பாராளு மன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு கடமைகளுக்காக நாடளாவிய ரீதியில் 65 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்த பொலிஸ் திணைக்களம் தீர்மானித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி நேற்றுத் தெரிவித்தார்.
தேர்தல் சட்ட மூலத்துக்கமைய நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற வகையில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
நாடு முழுவது முள்ள 40 பொலிஸ் வலயங்களிலும் 413 பொலிஸ் நிலையங்களினூ டாகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாக தேர்தல்களுக்கான பொலிஸ் ஊடக பேச்சாளர் காமினி நவரட்ன தெரிவித்தார்.