”புலிகளின் தமிழீழக் கொள்கையில் இருந்து தங்களை விடுவிக்கும் வரை புலம்பெயர்ந்த தமிழர்களால் இலங்கையில் சமாதானம் ஏற்படுவதற்கு உதவ முடியாது!” : INTERNATIONAL CRISIS GROUP – ICG

international_crisis_group‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழக் கொள்கையில் இருந்து தங்களை விடுவிக்கும் வரை புலம்பெயர்ந்த தமிழர்களால் இலங்கையில் சமாதானம் ஏற்படுவதற்கு உதவ முடியாது’ என இன்ரநசனல் கிறைசிஸ் குறூப் பெப்ரவரி 23ல் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது. ‘THE SRI LANKAN TAMIL DIASPORA AFTER THE LTTE’ என்ற தலைப்பில் வெளியாகி உள்ள 25 பக்க அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. THE SRI LANKAN TAMIL DIASPORA AFTER THE LTTE – EXECUTIVE SUMMARY : INTERNATIONAL CRISIS GROUPஇன்ரநசனல் கிறைசிஸ் குறூப் முரண்பாடுகளைத் தடுப்பதற்கும் தீர்ப்பதற்குமான ஒரு சுயாதீன அமைப்பு. ஐந்து கண்டங்களிலும் நேரடியாக களநிலைமைகளை ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிட்டு ஆலோசனைகளையும் இவ்வமைப்பு வழங்கி வருகின்றது.

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் பெரும்பாலும் பிரிவினையை விரும்புவதாகவும் இதுவே அவர்களுக்கும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கும் இடையே பெரிய இடைவெளியை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது. இலங்கையில் வாழும் தமிழர்கள் தனியாகப் பிரிந்து செல்வதற்கான போராட்டத்தில் ஆர்வம்கட்டுவதிலும் பார்க்க தங்கள் வாழ்வை மீளக்கட்டமைப்பதிலேயே கூடுதலாகக் கவனம் செலுத்துவதாகவும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

வெளிநாடுகளில் வாழ்கின்ற ஒரு மில்லியன் வரையான தமிழர்களால் தாங்கள் தனித்து ஒரு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அறிக்கை  புலம்பெயர்ந்த தமிழர்களிடம் உள்ள நிதியும் அமைப்புகளும் இலங்கையில் மீள் எழக்கூடிய வன்முறையின் அளவினை அதிகரிக்கச் செய்யும் என எச்சரித்து உள்ளது.

உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலும் சரி தமிழ் ஈழத்திற்கான ஆதரவு இல்லையென்பதைச் சுட்டிக்காட்டியுள்ள இவ்வறிக்கை புலம்பெயர்ந்த தமிழர்களின் தமிழீழ பிரிவினைக் கோரிக்கை மகிந்த ராஜபக்ச அரசினை அச்சமடையச் செய்வதன் மூலம் அரசு கடுமையான பயங்கரவாதத் தடுப்பு விதிமுறைகளை தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கு உதவுவதாக தெரிவித்து உள்ளது.

இலங்கைக்கு வெளியே உள்ள தமிழர்களின் நிதி இலங்கையின் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ள இவ்வறிக்கை இத்தாக்கம் எவ்வாறானததாக அமையும் என்பது வரும் மாதங்களில் தமிழ் மக்களை கொழும்பு அரசு எவ்வாறு அணுகப் போகின்றது என்பதிலேயே தங்கி உள்ளதாகத் தெரிவித்து உள்ளது. மேலும் சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்து அரசியல் அமைப்பை மாற்றியமைப்பதன் மூலம் தமிழர்களுடையதும் ஏனைய சிறுபான்மைச் சமூகங்களுடையதும் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள வைப்பதிலும் தங்கி உள்ளது என அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

இலங்கையில் நிரந்தரமான சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டுமானால் இலங்கை அரசு முரண்பாட்டின் காரணத்தை இனம்கண்டு நியாயமான குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதை இன்ரநசனல் கிறைசிஸ் குறூப் வலியுறுத்தி உள்ளது. தமிழர்கள் அரசியல் ரீதியாக ஓரம்கட்டப்படுவதையும் அவர்கள் பாதுகாப்பின்மையாக உணர்வதும் தடுக்கப்பட வேண்டும் என்பதையும் அவ்வறிக்கை வலியுறுத்தி உள்ளது.

