பயங்கர வாதம் ஒழிப்பு மும்பை தாக்குதல் பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கை உள்ளிட்டவை மையமாக வைத்து இந்தியா, பாகிஸ்தான் இடையிலான முதல்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.
இரு நாட்டு வெளியுறவு செயலர்கள் நிருபமாராவ் ( இந்தியா ), சல்மான் பஷீர் ( பாகிஸ்தான் ) இருவரும் சந்தித்து பேசுகின்றனர். மும்பை தாக்குதல் நடந்து 14 மாதங்களுக்கு பின்னர் இந்த பேச்சு நடக்கிறது,
பாகிஸ்தான் பயங்கரவாத ஒழிப்பில் ஒத்துழைப்பது மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளிகளை ஒப்படைப்பது எல்லையில் ஊடுருவல் உள்ளிட்ட விஷயங்களில் பாகிஸ்தான் அரசு தரும் உத்திரவாதம் எந்த அளவிற்கு இருக்கும் என இந்தியா எதிர்பாக்கிறது.
பயங்கரவாத பிரச்சினைக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படும் என்று இந்தியா கூறி வரும் நேரத்தில் காஷ்மீர் பிரச்னை குறித்தும் பேசப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் கூறி வருகிறது.
டில்லி ஹைதராபாத் மாளிகையில் நடக்கிற இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள பாக், செயலர் சல்மான் பஷீர் கூறுகையில் ; இந்தியாவுக்கு பேச்சு நடத்த வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வேறுபாடுகள் களைந்து நல்ல முடிவுகள் பிறக்கும் என நம்புவதாக கூறினார்.
இதேவேளை இந்த பேச்சுவார்த்தை தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதனை வரவேற்பதாகவும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்