தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமநாதன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் போட்டியிடவுள்ளதாக தேசம்நெற் க்குத் தெரிவித்தார். தங்கேஸ்வரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட நாடியிருந்ததாகவும், இறுதிநேரத்தில் அவருக்கு இடம் வழங்கப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது விடயமாக தேசம்நெற் தங்கேஸ்வரியுடன் தொடர்புகொண்டு வினவியபோது தான் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் வெற்றிலைச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதாக உறுதிப்படுத்தினார். இன்று இது விடயமாக ஜனாதிபதியை சந்தித்து நேரடியாகக் கதைத்ததாகவும் தெரிய வருகின்றது.
மாயா
தமிழ்க் கட்சிகளின் அழிவில்தான், தமிழனுக்கு இனி வாழ்வு. நல்ல முன்னேற்றம். வாழ்த்துகள். இனியாவது தமிழன் வாழ்வுக்காக ஏதாவது செய்யுங்கள். வெளிநாடு வந்தவனால் கூட தமிழனோடு வேலை செய்ய முடியவில்லை. அவன் வெள்ளையோடு சேர்ந்தே வளமாகியிருக்கிறான். எனவே சிங்களவனோடு சேர்ந்தாவது , அங்கு வாழும் தமிழரின் வாழ்வை வளமாக்க முயலுங்கள்.
செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், சிறீகாந்தா நல்லதம்பி, எஸ்.கனகரத்தினம், சிவநாதன் கிஸோர், டீ.கனகசபை, சந்திரகாந்தன் சந்திரநேரு ஆகியோருக்கும் டாட்டாவாம். சம்பந்தர் , சமத்துதான்.
NANTHA
புலி போன பின்னர் “அனாதைகளான” புலிப்பிரமுகர்கள் பலர் “ஆளும் கட்சியில்” சேர்ந்து மீண்டும் தங்களது “ஆளும்” சக்தியை உபயோகிக்க உள்ளனர்.
சதாசிவம் கனகரத்தினம், சிவநாதன் கிஷோர் ஏற்கெனவே வன்னி மாவட்டத்தில் ராஜபக்ஷவின் கட்சியில் சேர்ந்து “வெற்றிலை” சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். பிரச்சாரமும் தொடங்கி விட்டார்கள்.
யார் வெற்றி பெறுவார்கள் என்பது கேள்விக்குறி!
palli
வெத்திலை போட்டாச்சில்லே; அப்புறம் என்ன, வெற்றி தோல்வி கவலை: வெற்றி மட்டுமே கிடைக்கும்; யாம் இருக்க பயமேன்(சொல்வது பல்லியல்ல மகிந்தா)
santhanam
அவருக்கு கருணாதான் தலைவன் சேரவேண்டிய நேரம் வந்து விட்டது எனி நீங்கள் சத்திரசிகிச்சை செய்யவேண்டாம் இப்ப தான் சனநாயகம் மாக்களிடம்.
john
உங்களடைய அமைப்பு மக்கள் மத்தியில் செய்த குற்றங்களுக்கு எப்ப மன்னிப்பு கேட்கப்போகிறீர்கள்
NANTHA
“புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள்” என்று முழக்கம் செய்த சம்பந்தன் கும்பல் இன்று புலிகளினால் நியமிக்கப்பட்டவர்களை விரட்டியுள்ளது. புலிகளின் அராஜகங்கள் அனைத்துக்கும் துணை போனது மாத்திரமல்லாமல் அரச செலவில் அரசுக்கு எதிராகவும் புலிகளுக்குச் சார்பாகவும் “வாய் வீச்சு” காட்டிய இந்த உத்தம புத்திரர்கள் பாராளுமன்றத்தில் போய் எதிர்க் கட்சியில் அமர்ந்து தமிழர்களுக்கு எதைக் கொடுக்க போகிறார்கள் என்பது பற்றி இதுவரை எவரும் வாய் திறக்கவில்லை.
மகிந்தவிடம் நிஜப் புலிகள் மாத்திரமின்றி கடதாசி புலிகளும் சரணடைய தொடங்கியுள்ளது நாட்டுக்கு நல்ல காலம் என்பதை உணர்த்துகிறது.
ஜோன் கேட்டது போல “இவர்கள் புலிகளோடு” இருந்து செய்த நாச வேலைகளுக்கு எப்போது மன்னிப்பு கேட்கப் போகிறார்கள்?
Ajith
Its a good news madam. You are fit for the politics. This is the beauty of politics. Where else you can go. Whether you win or loose, there is a place in Rajpakse palace to serve. Ministerial post is gurunteed.
பார்த்திபன்
இந்த விடயத்தில் மகிந்த அரசும், புலிகளின் அதே பாணியைக் கையாள்கின்றது. எப்படிப் புலிகள் தமக்கு தலையாட்டக் கூடியவர்களை வைத்து கூத்தமைப்பு என்ற பெயரில் தலையாட்டிகளை வைத்து கட்சி நடத்தியதோ, அதையே இப்போது மகிந்த அரசும் செய்ய முனைகின்றது. இன்று கூத்தமைப்பு புலியாதரவாளர்களை வெளியேற்றி, தாம் ஏதோ உத்தமர்கள் போல் நாடகமாட, அதைத் தனக்குச் சாதகமாக மகிந்த அரசு பயன்படுத்தப் பார்க்கின்றது. இவர்கள் மகிந்த அரசிற்குச் சேவகம் செய்ய நினைப்பார்களேயன்றி, மக்களுக்கு ஒருபோதும் ஒன்றும் செய்யப் போவதில்லை. இந்த விடயத்தில் மக்கள் தெளிவாக ஒரு முடிவெடுத்து தமக்காக உழைக்கக் கூடியவர்களை, அவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் அவர்கள் வெற்றிக்காக தமது வாக்குகளை போட வேண்டும். அவர்கள் புதியவர்களாக இருந்தாலும், அந்த மக்களோடு மக்களாக வாழ்பவராக இருக்க வேண்டும். இதுவரை காலமும் நடந்த தவறுகளைச் சீர்தூக்கிப் பார்த்து, அந்த மக்கள் ஒரு தீர்க்கமான முடிவிற்கு வரவேண்டும். அந்த முடிவுதான் எதிர்காலத்தில், தமிழர்கள் தலை நிமிர்வதா அல்லது தலை குனிவதா என்பதைத் தீர்மானிக்கும்….
Ajith
இந்த விடயத்தில் மகிந்த அரசும், புலிகளின் அதே பாணியைக் கையாள்கின்றது. எப்படிப் புலிகள் தமக்கு தலையாட்டக் கூடியவர்களை வைத்து கூத்தமைப்பு என்ற பெயரில் தலையாட்டிகளை வைத்து கட்சி நடத்தியதோ, அதையே இப்போது மகிந்த அரசும் செய்ய முனைகின்றது.// பார்த்திபன்
Your comparison is absolutely rediculous. Rajapakse had a political life over 40 years. What you are trying to say is that Rajapakse was a good man before and only leart all from LTTE. This is the man who gave his support JVP behind the scene that lead to the massacre of over 50,000 sinhala youths in 1972&1989. The first think he did coming after power to buy politicians giving ministerial posts and billions of tax payers money.
You may not like LTTE but they are the ones who sccrified their life for the nation and still they are choice of the people.They used TNF to show the world tamil people’s aspirations. They didn’t do politics using the TNF like Rajapakse doing with Douglas, Karuna, Ananthasangaree.