பொதுத் தேர்தலில் அநுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஜனநாயக தேசிய கூட்டமைப்புக் கட்சிகளின் வேட்புமனுக்கள் நேற்று வியாழக்கிழமை அநுராதபுர மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி எச்.எம்.கே.ஹேரத்திடம் கையளிக்கப்பட்டன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியல் பின்வருமாறு;
திஸ்ஸ கரல்லியத்த (தலைமை வேட்பாளர்), எஸ்.எம்.சந்திரசேன, துமிந்த திசாநாயக்க, டபிள்யூ.பீ.ஏக்கநாயக்க, வீரகுமார திசாநாயக்க, கமகே வீரசேன, அஸங்க செஹான் சேமசிங்க, எஸ்.சி.முத்துக்குமாரண, பேமசிறி ஹெட்டியாராச்சி, எம்.ஏ.சன்னசுதத் ஜயசுமன, ஜயலத் பண்டார செனவிரத்ன, ஏ.என்.எம்.சஹீட்.
வேட்பு மனுத்தாக்கலின் போது வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திசாநாயக்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பெருமளவான ஆதரவாளர்கள் பங்குபற்றினர்.
மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஜனநாயக மக்கள் கூட்டமைப்பின் வேட்புமனுவை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தலைமையில் வந்த குழுவினரால் கையளிக்கப்பட்டது.
இக்கட்சி சார்பான வேட்பாளர் பட்டியல் வருமாறு;
கே.டி.லால்காந்த (முதன்மை வேட்பாளர்), ரணவீர பத்திரண, எச்.எம்.வசந்த சமரசிங்க, அநுர திசாநாயக்க, மஹிந்த ஜயசிங்க, அருண திசாநாயக்க, சமந்த ரூபசிங்க, எஸ்.திலகசிறி, ஏ.டபிள்யூ. அப்துல் சலாம், லயனல் அத்துக்கோரள, எம்.ஜயரத்ன, சுசந்த குமார ஜயரத்ன.
எச்.கே.பந்துல பத்மசிறி தலைமையிலான சுயேச்சைக்குழுவொன்றும் புதன்கிழமை வேட்புமனுத்தாக்கல் செய்தது.