இம்மாதம் நடுப்பகுதியில் இடைக்கால பருவப் பெயர்ச்சி மழை பெய்யூம் என எதிர்பார்ப்பதாக காலநிலை அவதான நிலைய பேச்சாளர் ஒருவர் தொவித்தார்.
தற்பொழுது நாட்டின் சில பகுதிகளில் மாலை வேளைகளில் சிறிது மழை பெய்து வருவதாக குறிப்பிட்ட அவா; ஒரு மாத காலமாக வரட்சியான காலநிலை நாடு பூராவூம் காணப்படுகிறது எனக் கூறினார். தற்பொழுது நிலவிவரும் வரட்சியான காலநிலை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என காலநிலை அவதான நிலையம் தொpவிக்கின்றது.
தற்பொழுது ஊவா சப்ரகமுவ மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் மாலை வேளைகளில் இடைக்கிடை மழை பெய்து வருவதாகவூம் காலநிலை அவதான நிலையம் தெரிவித்தது. நேற்று காலையூடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நுவரெலியாவில் 5 மில்லி மீட்டரும் இரத்மலானையில் 1.2 மி. மீ. உம் மழை பெய்துள்ளது.