பாராளு மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்க ஒதுக்கீடு தொடர்பான பணியில் தேர்தல்கள் செயலகம் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக அதன் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
வேட்பாளர்களின் விருப்பு இலக்க ஒதுக்கீடு இன்று உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்படுமென்று தகவல்கள் வெளியாகியிருந்த போதும் அது தொடர்பான பணிகள் நிறைவு பெறவில்லை.
கூடிய விரைவில் வேட்பாளர் விருப்பு இலக்கங்கள் மாவட்ட ரீதியாக தேர்தல்கள் செயலகத்தினூடாக அனுப்பி வைக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.