ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 27ஆம் திகதி பிற்பகல் 4.00 மணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அநுராதபுரத்தில் நடைபெற உள்ளதாக ஐ.ம.சு. முன்ன ணி செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார்.
ஐ. ம. சு. முன்னணி ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்த மறுதினம் ஐ.ம.சு. முன்னணி சார்பாக போட்டியிடும் சகல வேட்பாளர்களும் அநுராதபுரத்தில் ஒன்று கூடி ஜனாதிபதி முன்னிலையில் வாக்குறுதி அளிக்க உள்ளனர்.
மத அனுஷ்டானங்களின் பின்னர் கூட்டம் நடைபெறும்.