அரசியல் தேசியம் என்பவற்றுக்கு அப்பால் தமிழ் மக்களுக்குத் தேவைகள் உள்ளன என்றும் நொந்துபோயுள்ள தமிழ் மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவூம் அரசாங்கத்தை ஆதரிக்கத் தீர்மானித்ததாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டு. மாவட்ட வேட்பாளருமான க. தங்கேஸ்வரி தெரிவித்தார். தேசியம், அரசியல் என்று கூறிக்கொண்டு இனியும் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்த அவர் மக்களுக்கு இப்போது உடனடித் தேவையாக இருக்கும் விடயங்களை நிறைவேற்றுக்கொடுக்க வேண்டியதே அரசியல்வாதிகளின் பொறுப்பாகும் என்று குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்னமும் அந்தத் தவறையே மேற்கொள்கிறது. அவர்களின் செயற்பாட்டை தேர்தல் மேடைகளில் அம்பலப்படுத்துவேன். 30 வருட காலமாகப் பாதிக்கப்பட்டுள்ள படுவான்கரை உள்ளிட்ட பிரதேசங்களின் மக்களுக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொடுக்க ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் தங்கேஸ்வரி மேலும் கூறினார்.
தமிழ்வாதம்
தேசியம், அரசியல் என்று கூறிக்கொண்டு இனியும் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை’ என்ற அழகான அறிவுரை என்னெண்டு வயசு போற காலத்தில வந்து தொலையுது.
30 வருட காலமாகப் பாதிக்கப்பட்டுள்ள படுவான்கரை உள்ளிட்ட பிரதேசங்களை’ மூணு நாளுக்கு முன்னாடிதான் கண்டு பிடிச்சு மகிந்தாவோடை கிறிகிப் போனிகளோ!
வெண்டா உங்களுக்கு அமைச்சர் பதவி,தோத்தா அது கருணா அம்மானுக்கு எண்டு மாத்தையா சொன்னதையும் மேடையில அம்பலத்தி விடுங்கோ.
palli
//தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்னமும் அந்தத் தவறையே மேற்கொள்கிறது. //
இது இன்று, சில தினங்களுக்கு முன்பு மலைபோல் சம்பந்தர் ஜயாவை நம்பி இருந்தேன் கைவிட்டுவிட்டார் என பேட்டி கொடுத்தாபோல இருக்கு, இதைதான் இதெல்லாம் அரசியலில் சகஜம் என்பார்களோ;
rohan
பல்லி //இது இன்று, சில தினங்களுக்கு முன்பு மலைபோல் சம்பந்தர் ஜயாவை நம்பி இருந்தேன் கைவிட்டுவிட்டார் என பேட்டி கொடுத்தாபோல இருக்கு, இதைதான் இதெல்லாம் அரசியலில் சகஜம் என்பார்களோ//
பார்த்திபன் //அன்று கூத்தமைப்பு வேட்பாளராகத் தங்களைத் தெரிவு செய்த கருணா தான், இன்றும் வெத்திலையில் போட்டியிட தங்களுக்கு உதவியுள்ளார். //
யாரோ //தங்கேஸ்வரிக்கு அன்றும் இன்றும் கருணா தான் தலைவன்//
கருணா //என் தலைவன் என்றும் அண்ணன் பிரபாகரன் தான் – அவர் எனக்குத் தலைவர் அல்ல – கடவுள்! பொட்டம்மான், தமிழேந்தி, நடேசன் ஆகியோரை விலக்கினால் நான் மீண்டும் தலைவருடன் இணைந்து கொள்வேன்//
கருணா // பிரபாகரன் மக்கள் நலனுக்கு எதிராகவே இருந்தார். அவர் ஒரு பயங்கரவாதி. நான் சொன்ன நல்ல கருத்துக்க்களை அவர் கேட்கவில்லை. அதனால் தான் நான் அவரை விட்டுப் பிரிய வேண்டியிருந்தது.//