ஜனநாயக தேசிய முன்னணியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுதவற்காக சரத் பொன்சேகா நேற்றுவேட்பு மனுவில் கைச்சாத்திட்டாரென மக்கள் விடுதலை முன்னணி முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். இராணுவச் சட்டங்களை மீறி நடந்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் தமது வேட்பு மனுவில் கைச்சாத்திட்டுள்ளார்.
சரத் பொன்சேகா தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஜனநாயக தேசிய முன்னணி எதிர்வரும் பொதுத் தோதலில் வெற்றிக் கிண்ணம் அடையாளத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.