அமெரிக்க அரசின் இராஜாங்க துறையால் தெரிவு செய்யப்பட்ட அனைத் துலக அளவில் 2010 ஆம் ஆண்டின் துணிச்சல் மிகுந்த பெண்களுக்கான விருதைப் பெறப்போகும் பத்து பேரில் இலங்கையைச் சேர்ந்த பெண் சமூக சேவகி ஜன்சிலா மஜீத்தும் ஒருவர்.
20 வருடங்களாக இடம் பெயர்ந்து வாழும் இவர் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்பவர்களுக்கான சமூக சேவையில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்க அரசின் இராஜாங்க துறை செயலாளர் ஹிலரி கிளிண்டன் திங்கட்கிழமை அறிவித்த விருது பெறுபவர்களுக்கான பட்டியலில் ஜன்சிலா மஜித்தின் பெயர் இடம் பெற்றுள்ளது.
எதிர்வரும் 10 திகதியன்று அமெரிக்க அரசின் இராஜாங்க துறை சார்பில் நடைபெறும் விழாவில் அறிவிக்கப்பட்ட பத்து பேருக்கும் ஹிலரி கிளிண்டன் விருது அளித்து கெளரவிப்பார். அரசு துறையால் வெளியிடப்பட்டுள்ள விபரங்களில் மஜீத் புத்தளம் பகுதியில் உள்ள சமுதாய சேவைகள் மையத்தின் நிர்வாக காப்பாளர் என்றும் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியைச் சார்ந்தவர்களுக்கு தன் சொந்த செலவில் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றார். மஜீத்தின் முக்கிய நோக்கம் அவர் வசிக்கும் பகுதியில் உள்ள முஸ்லிம் மற்றும் தமிழ் சமுதாயத்தினரிடையே நல்லுறவை ஏற்படுத்துவதாகும்.
kalaignar
http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8546367.stm
US honours displaced Sri Lankan Muslim woman
Ms Jensila’s organisation has grown significantly since 1992
A Sri Lankan Muslim woman who has been internally displaced in the north of the country for 20 years has won a top award from the US state department.
Majeed Jensila is one of 10 worldwide recipients of the state department’s International Women of Courage award for 2010.
She heads a group called the Community Trust Fund, engaged in “activities for the betterment of minority women”.
The state department said her focus was on uniting Muslims and Tamils.
The US Embassy in Colombo said that Ms Jensila had worked with young people on minority women’s issues including women’s rights, peace building, relief work and mine risk education.
Ms Jensila, from Mullaitthivu in Sri Lanka’s northern province, told the BBC Tamil service that she had been displaced when Tamil Tiger rebels evicted the entire Muslim community from the area in 1990.
She and others sought refuge in Puttalam, a small fishing town on the north-western coast, where she lives now with her husband and three children.
She started the Community Trust Fund with five people in 1992.
“At the start the task was very difficult,” she said.
But she was able to overcome the obstacles with support from her husband and family.
பார்த்திபன்
ஒரு முஸ்லிம் பெண் சமூக சேவைக்கான விருதினைப் பெறுவது மிகவும் பாராட்டத்தக்க விடயம். இந்த விடயம் முஸ்லிம் பெண்களில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தினை வெளிக்காட்டுகின்றது. அந்த வகையில் சமூக சேவகி ஜன்சிலா மஜீத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
NANTHA
செல்வி. ஜன்சிலா மஜீத் குடும்பத்தோடு புலிகளால் வடக்கிலிருந்து விரட்டப்பட்டவர். புலிகளுக்கு சார்பாக அறிக்கை விட்ட ஹிலரி கிளிண்டன் புலிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விருது கொடுக்க முற்படுவது “புலிகள்” பற்றி பேச வேண்டாம் என்ற வாய் பூட்டோ என்று ஒரு சந்தேகம்.
இனி அந்த விருதை அமெரிக்காவுக்கு வந்து வாங்க வேண்டும் என்று ஹிலரி கேட்காமல் இருக்க வேண்டும். ஏனென்றால் அமரிக்க விமான நிலையங்களில் “முஸ்லிம்” பெயர்கள் உள்ளவர்கள் காரணமில்லாது தடுத்து வைக்கப்பட்டு பல மணி நேர விசாரணைகளின் பின்னரே விடுவிப்பது வழக்கம்.