இதற்கு இந்தியா, ஜப்பான், மேற்கு நாடுகள் மற்றும் பல்கலாச்சார அமைப்புகள் தமிழ் மக்களைப் பலப்படுத்த வேண்டும் எனவும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதையும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது. இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் தொடர்பில் ஐநா விசாரணைகளை மேற்கொள்ளக் கோர வேண்டும் என்றும் அவ்வறிக்கை ஆலோசனை வழங்கியுள்ளது. மேலும் வழங்கப்படும் உதவிகள் உரிமை மீறல்களுடன் பிணைக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • kalaignar
    kalaignar

    http://www.lankabusinessonline.com/fullstory.php?nid=134623480

    Sri Lanka aid donors urged not to give ‘blank cheque’

    March 01, 2010 (LBO) – Sri Lanka should not be given a “blank cheque” to revive its war-torn economy unless the political problem that generated the conflict is settled, an international non-governmental advocacy body has said.
    Western governments and multilateral funding agencies which give loans and aid to the island can press the government to ensure a lasting solution that addresses the grievances of minority Tamils, the International Crisis Group (ICG) said.
    It not violence could revive, the ICG said in a report called ‘The Sri Lankan Tamil Diaspora after the LTTE’.
    Government forces crushed the LTTE (Liberation Tigers of Tamil Eelam) in May 2009, ending a 30-year war and leading to an economic revival.
    “India, Japan, Western governments and multilateral organisations can do much more to assist the political empowerment of Tamils in Sri Lanka and press Colombo to address the causes behind the rise of the LTTE and other Tamil militant groups,” the ICG said.
    “There should be no blank cheque for Colombo to redevelop the north and east without first creating a political climate where Tamils and Muslims can freely express their opinions and have a meaningful role in determining (their) future.”
    The ICG said donor governments and the UN should tie their aid to an end to impunity for human rights violations and abuses of political power that undermine democracy and threaten the freedoms of Sri Lankans from all ethnic communities.
    The Sri Lankan government has rejected allegations of rights abuses.

    Reply
  • thurai
    thurai

    தமிழீழம் என்பது புலத்துத் தமிழர் மத்தியில் புகுத்தப்பட்டுள்ள போதை. இப்போதையினை கொடுப்பவர்கள் புலியின் ஆதரவாளர்கள் எனச் சொல்லப்படும் சுயநலம் கொண்ட் ஏமாற்ருக்காரரேயாகும்.

    தமிழீழப் போதையில் உள்ளவர்களிற்கு தான் எங்கு வாழ்கின்றேன் என்பதோ அல்லது தனது செயல்களால் ஈழத்தமிழர்களிற்கு ஏற்படும் தீங்குகள் பற்ரியோ எந்த சிந்தனையும் இல்லை. இவர்களால் திரை மறைவில் ஓர் சமூகம் தமது சுகபோக வாழ்வினை நடத்திக் கொண்டிருக்கின்ற்து என்பதே உண்மை.

    பூனகரி மொட்டைக்கறுபனரிசியை இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யத்தடை ஆனால் இந்தியாவிலிருந்து புலியின் வியாபாரிகள் இற்க்குமதி செய்கின்றார்களாம். இது விளம்பரம். இதனை நம்பும் சமூகததை நாம் தமிழ்ரென்று ஏற்கவேண்டுமா?

