ஸ்ரீதர் பிச்சையப்பா காலமானார்

sridar.jpgஇலங் கையின் பிரபல நாடகக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா சுகயீனம் காரணமாக இன்று காலை 8.00 மணியளவில் கொழும்பில் காலமானார். இறக்கும்போது இவருக்கு வயது 47.  நாடகக் கலைஞர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், எழுத்தாளர், ‘மிமிக்ரி’, மற்றும் ஓவியம் என ஒட்டு மொத்தக் கலைத்துறையில் ஈடுபட்டு, தன்னை முழுமையாகக் கலைத் தாய்க்கு அர்ப்பணித்த ஸ்ரீதர் பிச்சையப்பா. 
1963 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் திகதி பிறந்தவர்

இவரது பூதவுடல் தற்போது அரசினர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை 2.00 மணியளவில் மாதம்பிட்டிய மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • மாயா
    மாயா

    அவருக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

    இரத்மலானை இந்துக் கல்லுரியின் பழைய மாணவரவர் என்பதும் நிலாமதியின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Reply
  • kunapathy
    kunapathy

    a great loss to tamil drama field.i know him from his childhood.my heartfelt condolace to his wife nilamathy and childrens –kunapathy kandasamy(actor)

    Reply