மலயாள நடிகர் மம்மூட்டி, ஹிந்தி நடிகர் ஷா ரூக் கான் போன்றவர்களுக்கு நடந்த பிரச்சனைகள் பற்றி அறிந்தவர்களுக்கு தெரியும். அது மாத்திரமல் இந்தியாவின் முன்னாள் ராஷ்ட்ரபதி அப்துல் கலாமையே அமெரிக்க எயார் லயின்சின் “அமரிக்க” ஊழியர்கள் “அம்மணமாக்கி” சோதனை போட்டனர். அதுவும் புது டெல்லி விமான நிலையத்தில்.
எனவே ஜன்சிலா விருதை வீட்டுக்கே தபாலில் அனுப்பும்படி கேட்டு விடுங்கள்!
thurai
முஸ்லிம்கள் புலிகளால் விரட்டப்படு முன்பே யாழ்ப்பாண்த்தில் நல்லூர் பகுதியிலிருந்து இந்துக்களால் விரட்டப்பட்டதாக அறிகின்றேன். இது உண்மையாயிருந்தால் ஏன் என நந்தா விளக்குவாரா?
துரை
NANTHA
துரை
அது எப்போது? யாருடைய ஆட்சிக்காலத்தில்? சேர சோழ பாண்டியர் காலத்திலா அல்லது பறங்கிகளின் காலத்திலா?
நீங்கள் கேட்கும் கேள்வி இந்த கட்டுரைக்கும், அல்லது நான் எழுதிய பதிலுக்கும் எதனை சம்பந்தப்படுத்துகிறது?
சாந்தன்
/…..எனவே ஜன்சிலா விருதை வீட்டுக்கே தபாலில் அனுப்பும்படி கேட்டு விடுங்கள்!….//
இதிலும் பார்க்க நல்ல ஐடியா ‘முஸ்லிம்களுக்கு’ அமெரிகா இழைக்கும் ‘அநீதிக்கு’ எதிராக இவ்விருதை வாங்கி வெள்ளைமாளிகை முன்னால் வீசி எறியலாம். செய்வாரா ஜன்சிலா?
thurai
நந்தா
யார் காலத்தில் நடந்தாலென்ன இந்துக்கள் விரட்டினார்களா? இல்லையா என்பதே கேள்வி. முஸ்லிம்கழுடன் சிங்களவ்ர்
மோதியுள்ளனர், புலிகள் விரட்டியுள்ளனர், இந்துக்கள் விரட்டியுள்ளனர். அமெரிக்கா பயங்கரவாதிகளென்று முஸ்லிம் நாடுகளில் போர் செய்கின்றது. இந்து மததை போற்றுவோர் அவர்கள் செய்யும் குற்ரங்களை மூடி மறைத்துக்கோண்டு பிறர் விடயங்களில் குற்ரம் காண்பதை நிறுத்தினால் வீண் விவாதங்கள் தொடராமல் இருக்கும்.
துரை
NANTHA
அது என்ன “யார் காலத்தில் நடந்தாலென்ன இந்துக்கள் விரட்டினார்களா?”
யாருடைய காலம் என்று சொல்ல “பரமபிதா” தடுக்கிறாரோ?
இந்துக்கள் விரட்டவும் இல்லை. முஸ்லிம்களுக்கு எதிராக போர் தொடுக்கவும் இல்லை. ஆனால் கத்தோலிக்க பாதிரிகளின் ஆணைப்படி புலிகள்தான் அவர்களை விரட்டினார்கள்!
இந்துக்கள் முஸ்லிம்களை விரட்டியிருந்தால் நல்லூர் முருகன் கோவில் வாசலில் கற்பூரம் விற்பனை செய்யும் உரிமையை முஸ்லிம்களுக்கு “செப்பு” பட்டயத்தில் எழுதிக் கொடுத்திருக்க மாட்டார்கள். அது மாத்திரமல்ல. இன்றும் ஒரு முஸ்லிமின் சமாதி நல்லூர் கோவிலினுள் உள்ளது. அதனை அழிக்காமல் இந்துக்கள் வைத்திருப்பது முஸ்லிம்கள் நல்லூர் கோவிலை கட்ட நிலம் கொடுத்த நன்றிக்காவே ஒழிய வேறொன்ருக்காகவும் அல்ல.
பாதிரிகள் இந்துக்களுக்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் அவிழ்த்து விடும் பொய்களில் பலவுண்டு. அதில் உங்கள் “விரட்டல்” கதையும் ஒன்று!
thaya
சென்று வா சகோதரி!.
கிளாலிக்கடல் தாண்டி
கக்கத்தில் சுமந்து வந்த
கைகுழந்தையையும்
கடலலைக்கு தின்னக்கொடுத்த
துயரங்களுக்கு
இப்போதுதான் விருது
கிடைத்திருக்கின்றது!…
கிளாலிக்கடலில்
உன் சமூகத்தவர் விட்ட
கண்ணீர் வெள்ளம்
நந்திக்கடலில்
அலையடித்து ஓய்திருக்கின்றது!
