வட பகுதிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 5 இலட்சத்து 50 ஆயிரம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் கடந்த வாரம் ஏ9 வீதி ஊடாக யாழ்ப்பாணம் சென்றுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
நாக விகாரையில் கடந்தவாரம் 2 இலட்சத்து 50 ஆயிரம் யாத்திரிகர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும், இவர்களில் பெரும்பகுதியினர் தென் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் என்றும் யாழ்ப்பாணத்துக்கும் அதனைச் சுற்றியுள்ள ஏனைய முக்கிய இடங்களுக்கும் இவர்கள் விஜயம் செய்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் அச்சல ஜாகொட தெரிவித்தார்.
மூன்று தசாப்தங்களாக வடக்கில் இடம்பெற்று வந்த மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள தையடுத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையை உலகத்தில் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக கருதி இங்கு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
வட பகுதிக்கான நீர் விநியோகத்தை சீர்செய்ய ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய வசதிகளை சீர்செய்யும் நடவடிக்கைகள் படிப்படியே எடுக்கப்படுமென்றும் அமைச்சர் மேலும் கூறினார்
jo
புலம் பெயர்ந்து வாழும் மக்களை இந்த சுற்றுலா பயணிகள் தொகைக்குள் சேர்க்கமுடியாது.
Valampurri
வாடகை வீட்டார் படும்பாடு பாரீர்
தமிழ் மக்கள் இயல்பில் சுயநலம் மிக்கவர்கள். இதன் காரணமாக அவர்களுடை முன்னேற்றம் தடைப்படுகின்றது.இவ்வாறு கூறியவர் டாக்டர் மு.வரதராசனார். அவர் கூறியது ஈழத்தமிழர்கள் ஆகிய எமக்குச் சாலப் பொருந்தும்.
எங்களிடம் இயல்பாக இருந்த சுயநலமும் ஒற்றுமைப் படாத தன்மையும் எங்களின் எதிர் காலத்தை அடியோடு தரைமட்டமாக்கிவிட்டது.இப்போது வெற்று பூமியில் நின்று வெறு வெளியை உற்றுப்பார்க்கும் அளவிலேயே நாங்கள் இருக்கின்றோம்.இந்த இருப்புக்குக் கூட ஏ-9 பாதை திறப்பு உபத்திரமாகி விட்டது.
தென்பகுதியில் இருந்து வரும் பல்லாயிரக் கணக்கான சிங்கள மக்களை நாட்கணக்கில் வீடுகளில் தங்கவைத்து ஆயிரக்கணக்கில் உழைக்கும் வியாபாரம் திமிறத் தொடங்கியுள்ளது. இதனால் வாடகைக்கு இருந்தவர்களை மணித்தியாலக் கணக்கில் அவகாசம் கொடுத்து துரத்தும் படுபாதகம் எங்கள் யாழ்ப்பாண மண்ணில் நடந்தேறுகின்றது.
வருகின்ற சிங்கள மக்களிடம் இருந்து சில ஆயிரங்களை விழுங்குவதற்காக நீதி, நியாயம், இனப்பற்று என எல்லாவற்றையும் ஒரு கணப்பொழுதில் வெட்டி விழுத்திவிட்டு எங்கள் உறவுகளை நாங்களே துரத்திவிடும் பாதகம் உலகில் எங்கும் இருக்க முடியாதெனலாம்.
யுத்தம் நடந்த போது, எறிகணை வீழ்ந்து வெடித்து போது, இடம்பெயர்ந்த போதெல்லாம் தங்கள் வீட்டைப்பாதுகாத்துக் கொடுத்த வாடகை வீட்டுக்காரர்களுக்கு வீட்டு உரிமையாளர்கள் வழங்கும் சன்மானந்தான் இது.வாடகைக்கு இவர்கள் இருந்திருக்காவிட்டால் வீடு இருந்த இடமும் தெரியாமல் போயிருக்கும் என்ற உண்மை, இயல்பு நிலையில் மறைந்து நிற்பது மானிடப்பண்பிற்கு அழகல்ல.
பணத்திற்காக எங்கள் உறவுகளை நடுத் தெருவில் விடுவதோ, எங்கள் மண்ணை விலை பேசுவதோ தமிழ் இனத்திற்குச் செய்யும் படு தீமையாகவே அமையும்.
Thanks Valampurii