இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக பொதுத்தேர்தலின் பின்னர் சகல கட்சிகளு க்கும் அழைப்பு விடுக்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘இந்து’ பத்திரிகைக்கு விசேட பேட்டியொன்றை வழங்கிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததும் சகல கட்சிகளின் தலைவர்களையும் அழைத்துப் பேச்சு நடத்துவேன். தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் இதில் பங்கு கொள்வார்கள். தமிழ், முஸ்லிம் தலைவர்களை அழைத்துப் பேசுவதற்கு கூடுமானவரை முயற்சி செய்திருக்கிறேன். பிரபாகரன் இருக்கும் வரை அவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சுக்களில் ஆர்வம் காட்டவில்லை.
இப்போது காலம் கனிந்திருக்கிறது. நான் ஜனாதிபதி என்ற வகையில் அவ ர்கள் என்னோடு பேசவேண்டும். என்னோடு அவர்களுக்கு பேச முடியாது விட்டால், புதிய தலைவர்களுடன் நான் பேசுவேன்.
13 வது திருத்தச்சட்டம் அரசியலமைப்பில் உள்ளது. அது ஏற்கனவே அமுல்படுத்தப்பட் டுள்ளது. இதன்படி பொலிஸ் அதிகாரங்களைத் தவிர அனைத்தும் அமுலிலுள்ளது.
வடக்கில் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியேற்றுவதற்கே நான் முன்னுரிமை கொடுக்கிறேன். இப்போது நிவாரணக் கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் பேரே இருக்கின்றனரென்றார்.
john
மக்களால் தெரிவு செய்யப்படும் தலைவர்களுடன் பேச்சு வார்த்ததை என்பது சரியானதே அப்ப ஏன் கடந்தகாலங்களில் இருந்த தலைவர்களுடன் பேச்சுவார்த்ததை செய்யவில்லை எல்லாம் நீங்கள் அரசுக்கு வந்துவிட்டுத்தான் என்பீர்கள் பின்னர் கதை விடுவீர்கள் பொறுத்திருந்து பார்ப்போம்