கருணா அம்மானுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் இடம் கொடுக்க மறுக்கப்பட்டு உள்ளதாக தேசம்நெற்க்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தேசிய நல்லிணக்க, ஒருமைப்பாட்டு அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர்களில் ஒருவருமான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் இடம் கொடுப்பது தொடர்பாக நேற்று இரவு சர்ச்கை ஏற்பட்டதாக தேசம்நெற்க்கு தெரியவந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து இலங்கை அரசுடன் முழுவதுமாக தன்னை இணைத்துக் கொண்ட அமைச்சர் முரளீதரன் தற்போது அரசுக்கு சுமையாகி உள்ளதாக ஆளும் கட்சிக்குள் உணரப்படுகின்றது. மேலும் முரளீதரனுடைய தனிப்பட்ட நடவடிக்கைகளும் அரசுக்கு ஊறுவிளைவிப்பதாக ஆளும் கட்சி வட்டாரங்களில் உணரப்பட்டுள்ளதாலேயே அவருக்கு தேசியப்பட்டியலிலும் இடம்கொடுக்க மறுக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
தனக்கு தேசியப் பட்டியலில் இடம்தர மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த விநாயகமூர்த்தி முரளீதரன் ஆத்திரப்பட்டு தகாத வார்த்தைகளையும் வெளியிட்டதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. விநாயகமூர்த்தி முரளிதரனின் தனிப்பட்ட நடவடிக்கைகளான மதுவுக்கு அடிமையானவை, பெண்களுடனான தொடர்புகள் என்பன விநாயகமூர்த்தி முரளீதரனின் அரசியல் அந்தஸ்தைப் பாதித்துள்ளது. பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ள விநாயகமூர்த்தி முரளீதரனின் மனைவியும் கருணா மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்களை வெளிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் விநாயகமூர்த்தி முரளீதரன் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்த காலத்தில் சிங்கள முஸ்லீம் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல்கள் சரணடைந்த பாதுகாப்புப் படையினர் மீது மேற்கொண்ட தாக்குதல்கள் என்பன சிங்கள ஊடகங்களில் தலைதுக்கும் நிலைகாணப்படுகின்றது. இதனை எதிர்க்கட்சிகள் ஊக்குவிக்கும் நிலை ஜனாதிபதித் தேர்தலிலும் வெளிப்பட்டது. இதுவும் முரளிதரனுக்கு எதிராக அமைந்துள்ளது.
விநாயகமூர்த்தி முரளீதரன் தனக்கு ஆசனம் வேண்டுமானால் போட்டியிட்டு தனது ஆசனத்தை தக்க வைக்கட்டும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவ்வாறு விநாயகமூர்த்தி முரளீதரன் போட்டியிட்டால் அவர் மட்டு வாக்காளர்களால் நிராகரிக்கப்படுவார் என்ற நிலையே உள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் விநாயகமூரத்தி முரளிதரனுடைய பெண்களுடனான உறவுகள் புகைப்படப் பதிவுகளாக உள்ளதால் விநாயகமூர்த்தி முரளீதரன் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கு எதிராகத் திரும்பினால் அப்புகைப்படங்கள் இணையங்களில் பரப்பப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
நடைபெறவுள்ள இப்பாராளுமன்றத் தேர்தல் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதியின் அரசியல் அஸ்தமனமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் எச்ச சொச்சமாக விநாயகமூர்த்தி முரளீதரனின் உதவியாளராக வந்து அரசியலில் தனக்கென ஒரு ஸ்தானத்தை தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் தவைரான முதலமைச்சர் சந்திரகாந்தன் மட்டுமே தற்போது வரை தக்க வைத்துள்ளார்.
NADARAJAH SETHURUPAN
கருணா இலங்கை அரச எதிர்கட்சி பிரதி தலைவர். அவருக்கு கட்டாயம் பாராளுமன்ற கதிரை கொடுக்கவேண்டும்.
rohan
//கருணா இலங்கை அரச எதிர்கட்சி பிரதி தலைவர். அவருக்கு கட்டாயம் பாராளுமன்ற கதிரை கொடுக்கவேண்டும்.//
எதிர்க் கட்சி பிரதித் தலைவர் என்று எதைச் சொல்கிறீர்க்ளோ தெரியவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் உங்களுக்கு இப்போதே தெரிந்து விட்டதோ என்னவோ.
ஆனால், பிரதித் தலைவர் பட்கவி கூட மட்டு வாக்காளர்களைக் கவர என அரசு போட்டவர்தானே?
john
இதுமட்டுமல்ல மேலம் நடைபெறலாம் அரசியல் இல்லாத புலியிடம் முள்ளிவாய்க்கால் தான் மிச்சமாக இருக்கிறது கருணாவும் ஒரு புலிதான்.
