விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி ஐ. ம. சு. மு. அணியில் 16 மாவட்டங்களில் போட்டியிடவுள்ளது. அதில் தேசிய பட்டியல் இருவரில் முன்னாள் எம். பி., எம். முஸம்மிலின் பெயரையும் சிபார்சு செய்துள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பு – விமல் வீரவன்ச, கம்பஹா – பியசிறி விஜேய நாயக்க, அன்ஜான் உம்மா, களுத்துறை – ஜயந்த சமரவீர, மாத்தறை – சரத் வீரவன்ச, ஹம்பாந்தோட்டை – த மசேன கொடித்துவக்கு, மொனறாகலை – பத்ம உதயகாந்த குணசேகர, கேகாலை – புத்தாச ஹினாராச்சி, மாத்தளை – அரவிந்த வன்னியாராச்சி, கண்டி – நிமல் பேமவன்ச, நுவரெலியா – நிமல் பியதிஸ்ஸ, அனுராதபுரம் – வீரகுமார திசாநாயக்க, பொலன்நறுவை – ராஜா ரன்ஜித் குணரத்ன, குருநாகலை – சேனாரத்தின சில்வா, புத்தளம் – சமன்சிரி ஹேரத், இரத்தினபுரி – தீபால் குணசேகர, அம்பாறை – அனுர முனசிங்க.