பலமான குடும்ப உறவே பலமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளம். இதனைக் கொள்கையாகக் கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியமென ‘இளைஞர்களுக்கான நாளை’ அமைப்பின் தலைவரும் ஜனாதிபதியின் புதல்வரும் வேட்பாளருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாந்தோட்டை சிபோபுர சிங்கப்பூர் நட்புறவு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :- இந்நாட்டில் இளைஞர்கள் படையிலிருந்து விடுமுறைக்கு வீட்டிற்கு வரும் போதும் பாடசாலை பல்கலைக்கழ கத்துக்குப் போய் மீள வீடு திரும்பும் வரை பெற்றோர் அஞ்சி நடுங்கிய யுகம் ஒன்றிருந்தது. இதன்போது உள, உடல் ரீதியில் எவரும் பீடனைக்குள்ளானவர்கள் எமது தாய்மாரே.
எமது சகோதரரும் கடற்படையில் கடமைபுரிவதால் பயங்கரவாத யுத்தம் இடம்பெற்ற காலத்தில் எமது பெற்றோரும் இத்தகைய தாக்கங்களுக்கே உள்ளானார்கள் என என்னால் கூறமுடியும். லங்கையைப் பொறுத்தவரை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பினை பெண்களே வழங்குகின்றனர்.
வீட்டின் பொருளாதாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்பவற்றை இதில் முக்கியமாகக் குறிப்பிட முடியும். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு தற்போது அமைதி சூழல் நிலவுகிறது. இதனால் நிம்மதியடைந்தவர்கள் எமது தாய்மாரே. இதனால் எமது கலாசாரம் தேசியத்துவம் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது.
எனது முன்னேற்றத்தில் எனது பெற்றோரினது பங்களிப்பு முக்கியமானது. எனது தாயாரிடம் நான் கற்ற பாடமே எனக்குப் பெரிதும் உந்துதலளித்தது. அரசியலில் எனது தந்தையாரின் வழிகாட்டல் எனக்கு உதவியது. இதுவே எனக்கான அரசியல் சூழலை உருவாக்கித் தந்தது.
இந்நாட்டில் பெண்களின் பொருளாதாரம் சக்திபடுத்தப்பட வேண்டும். அரசியலில் பொருளாதார ரீதியில், தொழில்நுட்பத் துறையில் பெண்கள் முன்னேற்றப்பட வேண்டும். அவர்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். அத்துடன் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையிலான உறவும் பலப்படுவது மிகவும் முக்கியமாகும். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையிலான பலமான உறவு இல்லாவிட்டால் நாம் எத்தகைய அபிவிருத்தியை ஏற்படுத்தியும் அதில் பயனில்லை என்பதே எனது கருத்து.
குடும்ப உறவு பலப்படுத்தப்படல், பொறுமை இவையிரண்டும் நல்ல குடும்பம், நல்ல பிள்ளைகள் உருவாக மிகவும் அவசியமாகும். குடும்பம் பலம்பெறும் போது சமூகம் பலம்பெறுகிறது. சமூகம் பலம் பெறும்போது கிராமம் பலம்பெறுகிறது. கிராமம் பலம்பெறும் போது நாடு பலம் பெறுகிறது. நாம் பலம் மிக்க நாடொன்றைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் உழைப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கிருபா
“பலமான குடும்ப உறவே”
என்ன ஒரு பதமான தத்துவம்.
தமிழர்க்ளின் எதிர்காலத்தை
தீர்மானிக்கும் புதிய தலைமுறைகள்.
rohan
கிருபா//தமிழர்க்ளின் எதிர்காலத்தை
தீர்மானிக்கும் புதிய தலைமுறைகள்.//
அடுத்த தலைவர் நாமல் தான் என்று தீர்மானமே பண்ணி விட்டீர்களா?
thurai
தமிழ், தமிழென்று தலையையும் கொடுத்தவர்களிடமிருந்து இப்படியான ஒர் தத்துவம் வரவில்லையே? பணம், பணமென்று அலைந்து பரதேசியானவ்ர்களே நாம்.
துரை
மாயா
இலங்கை மக்கள் அனைவரையும், தன் குடும்பம் என நினைக்கும் நாமலுக்கும் , இலங்கை மக்களது சாவு எண்ணிக்கையை பண விக்கட்டுகளாக மாற்றும் தமிழருக்கும் இடையில் நிறைய வித்தியாசம் உண்டு.