கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு நிருபமா அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் இன்று சிவனேசத்துரை சந்திரகாந்தனை கொழும்பில் வைத்துச் சந்தித்தார். இதன் போதே இவ் அழைப்பை அவர் விடுத்ததாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்புத் தொடர்பில் அவர் எமக்கு மேலும் தெரிவிக்கையில், இந்திய வெளிவகார செயலாளர் நிருபமா ராவ் என்னைச் சந்திக்க வேண்டுமென கோரியிருந்தார். இதனையடுத்து அவரை நான் சந்தித்தேன்.
இதன் போது கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி, பிரச்சினைகள், நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் விதவைகளுக்கான உதவிகள் தொடர்பாகவும் கலந்துரையாடினோம்.
அத்துடன் அதிகாரப் பகிர்வு, 13 ஆவது திருத்தச் சட்டம், அதனை அமுல் படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து விளக்கினேன். கிழக்கு மாகாணத்தில் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு இந்தியா உதவும் என நிருமா ராவ் எனக்கு உறுதியளித்திருந்தார்.
இலங்கை விடயத்தில் இந்தியா தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாகவு ம் அவர் என்னிடம் தெரிவித்தார் என சிவனேசத்துரை சந்திரகாந்தன் கூறினார்.
palli
நல்ல ஒரு சந்தர்ப்பம் தலைவா கைவிடாதே, பழம் நழுவி கையில் வருவது இதுதான்,