எதிர்வரும் பொதுத் தேர்தலில் கூட்டணியாக போட்டியிடுவது தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா தரப்பு முன்வைத்த கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையப்பெறவில்லை என ஐக்கிய தேசிய முன்னணி அறிவித்துள்ளது.
பிரதமர் பதவி, கட்சித் தலைமைத்துவம் மற்றும் அமைச்சுப் பதவிகள் தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இந்தக் கோரிக்கைகளுக்கு உரிய பதில் அளிக்கப்படாத காரணத்தினால் வெற்றிக் கோப்பை சின்னத்தில் ஜனநாயக தேசிய கூட்டமைப்பில் போட்டியிட ஜெனரல் சரத் பொன்சேகா தீர்மானித்துள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் கோரிக்கைள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கே பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டுமென கட்சி அறிவித்துள்ளது.