முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை மனுவை இன்று இலங்கையின் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நிபந்தனையின் அடிப்படையிலோ நிபந்தனையற்ற அடிப்படையிலோ பிணையை வழங்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எனினும் குடும்ப உறுப்பினர்களும் சட்டத்தரணிகளும் பொன்சேகாவை பார்வையிடுவதற்கும், தான் விரும்பிய ஒரு வைத்தியரை பொன்சேகாவுக்கு சிகிச்சை வழங்குவதற்கும் உடனடியான அனுமதியை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இவ்வழக்கு உயர்நீதி மன்ற நீதியரசர்களான ஷிரானி பண்டாரநாயக்க, பாலபட்டபெந்தி,ஸ்ரீபவன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்குஎடுத்துக்கொள்ளப்பட்டது. இந்தநிலையில், வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது. சரத் பொன்சேகா தொடர்ந்தும் கொழும்பின் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்