    துரை

    Reply
  • santhanam
    santhanam

    களத்தில் கோமணமும் இல்லை புலத்தில் சுகபோகவாழ்கை வாழந்துகொண்டு தமது பிள்ளைகளை கலையிலும் படிப்பிலும் உன்னிப்பாக கவனித்து கொண்டு மிகுதிபகுதிநேர இடைவெளியில் தமக்கு சமுகத்தில் அந்தஷ்து ஒன்றின் தேவைக்காக ஈழம் என்றகோசத்தை உதட்டளவில் உச்சரித்துகொண்டு தாங்கள் ஒரு தேசியத்தில் பற்றுள்ளவராக அடுத்தவரிற்கு காட்டிகொண்டு தமது சுயநலதேவைகளை இதற்குடாக நிறைவேற்றுகிறார்கள் இவர்கள் உண்மையான போலிகள் இவர்கள் இங்கு வைத்திருக்கும் பொது அமைப்புக்கள் எல்லாம் இந்த நாடுகளின் சட்டத்திற்கமைவாக உருவாக்கபடவில்லை கணக்கிலிருந்து எல்லாம் சுத்துமாத்துக்கள் அதிகம் எல்லாம் மாபியாதனமான செயற்பாடுகள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    புலம் பெயர்ந்தல்ல “புலன்” பெயர்ந்து வாழ்வதாலேயே இவர்களுக்கு இப்படியான சிந்தனைகள் உள்ளன. ஆனாலும் இவர்களுக்கு தமிழீழம் அமைவதல்லக் கனவு. அதைப் பேசிப் பேசியே அடுத்தவனைச் சுரண்டி தாங்களும் தமது குடும்பமும் சுகமாக வாழ்ந்தால்ப் போதுமென்பதே இவர்களது தலையாய சிந்தனை. தப்பித்தவறி தமிழீழம் கிடைப்பதையும் இவர்கள் விரும்புவதுமில்லை. அப்படி ஒன்று கிடைத்தால் இவர்கள் அங்கு போய் வாழப் போவதுமில்லை. வெறும் கதையளப்பிலேயே காலத்தை கடத்தி கத்தைகளாய் பணமள்ளுவதொன்றே குறி.

    Reply
  • santhanam
    santhanam

    எங்கள் குடும்பத்தில் மொத்தம் எட்டுபேர், கிளிநொச்சியிலிருந்த எங்களை இரவோடு இரவாக விரட்டினர் விஸ்வமடுவுக்கு. கையிலிருந்த 20 000 காசு, உடுத்த உடை, படுப்பதற்குப் பாய், குழந்தைகளுக்கு பால்மா இரண்டு பாக்கெட், இரண்டு பாத்திரம், ஐ.ந்து லிற்றர் அளவுகொண்ட தண்ணிக்கான், இவற்றுடன் நாலம் வாய்க்கால், வட்டக்கட்சி வழியாக விஸ்வமடுவை அடைந்தோம். இராணுவம் குண்டு மழை பொழிகிறது. மக்கள் பரிதவித்து மரங்களின் அடியில் மாண்டுகிடக்கின்றனர். புலிகள் துப்பாக்கியும் கையுமாக பொதுமக்களிடம் இருக்கும் உணவுகளைப் பறித்து உண்ணுகின்றனர். எங்கும் நகரக்கூடாது என்று உத்தரவுவேறு போடுகின்றனர். எங்கள் கண்முன்னால் குண்டுகள் விழுந்து மக்கள் மடிகின்றனர். அப்படி இறந்தவர்களை புலிகள் வந்து புகைப்படமும், வீடியோப்படமும் எடுத்துச் செல்கின்றனர். காயப்பட்ட வர்களைக் காப்பாற்றுவதை விடுத்து படம் எடுக்கிறீர்களா என்று கேட்டதற்கு எனது உறவினர் தியநேசனுக்கு துப்பாக்கியின் அடிப்பகுதியினால் ஓங்கி ஒரு குத்துவிட்டார் அந்தப் பெரிய புலி நன்றி ஈரனல்

    Reply
  • Appu hammy
    Appu hammy

    தோல்வி உன்னை

    துரத்துகிறதென்றால்..

    வெற்றியை நீ

    நெருங்கிவிட்டாய்

    என்று

    அர்த்தம்

    Reply