சிறுவர் குற்றச் செயல்கள் சம்பந்தமாக விசாரிப்பதற்காக தனியான நீதிமன்றம் ஒன்றை கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் அமைக்க நீதிமைச்சு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை செயற்றிட்டத்தின் கீழ் 16வயதுக்கு உட்பட்டவர்களின் குற்றச் செயல்கள் இனிமேல் புதிய நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களின் குற்றச் செயல்கள் குறித்து இதுவரை பொதுவான நீதிமன்றத்திலேயே விசாரணைகள் நடத்தப்பட்டன. சிறார் குற்றச் செயல்கள் தொடர்பாகவும் சிறுவர்களை தடுத்து வைத்தல் சம்பந்தமாகவும் ஆராயவென அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் நீதியசர் ஷிரானி பண்டாரநாயக்கவின் ஆலோசனையின் பேரில் இந்தப் புதிய நீதிமன்றம் அமைக்கப்படவுள்ளது
சிறுவர் குற்றவாளிகளைத் தடுத்து வைக்க புதிய மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.