசமடைந்துள்ள” பிரச்சனை தெரிய வருகிறது.
தமிழ்வாதம்
ஒரு சிங்கள அரசு,தமிழர்களுக்கு அதிக நிலையங்கள் அமைத்து நம்மை அரவணைக்கிறது என்றால் மகிந்த சிந்தனை மகுடம் சூட்டிக் கொள்ளுமே!
NANTHA
தமிழ்வாதம்:
நீங்கள்தான் “சிங்கள அரசு” ஒன்றும் செய்வதில்லை என்றும் சொல்கிறீர்கள். அதே நேரத்தில் அதே அரசு செய்யும் நல்ல காரியங்களையும் தூற்றுகிறீர்கள்.
தமிழ் உரிமை, தமிழ் ஈழம் என்று புறப்பட்டவர்கள் தமிழர் பகுதிகளை சுடுகாடாக்கிய பின்னரும் உங்களுக்கு தெளிவு வரவில்லை என்றே எண்ணுகிறேன்!
தமிழ்வாதம்
உங்கள் மொழியிலே சொல்வதானால்; “தமிழ் உரிமை, தமிழ் ஈழம் என்று புறப்பட்டவர்கள் தமிழர் பகுதிகளை சுடுகாடாக்கிய பின்னரும். ..” இந்தச் சிங்கள அரசு பயிற்றப் படாத, சகல ஆசிரியர்களுக்கும் விஷேட பயிற்சி
தமிழ் மொழி மூலம் 18 நிலையங்கள் உருவாக்குவது மகிந்தவின் மகத்தான சிந்தனையல்லவா. தூற்றுவதும், போற்றுவதும் அவர்ட்தம் ஆதரவைப் பொறுத்தது.
NANTHA
தமிழ்வாதம்,
இளம் சந்ததியினரின் எதிர்காலம் பற்றி தமிழர்கள் யாரும் அதிகம் இணையத் தளங்களில் அலட்டிக் கொள்வதில்லை. அந்த வகையில் “இந்த ஆசிரிய பயிற்சி” (மஹிந்த சிந்தனை ஆக இருந்தாலும் சரி, வேறு யார் சிந்தனையாக இருந்தாலும் சரி) வரவேற்க தக்கதே.
அநாதை மாணவர்கள் பற்றியும், அவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் வெளிநாட்டு வள்ளல்கள் பற்றியும் முதன்மைப்படுத்தும் செய்திகள் வருகின்ற வேளையில் மாணவர்களோடு அதிக நேரம் செலவு செய்து அவர்களின் மனதினை பண்படுத்தும் ஆசிரியர்களுக்கு ஒரு நல்ல காலம் பிறந்துள்ளது. அதற்கான பெருமை மகிந்தாவை சேரட்டும்!
Ajith
/நீங்கள்தான் “சிங்கள அரசு” ஒன்றும் செய்வதில்லை என்றும் சொல்கிறீர்கள். அதே நேரத்தில் அதே அரசு செய்யும் நல்ல காரியங்களையும் தூற்றுகிறீர்கள். தமிழ் உரிமை, தமிழ் ஈழம் என்று புறப்பட்டவர்கள் தமிழர் பகுதிகளை சுடுகாடாக்கிய பின்னரும் உங்களுக்கு தெளிவு வரவில்லை என்றே எண்ணுகிறேன்!// Nantha,
Who said Sinhala Arasu didn’t do anything. Sinhala Arasu made sinhala only, Stndardisation, colonisation. Sinhala arasu killed over 200,000 tamils and 300,000 in concentration camps. Sinhala arasu allows opened the A 9 route for Sinhalese. That is a graet thing. Sinhala arasu bombed hospitals and churches. That is a great thing.
Sinhala arsu bombed every inch of Vanni.They didn’t leave anything, This is our great leaders achievements. How many journalists were killed by him. Today he send his agents to bomb Dalatha Maligava and he gave ministerial post to Karuna who bombed Dalatha. He is our president not for sinhalese. We should salute him.
NANTHA
Ajith on February 21, 2010 10:37 pm
You have just wrote the usual propaganda of the so called TAMIL LIBERATORS.