வரலாறு இப்படித்தான்…
நீயும் நானும்
நினைத்தது போல்
அது தீர்ப்பெழுதும்
காலங்களுக்காக
இப்பொழுதெல்லாம்
நீண்ட காலம்
காத்திருப்பதில்லை…
விருது கிடைத்த பின்னரும்
எழுது!… எழுது!!…
பொழுது புலர்வதற்காக…..
thurai
//பாதிரிகள் இந்துக்களுக்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் அவிழ்த்து விடும் பொய்களில் பலவுண்டு. அதில் உங்கள் “விரட்டல்” கதையும் ஒன்று!//நந்தா
அப்போ உலகில் இந்துகழும் முஸ்லிம்கழும் ஒற்றுமையாக் வாழ்கின்றார்கள் என்பதே கருத்து. புலிகள் என்றால் கத்தோலிக்கர். புலிகளைப் பயங்கரவாதிகள் என்று சொன்னால் அது கத்தோலிகரையே சாரும். இந்துக்களாக இருந்து கொலை செய்தவ்ர்கள், கொள்ளையடிப்பவர்கள் யாவரும் புலிகளல்ல. அப்போ இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவில் தீண்டாமையும் கத்தோலிகரா கொண்டு செனறு பரப்பினார்கள்.
துரை
சாந்தன்
//…..முஸ்லிம்கழுடன் சிங்களவ்ர் மோதியுள்ளனர், புலிகள் விரட்டியுள்ளனர், இந்துக்கள் விரட்டியுள்ளனர். அமெரிக்கா பயங்கரவாதிகளென்று…..// துரை,
புலி, இந்து, அமெரிக்கா எல்லாம் முஸ்லிம்களை ‘விரட்டியுள்ளனர்’ ஆனால் சிங்களவர்கள் மட்டும் ‘மோதியுள்ளனர்’ என நல்ல ‘வசதியாக’ மோதியுள்ளனர் என கதை விடுகிறீர்கள்.
1915ம் ஆண்டு கண்டிப் பெரஹெராவின் போது நடந்த சம்பவங்களின் பின்னர் சிங்களவர்கள் செய்த ‘மோதலின்’ போது 86 மசூதிகள் தாக்கப்பட்டன, 4,075 கடைகள் சூறையாடப்பட்டன, 35 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர், 198 பேர் காயப்பட்டனர் 4 பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். 17 கிறிஸ்தவ தேவாலயங்கள் எரியூட்டப்பட்டன!
இவை அனைத்துக்கும் பதிவுசெய்யப்பட்ட ஆதாரங்கள் உண்டு.
அன்றைய அரசு முஸ்லிம்களுக்கு சாதக நிலைப்பாட்டை எடுத்து சிங்களவர்களைச் சிறையிட்டது. சிறையில் வைத்து இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சீக்கிய ராணுவத்தினரால் வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலைசெய்யப்பட்டனர் சிங்களவர். சிங்களவர்கள் ‘நாசி ஜேர்மனி’ யுடன் சேர்ந்து குழப்பம் விழைவிக்கின்றனரோ என ஐயப்பட்டனர் பிரிட்டிசார்.
இந்த மசூதி எரிப்பு, கற்பழிப்பு, கொலை, தேவாலய எரிப்பு, சூறையாடல் போன்ற ‘மோதலில்’ ஈடுபட்ட சிங்களவரை சிறையில் சென்று சந்தித்து அன்றைய இங்கிலாந்தூ கவர்னரிடம் மனுச்செய்து அவர்களின் நலனுக்காக போராடியவர் சேர்.பொன். ராமநாதன்.
அந்நேரத்தில் சிறையில் இருந்தவர்களில் ‘தூய ஆரிய இனம்’ பேச்சு புகழ் அனகாரிக தர்மபாலாவும் ஒருவர். அவர் சேர்.பொன்.ராமநாதனுக்கு எழுதிய நன்றிக்கடிதம் இன்றும் உள்ளது.
நந்தாவின் கருத்துகள் பலவற்றுடன் (அனேகமாக 100%) எனக்கு ஒப்பில்லை. ஆனால் சிங்களவர்களுக்கு ‘வெள்ளையடிப்தை’ கொஞ்சம் நிப்பாட்டுங்கள்.
thurai
//ஆனால் சிங்களவர்களுக்கு ‘வெள்ளையடிப்தை’ கொஞ்சம் நிப்பாட்டுங்கள்//சாந்தன்.
