ஜே. வி. பி. யின் தலைமை அலுவலகம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை கிடையாது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரஷாந்த ஜெயகொடி தெரிவித்தார்.
ஜே.வி.பி.யின் தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் பொலிஸ் சோதனைத் தடையொன்றை ஏற்படுத்துமுகமாக பொலிஸார் அங்கு சென்றிருந்ததாகவும் ஆனால், கட்சி அலுவலகத்தைச் சோதனையிட அவர்கள் செல்ல வில்லையென்றும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
எனினும், பெலவத்தையில் உள்ள தமது தலைமை அலுவலகம் நேற்றுக் காலை (19) பொலிஸாரினால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஜே. வி. பி. யின் பேச்சாளர் விஜித ஹேரத் கூறியுள்ளார். நீதிமன்றத்தின் அனு மதி பெற்றே கட்சித் தலைமையக த்தைச் சோதனையிடுவதாக பொலிஸார் கூறியதாக விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவலென்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.