பிபிசி உலக சேவைக்காக குலோப்ஸ்கேன் நிறுவனத்தார் நடத்திய ஒரு புதிய உலக அளவிலான சுற்றாய்வில் நம்மிலே ஐவரில் நால்வர் இணைய வசதியை அடிப்படை மனித உரிமை என்று கருதுவதாகத் தெரியவந்துள்ளது.
உலகெங்கிலிருந்தும் எழுபத்து ஒன்பது சதவீதமானோர் இணையத்தைப் பாவிக்கும் வசதியும் அனுமதியும் இருப்பது ஒரு அடிப்படை மனித உரிமை என்று கருதுகின்றனர்.
இணையத்தை பாவிப்பவர்கள் மட்டுமல்லாமல் இதுவரை இணையத்தை பாவிக்காதவர்கள் மத்தியிலும் இதே கருத்துதான் நிலவுகிறது என்றும் தெரிகிறது.