Ajith
Its ok about Karunna amman. That is expected. Kurna did not understand Rajapakse’s real face. He killed his friend Lasatha for talking about corruption.
what happended to the thesamnet interview with Thangeswari. Suddenly disappeared.It is another selective journalism.
palli
சேது மக்களா?? அல்லது அரசா??
அதை சொல்லுங்கோ;
Roshan
Karuna is a burden for the present government
thurai
கருணாவுடன் இதுவரை ராஜபக்ஸ்ச வைத்த உறவு சந்தர்ப்பவாத அரசியலேயாகும். தமிழர்களின் அழிவில் அக்கறையற்ர அரசியலோ, போராட்டமோ தமிழர்களினால் கண்டிக்கப்பட வேண்டியவையே.
கருணா புலியுடன் இருந்த காலத்தில் தமிழர்களினதும், சிஙகளவர்களினதும் அழிவினில் அக்கறை கொண்டிருக்கவில்லை. இதுவரையில் கருணா இராஜபக்ஸவிற்கு வழங்கியது அரசியல் பாதுகாப்பேயாகும். இதனைத் தொடர்ந்து செய்வதற்கு தமிழர்களில் ஆயிரம்பேர் வரிசையில் நிற்கத் தொடங்கி விட்டனர். கருணாவிற்கு நடந்ததுபோல புலியின் பின்னணியிலிருந்து வந்து அரசியலில் ஈடுபடுவோர் எல்லோரிற்கும் நடக்கப்போகின்றது.
துரை
rothana
கருணா இதுவரை கிழக்கு மாகாண மக்களுக்கு எதுவுமே செஜய்ததில்லை. புலியுடன் இருந்த காலத்திலும் சரி அரசுடன் இருந்த காலத்திலும் சரி சகல பரிவாரஙகளுடனேயே வலம் வந்தார். அவரின் ஆடம்பர வாழ்வு கிழக்கு மக்களை மறக்க வைத்தது. கொளும்பிலேயே தனது கலர்புள் வாழ்வை களித்தார் எனவே அவர் தொடர்ந்தும் அப்படியே வாழ வாழ்த்துக்கள்…… .rothana swiss
மேளம்
பின்னோட்டக்கார நண்பர்கள் அவசரப்பட்டு அதையும் இதையும் எழுதாதயுங்கோ. மட்டக்களப்பு நிலமை மோசமாக்கிடக்கு. பட்டிருப்புத் தொகுதியில் மட்டும் ஆறுபேர் கேக்கினம். இதில கிட்டத்தட்ட சமபலம் கொண்ட ஆக்கள்தான் இவையள். மட்டக்களப்பு தேர்தல் தொகுதியை எடுத்தால் இதில் கங்கேஸ் அக்கா ஆறுமுகம் அண்ணன் ரெண்டு பேருமே ஒரு ஊராக்கள் (குன்னங்குடா) ஒரு ரெத்தம் ஒரு குடி வேற. அதைத்தவிர ஈச்சந்தீவில் இருந்து சிவபால அண்ணன். மூன்றுபேரும் படுவாங்கரை. செளந்தரராசன் மாஸ்டர் ஏன் போனாரென்றுதான் தெரியிவில்லை. வடக்கு கிழக்கில் எலக்சன் கேக்கிற அத்தனை கொம்பனுக்குள்ளேயும் ஒரு நேர்மையான…… நல்ல…. மனிதன்….. ஒண்ணுமே புரியல்ல….. கல்குடா தொகுதி அதுபடதபாடு….. பிள்ளயான் கூட்டம் அம்போ…… ஆகமொத்தத்தில மூன்று முஸ்லிம் சகோதரர்கள் கட்டாயம் எம்பியா வருவாங்க…… இதுக்கு பழைய புலிக்கட்சிக்காரர்களுக்கு முஸ்லிம் சகோதரர்கள் கட்டாயம் நன்றி சொல்லவேணும். இப்ப விசயத்துக்கு வந்தா கருணாவுக்கு கட்டாயம் தேசியப்பட்டியலில் இடமுண்டு. பொறுத்திருந்து பாருங்கோ புரியம்.
மேளம்..
palli
துரை புலியில் இருந்து வந்தவர்கள் மட்டுமதானா?? மனசாட்ச்சியுடன் சொல்லுங்கள், சிவாஜிலிங்கத்துக்காக ஒரு கவிதை போல் ஒன்று
வேடிக்கையாக எழுதினேன், அத்கில் ஏதும் தவறு உண்டோ?? அப்படியாயின் புலி மட்டுமா தமிழரை ஏமாற்றுகிறது??