மோதல் என்பது இருபகுதியினரும் இருக்கும் இட்ங்களிலேயே சண்டையிடுவது. விரட்டுவது என்பது இருக்கும் இடத்தை விட்டு பலாத்காரமாக் வெளியேற்றுவது. சிங்களவ்ர் எல்லோரும் கெட்டவர்கழுமல்ல, தமிழர்களெல்லோரும் நல்லவர்கழுமல்ல.
துரை
சாந்தன்
///…மோதல் என்பது இருபகுதியினரும் இருக்கும் இட்ங்களிலேயே சண்டையிடுவது. விரட்டுவது என்பது இருக்கும் இடத்தை விட்டு பலாத்காரமாக் வெளியேற்றுவது…..//thurai
’மோதலில்’ பள்ளிவாசல்கள் கொழுத்தப்படும், முஸ்லிம்கள் கொல்லப்படுவார்கள், பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள், தேவாலயங்கள் கொழுத்தப்படும். புலிகள், இந்துக்கள், அமெரிக்கர் இதனைச் செய்யாமல் வெறும் ‘விரட்டிவிட்டனரே’.
அதேபோல IPKF காலத்தில் தமிழரின் நெற்காணிகளை எவ்வாறு முஸ்லிம்கள் எடுத்தனர் என அக்காலத்தில் பணியாற்றிய கெனெரல் சர்தேஷ் பாண்டே பதிவு செய்திருக்கிறார். படித்துப்பாருங்கள் ‘விரட்டலுக்கு’ விளக்கம் தெரியும்.
நல்லது ‘கிழக்குப்பகுதி’ முஸ்லிம்களுக்கு எவ்வாறு கிடைத்தது எனத்தெரியுமோ? சிங்களவர்களின் ‘மோதல்களுக்கு’ பயந்து அங்கு சென்று குடியேறியவர்களே முஸ்லிம்கள் என்கிறார் முஸ்லிம் நண்பர் ஒருவர். அதனால்தான் சிங்களவர் கிழக்கை திரும்பக் கேட்கிறார்களாம் சொல்கிறார் சிங்கள நண்பர் ஒருவர்.
கீழே அனகாரிக தர்மபால முஸ்லிம்கள் (சோனகர்) பற்றி ….
“பிரித்தானியர்களுக்கு ஜேர்மன்காரர் எவ்வாறோ அவ்வாறே ஒரு முகமதியன் சிங்களவர்களுக்கு. சிங்களவர்களுக்கு மதத்தால், மொழியால் இனத்தால் அவன் ஒரு அன்னியன். பெளத்தம் இல்லாத சிங்களவனுக்கு இறப்பு விரும்பத்தக்கது. ப்ரித்தானிய அதிகாரிகள் சுட்டுக்கொல்லலாம், தூக்கில் இடலாம், சிறையில் இடலாம் அல்லது எது வேண்டுமானாலும் சிங்களர்களுக்குச் செய்யலாம். ஆனால் எப்போதும் சோனகர்களுகும் சிங்களவர்களுக்கும் இடையில் குரோதம் இருந்துகொண்டே இருக்கும். ….”
thurai
//ஆனால் எப்போதும் சோனகர்களுகும் சிங்களவர்களுக்கும் இடையில் குரோதம் இருந்துகொண்டே இருக்கும்//சாந்தன்
இனங்களிற்கினம் குரோதம் இருந்து கொண்டேயிருக்குமென்பது மட்டுமல்ல ஒரே இனத்தவரில் ஊரிற்கு ஊர் குரோதங்கழும் இருக்கத்தான் செய்கின்றன. இதனை உலகில் தடுக்கவோ நிறுத்தவோ யாராலும் முடியாது. மக்கள் பகுத்தறிவுள்ளவர்களாக மாறுவதன் மூலமே எங்கும் அமைதியைக் காணலாம். இதற்கு அரசியல் தலவர்கழும், மதங்களின் தலைவர்க்ழும் ஒத்துழைக்க வேண்டும்.
துரை
சாந்தன்
…..இதற்கு அரசியல் தலவர்கழும், மதங்களின் தலைவர்க்ழும் ஒத்துழைக்க வேண்டும்…./துரை….
மக்களைப் பகுத்தறிவாளர்களாக மாற்றுவதற்கு சரித்திரத்தை சரியாகச் சொல்லாமல் விரட்டினர், மோதினர் என வெள்ளையடிக்காமல் சரியாகச் சொல்லுங்கள்!!