கலைக் கப்பட்ட இலங்கை பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது. அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான விவாதத்திற்காக ஜனாதிபதி தனது மேலான அதிகாரத்தின் மூலம் அதிகாரங்களைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தை கூட்டுகிறார்.
அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் சபாநாயகர் தலைமையில் கூடவுள்ள இன்றைய கூட்டத் தொடரில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் பெரும்பாலான உறுப்பினர்கள் அமர்வில் கலந்து கொள்ள மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. கலைக்கப்பட்ட பாராளுமன்றம் கூட்டப்படுவது இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் இது இரண்டாவது தடவையாகும்.