தமக்கு உரிய பாதுகாப்பை வழங்கும் படி உத்தரவிடக் கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையை மார்ச் 2ஆம் திகதி நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பதில் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா, நீதியரசர்கள் ஜகத் பாலபட்டபெந்தி, கே.ஸ்ரீபவன் ஆகியோர் முன்னிலையில் இந்த மனு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்தத் திகதியை நீதிமன்றம் விசாரணைக்குத் தீர்மானித்தது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையை அடுத்து எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு விலக்கப்பட்டது. அதனை ஆட்சேபித்தே ரவூப் ஹக்கீம் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.