இவ் வருடத்துக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 2,347 பேருக்கு இம்முறை பட்டங்கள் வழங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழக வேந்தர் கலாநிதி பிரேமதாச உடகம தலைமையில் ஜிம்னாசியம் மண்டபத்தில் காலை 8.00 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது