அன்புள்ள தமிழ் உடன்பிறப்புகளே,
“ஒன்றாய்ச் சேர்தல் தொடக்கம்: ஒன்றாய் இருத்தல் முன்னேற்றம்: ஒன்றாய்ச் செயற்படுதலே வெற்றி” இம்மடல் தங்கள் கைகளை நலமாக வந்தடையுமென நம்புகின்றேன். தலைவர் ஹென்றி போர்ட் அவர்களது மேலே தரப்பட்டுள்ள கூற்றை எண்ணிப் பார்க்கத் தமிழராகிய எமக்கு இப்பொழுதுள்ள நிலையிலும் சிறந்த நிலையொன்று இருக்க முடியாதென நான் நம்புகின்றேன்.
பெப்புரவரி 24 – 2010 அன்று இலண்டனிலுள்ள ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் வெற்றிமிகு தொடக்க மாநாட்டை அடுத்து இம்மடலைத் தங்களுக்கு வரைவதில் பேருவகை அடைகின்றேன். அதேவேளை சிறீலங்காவில் வாழும் எம் உடன்பிறப்புகள் பலரது பெரும் கவலைக்குரிய நேரத்தில் இதை எழுதுகின்றேன் என்பதையும் அறிவேன்.
இப்பொழுது நிலவுகின்ற மனித அவலநிலை மற்றும் அரசியல் நிலை பற்றிப் பொதுவாகவும் தமிழர் எதிர்நோக்கியுள்ள நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றிக் குறிப்பாகவும் புதிதாக உருவாக்கப்பட்ட உலகத் தமிழர் பேரவையின் கருத்துக்களைக் கீழே தர முயற்சிக்கின்றேன். பாரிஸ் கூட்டத்தில் 14 நாடுகள் கூட்டாக வரைந்த உ.த. பேரவையின் நோக்கம் குறிக்கோள் ஆகியவற்றில் கூறப்பட்டதற்கு அமைய சிறீலங்காவில் உயிர் பிழைத்து வாழும் தமிழரது மாந்தநேய மற்றும் அரசியல் தேவைகளைத் திறமையாக நிறைவுசெய்ய நாட்டு அடிப்படையிலும் பன்னாட்டு அடிப்படையிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழரை ஒன்று திரட்டி நாம் செயற்படுவோம்.
போரின் கடைசிக் கட்டத்தில் அப்பாவித் தமிழ் மக்களை பத்தாயிரக் கணக்கில் இரண்டகமாகக் கொடூரமான முறையில் கொன்று குவித்ததோடு குழந்தைகள் முதியோர் ஊனமுற்றோர் உட்பட 300 000 தமிழரை அனைத்துலக மனிதாபிமான உதவிகள் ஏதும் கிடைக்காத வகையிலும் செய்தி ஊடகங்கள் அணுகாத முறையிலும் மிக மோசமான நிலையில் வதைமுகாங்களில் தடுத்து வைத்துவிட்டுச் சிறீலங்கா அரசு இன்னமும் அம்மக்களது அவல நிலையை அனைத்துலகுக்கு மறைத்து வருகின்றது. அத்தோடு பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு அனைத்துலக உதவி கிடைப்பதை வீம்புடன் தடுத்து வருகின்றது. முன்னர் வன்னி முகாங்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் ஓர் இலடச்த்திற்கு மேற்பட்டோர் வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் முதலிய இடங்களில் புதிய முகாங்களில் தகுந்த மறுசீரமைப்பு இன்றியும் அடிப்படை வாழ்க்கை வசதிகள் இன்றியும் மட்டுப்படுத்தப்பட்ட இடம்பெயர்வாற்றல் உடையவர்களாகவும் இன்னமும் உள்ளனர்.
சரணடைந்த இளைஞரில் ஆயிரக்கணக்கானோர் முறையான விசாரணையோ சட்டவியல் பிரதிநிதித்துவமோ அற்ற நிலையில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துடன் கூடத் தொடர்பேதுமின்றி சிறைக்கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
போரானது 2009 மே 19 அன்றோடு முடிவுற்றுவிட்டது என அரசு அறிவித்ததோடு மறுசீரமைப்புப் பணிகள் மீள்கட்டுமானப் பணிகள் மீளிணக்கம் ஆகிய துறைகளில் தானெடுக்கும் முயற்சிகள் பற்றி அனைத்துலகச் சமூகத்திற்கு உறுதிமொழி வழங்கிவிட்டு அவற்றை நிறைவேற்ற மெய்யாக முயற்சிக்காது மாறாகத் தமிழர் தாயகத்தில் தென்னிலங்கையிலிருந்து சிங்கள பௌத்த மக்களைக் கொணர்ந்து குடியமர்த்தும் தன் வேலைத்திட்டத்தை வளர்ச்சித்திட்டம் என்ற போர்வையில் நிறைவேற்றி தமிழ் மக்களின் மொழி மற்றும் இறைநெறி அடையாளத்தை அழித்து வருகின்றது. இந்த இக்கட்டான நிலையில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இத்தேர்தலில் தமிழர் அடியோடு ஆர்வமற்றவர்களாக உள்ளனர். இதனை அண்மையில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் தெளிவாகக் காட்டியுள்ளனர். இந்நிலையை இன்னுமிரு காரணிகள் மேலும் மோசமாக்கியுள்ளன. இவற்றுள் ஒன்று அரசில் தம் செல்வாக்கையும் பதவியையுமே வேண்டித் தமிழரது உண்மையான வேட்கைகளை வஞ்சனை செய்கின்ற அரசியல்வாதிகள் எம்மிடையே உள்ளனர் என்பதாகும். இவர்கள் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு வன்முறையையும் ஊழல் வழிமுறைகளையும் கையாழுகின்றனர். அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்டுவரும் பிளவுகளையும் சிதைவையும் பெரும் கவலையுடனும் ஏமாற்றத்துடனும் நாம் கண்டுவரும் நிலை. தமிழரது அடிப்படை வேட்கைகளை ஒரே குரலில் எடுத்தியம்புவதற்கான ஒற்றுமையை இது நலிவுபடுத்தி அடக்குமுறையாளரும் இரண்டகர்களும் தம் பணிகளை எளிதாகச் செய்ய வழிசெய்கின்றது.
எமது உடன்பிறப்புகள் அடிப்படை வாழ்க்கை வசதிகள் ஏதுமற்றுத் துன்புற்று, ஊழலையும் தமிழரது உண்மையான அடிப்படை உரிமைகள் பற்றிய குழப்பத்தையும் கலக்கத்தையும் எதிர்கொண்டுள்ள இவ்வேளையில் உலகத் தமிழர் பேரவையின் கீழ் ஒன்றுபட்டுள்ள புலம்பெயர்ந்த தமிழராகிய நாம் இலங்கைத் தீவில் உயிர்வாழ்வதற்கு இன்னமும் அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் எமது உடன்பிறப்புகளுக்கு எம் பரிவையும் கூட்டொருமையையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றோம். அவர்களோடான எமது கூட்டொருமை, அக்கறை ஆகியவற்றின் சிறு அடையாளமாக வடகிழக்கில் இயங்குகின்ற நம்பகமிக்க அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக உள் ஊரில் இடம்பெயர்ந்த, சிறப்பாக ஆதரவற்ற சிறுவர், கைம்பெண்கள் போன்றோருக்கு நிதியுதவி வழங்கும் பணியை ஏற்கனவே நாம் தொடங்கியுள்ளோம். மறுசீரமைப்பும் இயல்பு வாழ்க்கை நிலையும் பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு வழங்கவேண்டிய பொறுப்பானது பாதிக்கப்பட்டோருக்குக்கான உதவி என்ற பெயரில் ஏராளமான நிதியுதவியைப் பெற்றுவரும் அரசுக்கே பெருமளவில் உரியதென்பதாலேயே சிறுஅடையாளமான உதவியெனக் குறிப்பிட்டுள்ளோம்.
பசி பட்டினியோடு அச்சமுற்றும் அச்சம் ஊட்டப்பட்டும் நாம் உள்ளோம். இன்றைய நிலையில் தமிழரது துயர துன்பங்களுக்கு முடிவு உண்டென்றால் அது எமது உண்மையான விடுதலையிலேயே தங்கியுள்ளது. எனவே இலங்கைத் தீவில் வாழுகின்ற எம் உடன்பிறப்புகளுக்கே எமது உண்மையான விடுதலைக்கான மூல அடிப்படைப் பொறுப்பு உள்ளது. ஆகையால் தம்வாக்குகளை இட்டு நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் போது தமிழரது விடுதலைக் குறிக்கோளுக்கு இரண்டகம் இழைக்கக்கூடிய பொய்யான அரசியல் தலைவர்களுக்கோ கட்சிகளுக்கோ ஆதரவு வழங்காது சிறீலங்காவிலும் வெளியேயும் வாழும் ஒட்டுமொத்தத் தமிழரது அடிப்படை வேட்கைகளில் பற்றுறுதியுடையோருக்கு ஆதரவு வழங்குமாறு நாம் பரிந்துரைத்து வலியுறுத்துகின்றோம்.
எமக்கு உள்ளார்ந்தமாக உள்ள தன்னாட்சி உரிமை, தமிழரது அடிப்படை வேட்கைகள், தமிழரது தேசியம், தாயகம், தன்னாட்சியுரிமை ஆகிய கோட்பாடுகளுக்குத் துணிவுடன் நிலைத்தியங்கக்கூடிய அரசியல் தலைவர்களையும் கட்சிகளையும் உலகத் தமிழர் பேரவையானது புலம்பெயர்ந்த தமிழரிடையுள்ள பல்வேறு வளங்களையும் திரட்டி ஆதரித்து அவர்களோடு சேர்ந்து பணியாற்றும்.
உலகத் தமிழர் பேரவை பற்றிய கூடுதல் தகவல்களைக் கீழே தரப்பட்டுள்ள எமது இணையத் தளத்திலிருந்து அறிந்து கொள்ளுமாறு வேண்டுகின்றேன்.
www.Globaltamilforum.org
உங்கள் உண்மையான
வண. எஸ் ஜெ. இமானுவேல்
தலைவர் – உலகத் தமிழர் பேரவை
10 மார்ச் 2010
தமிழ்வாதம்
ஆம்,ஒன்றுபடுவோம்.
எங்கள் கால்களில் எழுந்து நிற்போம்.
எங்கள் கழுத்துப் பட்டிகளுக்காக
எசமானர்களின் காலடியில் இருப்பதைத் தவிர்ப்போம்.
Thanga
உலகத்தமிழர் பேரவை என்ன? கிறீஸ்தவ கத்தோலிக்க பேரவை என்பது பொலவே இந்த தலைவரின் வண/இமானுவேல் என்பது உள்ளது. இது மற்றய சமயத்தை பின்பற்றுபவர்களிடம் ஒர சந்தேகத்தை எழுப்புகிறது இந்த தலைவர் தனது பெயரில் உள்ள படிப்பு பட்டங்களை போடுதை யாரும் எதிர்க்கமாட்டார்கள் ஆனால் தனது கத்தோலிக்க அடையாளத்தை புகுத்துவது தவறு இவர் இங்கே கத்தோலிக்க பாதிரிகளின் வியளயாட்டுக்கேதான் இந்த உலகத் தமிழர் பேரவை செயற்பட உள்ளது தெரிகிறது சொல்லப்போனால் இன்னுமொரு முள்ளிவாய்க்கால் வெட்ட அத்திவாரம் போடகிறார் இந்த பாதிரியார்.
அல்லது உலகத்தமிழர் பேரவை இந்து மதத்தலைவர் ஒருவரையும் சைவ மதத் தலைவர் ஒருவரையும் இஸ்லாமிய மதத் தலைவர் ஒருவரையும் கொண்ட பொது தலைமை உருவாக்கப்படல் வேண்டும் அல்லது வண என்ற சொல்லை எடுத்துவிட வேண்டும்.
NANTHA
வத்திக்கானினால் நியமனம் பெற்ற ஒருவர் தமிழர் பேரவைக்குத் தலைவர் என்பது வேடிக்கையான விடயம். இந்த பாதிரி வத்திக்கநிலுள்ள போப்பின் ஆணைகளை நிறைவேற்றுவாரா அல்லது “தமிழ்” பிரச்சனை என்று தமிழர்களுக்கு தலையில் “மிளகாய்” அரைப்பாரா என்பதை தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.
வத்திக்கானுக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம் என்று யாரவது சொன்னால் நல்லது!
thurai
இலங்கைத் தமிழரின் மேலாதிக்க மோகமே தமிழீழ விடுதலைக்கோசம். இதுவே ஈழ்த்தமிழரை அழிவிற்கு அழைத்துச் சென்றது. மண்ணயும், மக்களையும் நேசிக்காதவ்ர்களின் ஆயுதப்போராட்டமே இதுவரை நடந்தது.
புலத்தில் வாழும் தமிழர் புலிகளின் பிரச்சாரத்தினால்தாம் ஓர் பயங்கரவாதத்தை வளர்ப்பதை முற்றாகவே மறந்திருந்தனர். இதுவே இறுதியில் தமிழர்களிற்க்கு பேரழிவை விட்டுச் சென்றது.
ஆனால் இப்பயங்கரவாதிகளின் வாழ்வும் வளமும் உலகில் அழியவில்லை. இப்பயங்கரவாதத்தை முன்னின்றும் பின்னின்றும் மறைமுகமாக்வும் வழிநடத்தியவர்களின் கூட்டமைப்பே உலகத் தமிழர் பேரவை. இவர்கள் இலங்கைத் தமிழர்களின் விடிவிற்கு என பேச்சிலும், செயலலில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளிலுமே ஈடுபடுகின்றார்கள்.
புலம் பெயர்நாடுகளில் ஈழப்பயங்கரவாதிகள் (விடுதலைப்போர் நடத்தியவர்கள்) சிறையிலிருக்க இவர்களைப் பற்ரி ஒரு வார்த்தை பேசாத உலகத் தமிழர் பேரவையும் அதன் தலைவருமா ஈழத்தமிழர் துயர் துடைக்கப் போகின்றார்கள்? புலத்தில் வாழும் தமிழரை பசுத்தோல் போர்த்து திரும்பவும்
பசி தீர்க்க வரும் புலிகளே இவர்கள்.
துரை
chandran.raja
//சைவமத தலைவர் ஒருவரையும் இஸ்லாமியத் மதலைவர் ஒருவரையும் கொண்ட பொது தலைமை உருவாக்கப்படல் வேண்டும்.// தங்கன்.
தங்கன்! உங்கள் முன்மொழிவுக்கு எனது பாராட்டுகளை தெரிவிப்பதுமல்லாமல் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
தமிழ்வாதம்
ஒடுக்கப்பட்ட இனத்தின் தலைமை என்பது அதற்குள் இருந்து வெளிவருவதுதான். அந்தத் தலைமை நேர்மை, உண்மை,திறமை,தியாகம் என்பவற்றைக் கொண்டிருக்க வேண்டுமே தவிர அதன் உட்பிரிவுகளை சமரசப்படுத்தல் என்கிற வெறிச் சிந்தனைகளுக்காகவல்ல.
Rohan
தங்கா //சைவமத தலைவர் ஒருவரையும் இஸ்லாமியத் மதலைவர் ஒருவரையும் கொண்ட பொது தலைமை உருவாக்கப்படல் வேண்டும்.// சந்திரன் ராஜா //உங்கள் முன்மொழிவுக்கு எனது பாராட்டுகளை தெரிவிப்பதுமல்லாமல் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.//
சமயத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? முதலில், கடவுள் நம்பிக்கை இல்லாத பல லட்சம் தமிழர்களுக்காக ஒரு பிரதிநிதியும் கூட்டுத் தலைமைக்குச் சேர்க்கப்பட வேண்டும் என்பதை சந்திரன் ராஜாவின் பரந்த உள்ளம் பார்க்கத் தவறியிருக்கிறது!
பல தேசங்களிலிருந்து வரும் தமிழ் அமைப்புகள் உலகத் தமிழர் பேரவை என ஒன்றிணைந்து இயங்க முன்வந்திருப்பது நல்ல விடயம் என்பது என் கருத்து.
கூட்டுத் தலைமை என்பது ஒரு முறையற்ற திட்டம். தன்னை நம்பி வருபவர்களுக்கு வழி காட்டும் பொறுப்பும் நன்றோ தீதோ அதைத் தனது பெயரில் ஏற்றுக் கொள்வதும் தலைமை ஏற்பவனின் கடமை. திருவிழாவில் உபயகாரர் எல்லோருக்கும் தர்ப்பை போடுவது போல ஒரு ‘சில்லறை’ விடயம் அல்ல இது.
வண இம்மானுவேல் இப்பதவிக்குப் பொருத்தமானவர் தானா என்ற கேள்வி உலகத் தமிழர் பேரவையின் தமிழ் அமைப்புகள் மத்தியில் இருந்து வருவதை விடயம் அறிந்தோர் அறிவர். இது சமயம் சார்ந்த கேள்வி அல்ல – முன்னர் பகிரங்கமாக புலிகளை ஆதரித்த வரை இப்படி முன்னே விடுவது எந்த அளவுக்குச் சரி என்பதே கேள்வி.
முன்னர் தலைவராக இருந்த கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் ஏன் பதவி விலகினார் என நான் அறியேன். ஆனால், அவருக்கு இன்னமும் இலங்கைத் தொடர்புகளும் அங்கு போய் வரும் தேவைகளும் இருப்பதே காரணம் என்று ஒரு வதந்தி உண்டு.
இந்த ‘வண’ போடுவதில் என்ன பிரச்சனை உள்ளது என்று எனக்குத் தெரியவில்லை. போடாமல் விட்டால் தான், ‘பாதிரிகள் வத்திக்கான் அடையாளங்களை மறைத்து விட்டு வருகிறார்கள்’ என்றதுக்கு வழி வகுக்கும். உலகத் தமிழர் பேரவையின் மலருக்குச் செய்தி வழங்கியுள்ள புத்த குருவும் தனது அடையாளங்களைப் போட்டுத் தான் இருக்கிறார்.
இப்படி எல்லாவற்றிலும் பிழை பிடித்துக் கொண்டு தம்மால் முடிந்த எதையாவது இந்த சபிக்கப்பட்ட தமிழ் இனத்துக்குச் செய்யலாம் என்று வருபவர்களையும் திசை திருப்பி தமிழர்கள் படுகுழியிலேயே தொடர்ந்து இருப்பட்கை உறுதி செய்வோமாக!
Ajith
“ஒன்றாய்ச் சேர்தல் தொடக்கம்: ஒன்றாய் இருத்தல் முன்னேற்றம்: ஒன்றாய்ச் செயற்படுதலே வெற்றி” இம்மடல் தங்கள் கைகளை நலமாக வந்தடையுமென நம்புகின்றேன்.
The unity is the great thing to achieve anything. We should understand that there are always going to be barriers to face to bring the unity. People are united and clear about what they want. From the experience of past 60 years under Sinhala fascist rule,people of North-East of Sri Lanka clearly expressed that united Sri Lanka under Sinhala rule is not acceptable for them irrespective of any relegion or regional differences. The main struggle today is to bring unity among different institutions and groups that are working towards the same vision. We should understand that there are groups and organisations sponsored by Sinhala regimes work very actively to distrupt the unity of tamils.
thurai
இலங்கை அரசாங்கம் துரோகிகளிற்குப் பண்ம் கொடுக்கின்றார்கள் அவர்கள் மூலம் தமிழரின் ஒற்றுமையை குலைக்கின்றார்கள் என்பது சிலரின் கருத்து.
தமிழரின் விடுதலைக்கு என தமிழரைப் பயமுறுத்தி வாங்கிய பணத்தில் சுக போக வாழ்வும், உலகில் பெரும் முதலீடுகழும் செய்து வாழும் தமிழினத் துரோகிகளை உலகத் தமிழர் பேரவை இன்னும் அறியவில்லையா? அல்லது உலகத் தமிழர் பேரவைதான் இத்தகைய துரோகிகளின்
புகலிடமா?
முன்பு ஒரு பிரபாகரனை தலைவ்ர், தலைவரெனக் காட்டிய புலத்தில் வாழும் புலிகள் எங்கே? இவர்களில் ஒருவ்ராவது உலகத் தமிழர் பேரவைக்கு தலைமை தாங்க பின்னிற்பது எதற்கு? இப்போ கத்தோலிக்கர் ஒருவரை முன் வைப்பது ஈழ்த்தமிழரை ஏமாற்ரியதுபோல் உலகத்தை ஏமாற்ரவேயாகும்.
தமிழர், விடுதலை, உருமை இவைகளைப் பற்ரிப் பேசுபவர்களிடையேதான் தமிழரின் எதிரிகழும் வாழ்கின்றார்கள். சிங்களவ்ருடன் மட்டுமல்ல.
துரை
palli
சில பாடல்வரிகளை இசை விளுங்கி விடுவதாக பாடல் ஆசிரியர்கள் குறை கூறுவது உண்டு,
மாயா
இது போன்ற அறிக்கைகள், தொடர்வதும் நல்லதுதான். இவை இலங்கை அரசை இலங்கையில் வாழும் மக்களது பிரச்சனைகளுக்கு சில தீர்வுகளைக் கொண்டு வர வைக்கும். இப்போது, இலங்கையில் உள்ள பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகள் , தமது கதிரையை தக்க வைக்க முயல்கின்றனர். இன்னும் சிலர் வாக்குகளை சிதைக்க முயல்கின்றனர். சிலர் வெளிநாடுகளில் இருந்து இலங்கை சென்று கலர் காட்ட முயல்கின்றனர்.
சில நாட்களுக்கு முன், இந்தியாவில் இருந்து வன்னியில் உள்ள மல்லாவி வீட்டை பார்க்க ஒரு குடும்பம் சென்றது. அங்கு போவது ஆபத்தில்லையா? என்று அவரது உறவினர் ஒருவர் என்னிடம் கேட்டார். சரியான ஆவணங்களோடு செல்லுங்கள். முறையான அனுமதிகளை பெற்றுச் செல்லுங்கள். ஏதாவது பிரச்சனையென்றால் தொடர்பு கொள்ளுங்கள் என்றேன்.
அவர்கள் கொழும்புக்கு போன அடுத்த நாள், வவுனியா சென்று மல்லாவி செல்வதற்கான அனுமதி மற்றும் ஆவணங்களை பெற்றுக் கொண்டு, மல்லாவி சென்றவர்கள் முதலில் மல்லாவியில் ஒரு பாடசாலையில் தங்க வைக்கப்பட்டனர். உடனே என்னோடு பேசிய உறவு என்னோடு தர்க்கம் செய்யத் தொடங்கினார். ” பஸ் போகுது , எல்லாரும் எழுந்தமானமாக போய் வருகினம் என்றாங்க. இப்ப அவங்க ஆமி கட்டுப்பாட்டில பள்ளிக் கூடத்தில நிக்கினம்? இப்ப என்ன சொல்கிறீர்?” என்றார்.
போனவர்களிடம் கைத் தொலைபேசி இருந்தது. நான் தொடர்பு கொள்ள முயன்றேன். முடியவில்லை. இலங்கை அதிகாரி ஒருவரோடு பேசினேன். “வருவோர் யார் என அடையாளம் காண இந்த நடைமுறை. 1-2 நாட்கள் சிலருக்கு ஏற்படலாம்” என்றார். சரி, ஏதாவது என்றால் தொடர்பு கொள்வதாக சொன்னேன். அடுத்த சில நிமிடங்களில் மல்லாவி போனவர்கள் என்னோடு கதைத்தார்கள். “நாங்கள், வீட்டுக்கு வந்து , பால் காச்சிக் கொண்டிருக்கிறம். எங்கட வீட்டுக்கு ஒரு சேதமுமில்லை. ஆனால் கூரை – கதவுகளை கழட்டிக் கொண்டு போயிருக்கிறாங்கள்.” என்றார் அங்கு போன பெரியவர். யார் என்று கேட்டேன். “வேற ஆரு , புலிகள்தான்.” என்றவர் ” தொண்டமானை சுட்டுட்டாங்களாமே?” என்றார். இல்லை , அவர் இருந்த இடத்தை நோக்கிச் சுட்டிருக்கிறார்கள். யாருக்கும் எதுவும் நடக்கவில்லை என்றேன். “ஆக்களைக் கொல்லுறதால, என்ன நடக்கப் போகுது?” என்றார் அவர். அதைத்தானே காலா காலமாக எல்லாரும் செய்தாங்க என்றேன். அவர் பக்கத்தில் மெளனம் நிலவியது. மெளனத்தை கலைத்த அவர் மேலும் சொன்னார் , வீட்டை திருத்த இராணுவம் பண உதவி தந்து உதவுவதாகவும், தம் அயலவர்களில் பலர் , ஏற்கனவே முகாமிலிருந்து அங்கு வந்து விட்டனர் என்றும், அவர்கள் தம்மை சந்திக்க பாடசாலைக்கு வந்து உணவுகளைள கொண்டு வந்தததாகவும் சொன்னார்.
இங்கே நமக்கு சில விடயங்கள் தெளிவாகின்றன. மக்கள் சுதந்திரமாக தம் மண்ணை தரிசிக்கும் சந்தர்ப்பம் உருவாகி வருகிறது. அங்கு மக்கள் குடியேறி இருக்கின்றனர். பிரச்சனையற்றவர்கள் , அங்கு போய் வரலாம். வெளிச் செய்திகளை உடனே அறியக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இவை 35 வருடங்களுக்கு பின் ஒரு வருடத்துக்குள் ஏற்பட்டுள்ள மாற்றம். வன்னி , விண்ணைத் தொடும் மாற்றத்தோடு மாறுதலடையும் போல இருக்கிறது. ஒரு பல்கலைக் கழகம் மற்றும் ஆசிரியர் பயிற்றுவிப்பு நிலையம் என்று பல முன்னெடுப்புகளுக்கு , அரசு கோடு கீறியுள்ளது. இவை விரைவில் சித்திரமாக வேண்டும். காயங்கள் உடனே மாறாது, இருந்தாலும் காட்சிகளாவது மாற வேண்டும்.
இது CNN தந்துள்ள செய்தி:
http://www.cnn.com/2010/WORLD/asiapcf/03/12/sri.lanka.war.survivor/index.html
Thanga
March 11, 2010 OPEN LETTER to
Rev. Fr. S.J. Emmanuel
Leader, Global Tamil Forum (GTF)
Germany.
Dear S.J. Emmanuel:
You Tamil Roman Catholics wearing God’s black cloth with white collars starched towards heaven have confused me immensely. Then, I am a Buddhist and have difficulty to understand you guys anyway who believed that the Tamils in Sri Lanka, especially in the North and East are the only children of God and the rest could be spared and blown to smithereens for the Tamils to live and enjoy the fruits of Sri Lanka’s kabook earth and live happily ever after.
Once upon a time not too long ago, I had to deal with two Tamil Roman Catholics of the cloth like you, one in Ottawa and another who was once a Roman Catholic priest living in Montreal and who later migrated to Toronto, and I identified both of them as “frauds”. This is what I told the former Roman Catholic rascal in Toronto in one of my letters –
“You know, when you talk of the Sinhalese, you also talk of me, because I am a Sinhalese. I will not ask you to tell the truth, but I demand that you tell the truth to your congregation. Like how on 25th January 1998, your friends and my enemies, the Tamil Tigers attacked and destroyed my most revered Buddhist place of worship, the Dalada Maligawa. Or are you so dishonest not to tell your congregation of this unholy aberration?
And as a Christian Church decreed Canon’s act of penance, you ought to admit to your congregation that you are shamed by this unforgivable and an unchristian act. Here is where you acted like a little-turd- in-a-white- collar when you told the congregation, “For the last several years series of oppressive governments triggered tsunamis after tsunamis that killed more than 60,000 Tamils, and we lost more than 17,000 freedom fighters.” You know that you are a GODdamn liar. That two-thirds of the 60,000 deaths happened to be of innocent unarmed Sinhalese, pregnant women, mothers and infants massacred with their throats slashed during indigo-dark mornings while they were asleep by your “Tamil freedom fighters”…………You disgust me that you used the pulpit and catholic prayer time to spew hatred towards my people, the Sinhalese. And that is unfortunate. Your sincerity and piety lacks the divine honesty when you said to the congregation, “Let us for these few moments share their agony and poignancy.” When your heart is filled and awash with venom towards my brothers and sisters, the Sinhalese, it would be incapable of filling with pain and tears for the lack of genuine Christian humility and space.” And I ended my letter to this Roman Catholic rascal-priest, “Let me end this note to you by saying, “My Tamil friend, it is Hell that will be shown to you by your GOD to cleanse your lying spirit that has devoured your heart since July 1983, before he would hold your hand to make you free. Amen!” That is exactly what I told your Tamil-man in God’s cloth, Emmanuel.
Now let me come back to the famous Reverend Father S.J. Emmanuel who has embarked on a journey to lead the world astray together with other Tamils calling themselves the Global Tamil Forum (GTF) to stand guard on the 3.9 per cent Tamils living in Sri Lanka out of the 12.6 per cent who were there in 1983. The rest, over a million of them flew out of the koha’s nest like you, searching for greener pastures. And it seems that you landed in Germany and now taken the title of “God’s Humbug” to gather all Tamil Tiger front groups around the world and calling yourselves Global Tamil Forum with a mission to destroy Sri Lanka.
This is the sovereign island nation that embraced and nurtured every one of your Tamil Mothers in the community of the most privileged minority to nourish you all with their breast-milk for your sustenance. All of you at GTF who want to destroy Sri Lanka were fed with food which were grown from its soil and Sri Lanka watched you all grow hoping that one day you all will love and care for the land that fed you. And let me remind all of you at GTF who want to destroy Sri Lanka that this is the island that provided everyone of you with a free education from the kindergarten up to University so that each one of you will grow up to become productive citizens and the pride of Sri Lanka.
But soon what Sri Lanka found out was that the Tamil children that she fed and taught and watched growing up were step-children of hers as no sooner the July 1983 riots happened, all you separatist Tamils looked up North with your palms together and with bended knees begged your real “Mother India please help us.” And so she did, training you Tamils in her camps to become gun totting ruthless terrorists to kill my innocent Sinhalese people; flew Mirage 2000s to scare the jeepers out of the Sri Lankan Government officials to force them to sign the Indo-Lanka Accord in favour of you Tamilians. Right, Emmanuel? Then you bit the hand that trained, covered your nakedness with military fatigues and fed you all when you killed Rajiv Gandhi, Mother India’s son and your real brother. Didn’t you Emmanuel! Aren’t you a bunch of dumb Do-Dos! And who said that you guys were smart?
You know Emmanuel, you might want to spit your lies and half truths about Sri Lanka and its non-Tamil peoples who are living there, but the fact is even if you buy the Tamils who decided to stay back one way plane tickets to Hamburg, Frankfurt, Munich and Dusseldorf to join you the Great Saviour of the Tamils, my hunch is that none of them will get on that plane not wanting to leave their homes, Sinhalese friends and the accumulated semboos of gold coins, as they are happy living in Sri Lanka becoming millionaires through their retail businesses, being lawyers, doctors, politicians, kovil poosaries and thosai boutique owners; and their ladies refusing to give up their freedom to happily walk the streets with crimson thumbprints between their eye-brows, dripping in gold and wrapped in gold threaded Kashmir saris. Why should they get to Frankfurt or London or Toronto for that matter as they are having it good in Sri Lanka. Perhaps the best times of their lives. Having being the privileged minority for over a century, you Tamils always had it good, Emmanuel. And that is a damn fact, and you jolly well know it too because you had it good with a free education that prepared you to become a man of the cloth. – the Roman Catholic Vicar General of Jaffna who was given a skull cap to wear and a white collar starched towards heaven.
So why embark on this journey of fraudulent lies Emmanuel? And most of you refugee Tamils have given up your allegiances to Sri Lanka anyway, other than wanting to fly back to Sri Lanka once a year and replenish your lost tans sunning under the Jaffna or the Killinochchi sun sipping a coconut shell full of toddy through a straw.
I understand that you have now walked into the gum-boots of your ‘Sun God’ Prabhakaran who was killed in battle wanting to own an ambitious patch of land exclusively for Tamils. Did you not compare your Prabha-man to “Jesus Christ” during an interview by a journalist from the British INDEPENDENT newspaper? You must be out of your mind, Emmanuel to compare Jesus Christ, the Great Redeemer, a man of love and compassion venerated by millions around the world, to Prabhakaran this ruthless megalomaniac. What kind a Vicar General of the Roman Catholic Church are you?
Emmanuel, so you also want your patch of kabook acres in the North and East of Sri Lanka, that Prabhakaran tried to acquire by shooting bullets and was shot dead with the rest of his foolish minions carrying Kalashnikovs? I know that fools are born every minute of the day, and I am sorry to say that you happen to be one of them. A Dreamer who spin yarns in the sky when you have nothing productive to do, and counting bullets when you roll around the bed to sleep at night when your conscious keeps pinching you saying, “why try to claim a patch of land in Sri Lanka when you got whole acres of land in Tamil Nadu which Karunanidi will sell you for a paisa and make it a home for yourself and your herd of separatist Tamils, and claim your right to call yourself the Roman Catholic Archbishop of the Kingdom of Eelam in Tamil Nadu.” Think about it Emmanuel.
In my search to find out who this new saviour of the Sri Lankan northern and eastern Tamils Emmanuel is, I found out that this man is another of the Roman Catholic God’s wicked Tamil creations of a heartless God Damn Liar who is out to destroy my Sinhalese people.
Emmanuel the fact is that you are not the only Roman Catholic God’s wicked Tamil creation who is out to get the Sinhalese by supporting the Tamil Tigers who for 27 years had been snuffing out innocent Sinhalese lives in the thousands. It is no secret that the LTTE had and still are backed by the Roman Catholic Church as part of the neo-colonial conspiracy to destroy the Sinhalese people and the unitary state of Sri Lanka while you Fr. S.J. Emmanuel the former Vicar General of Jaffna is the prime mover and shaker. And the Bishop of Mannar Rayappu Joseph, the Bishop of Jaffna Savundranayagam and the Bishop of Batticaloa Kingsley Swamipillai too exerted the influence of the Tamil Tigers and bought the foreign support by bribing them with the millions of dollars extorted from your own Tamil people living abroad.
This was the observation that even S.N. Dixit, the former High Commissioner for India too made. In his book Assignment Colombo, on page 228 he says “…what was fascinating was that the Tamil Catholic Clergy kept arguing in favour of the LTTE throughout my tenure in Sri Lanka…”
The Roman Catholic Bishop of Jaffna said in an article in the Asia Week (21 November 1997) that, “…The Tamils have fought for the right to be equal citizens. And the LTTE has been in the forefront of this…” So Emmanuel, your Roman Catholic sick logic is that for you to claim the “right to be equal citizens”, you rascals kill and take away the rights of my people, the innocent Sinhalese who too want to be equal citizens of Sri Lanka. That Roman Catholic logic is sick Emmanuel. No Roman Catholic God with a compassionate heart can justify your brutality. It is as simple as that.
Watching you debate Douglas Wickramaratne on SKY NEWS, you certainly engaged me to march down the war path to meet your vicious propaganda against the Sri Lankan government, because you were spewing lies like a fire belching dragon and I got the shield of facts to stop your scorching the Sinhalese people and me along the way.
What really got my goat was when you spewed the lies of the Government using chemical weapons to kill your people. That was a load of bull Emmanuel. I know you and your Tamil Roman Catholic Bishops are still smarting unable to digest the humiliating defeat of the Tamil Tigers in combat at the hands of Sri Lanka’s security forces which was touted as an unwinnable war. But that doesn’t mean that you have to humiliate yourself further by lying about the Armed forces using chemical weapons when your Tamil Tigers were planning as well as used chemical weapons in this war. Here’s the truth my ‘Holy Humbug’.
The first recorded incident that your Tamil Tigers were involved in chemical warfare dates back to 1989 when you all poisoned the rival Council of the Eelam People’s Revolutionary Liberation Front ((EPRLF) lacing their food with cyanide, And in the early 1990s several additional incidents were reported involving the use of cyanide poisoned knives, booby-traps and food. And the most important event was the use of chlorine gas canisters in a June 1990 attack on a military camp and two attacks against military outposts using chemical containing mortar shells in 1995.
On August 12, 2007, the Sri Lankan police arrested several Tamil smugglers at a checkpoint in Anuradhapura, having failed to bribe local officials to allow them to proceed on their journey. The arrested smugglers were found to be driving a dump truck carrying 3,600 liters (approximately 951 gallons) of sulfuric acid. What the police found was that the sulphuric acid was not to make cocktail shandies mixed with the best Palmyra toddy for Prabhakaran, Pottu Amman, Tamil Chlevam, Soosai, Nadesan and the crowd after a thosai clout, but intended to be used in their underground toxicology laboratory in the Wanni making chemical weapons to stun the armed forces. These are the facts my white-collared Holy Humbug and let’s not come up with your unholy crap.
It was your Anton Balasingham who with untold arrogance announced that they were manufacturing “special weapons” in a toxicology laboratory hidden in the jungles of Wanni to get the armed forces.
Professor Peter Chalk of Queensland University later attached to the Rand Corporation as an expert on terrorism told an audience in Melbourne that the Tamil Tigers are the first known terrorist group to use chemical weapons. He said that the Tigers fired a “chemical weapon” into an army camp in one of its early offensives. Ironically it backfired because the winds brought most of it back and deposited the chemicals on the Tamil Tiger side choking them.
Remember, how your Anton Balasingham informed groups raising funds in the UK that the Tamil Tigers are now armed with a “special weapon” to launch the next major assault on Jaffna. He said any major offensive against Jaffna was bound to cost the Tigers heavily in manpower and their new strategy was to use the “special weapon” that would immobilize the Sri Lankan forces before a counter-offensive could be launched to attack their Tamil Tigers. The Tamil Tigers objective was to use these chemical weapons to minimize losses to their cadres.
Those are the facts my good Holy-Humbug. Where has your arrogant gumption gone Emmanuel? You have now shifted your gears into auto-drive to tell the world that you are now operating under the title that you have managed to acquire, – The “God’s Humbug”. I will tell you this much Emmanuel, it won’t be that easy, as I have cursed – Pox on all you lot at GTF for wanting to destroy the unitary status of Sri Lanka and my people, the precious Sinhalese of all denominations.
I live in Ottawa, Canada, and your people know where I live and my telephone number as well as they have of lately been phoning me to have a dialogue in filth and I have polished my vocabulary well to respond to them in the language they are familiar with. They seem surprised that I did know that language of “filth” and was quite fluent too, which I picked up from my Tamil school mates when I was attending Vaddukkodai Maha Vidyalayam. Emmanuel, one subject taught in that school’s curriculum was filth to retort at the Sinhalese community. Were you aware of that? You know what Emmanuel, these phantom sons-of-bitches soon put the phone down no sooner they hear their lingo been spoken. They neither can take facts pertaining to this Eelam issue kindly nor can they accept a response to them using their bastard- lingo. That’s what your Tamil separatist people are, gutless and spineless phone-phantom nincompoops. You bet, I will keep my alma mater, Vaddukkodai Maha Vidyalayam flag flying with added vigour having polished the lingo that you Tamils understand when you all phone me. By the way Emmanuel, you may know the Master who taught that class-of-filth at the Vaddukkodai Maha Vidyalayam. He too was a Roman Catholic priest like you, Fr. Ravi Sivarajah from Vavuniya.
Emmanuel, I am prepared to meet you down the road toe to toe unless you revert to the sublime teachings of Christianity of peace and reconciliation. Until you stop using the old Judaic rallying cry of “Let my people go”. Until I, a Buddhist, feel that you are worthy of wearing the Roman Catholic black cassock, a white collar starched towards heaven and a skull cap, and worthy of a preacher of the Christian doctrine which in its purity I will bow down to with deep reverence.
So remember my name Fr. S.J. Emmanuael. It’s A-s-o-k-a W-e-e-r-a-s- I-n-g-h-e, and I live in Ottawa, Canada. The bottom line is, the Roman Catholic you, nor your Global Tamil Forum will do nothing to hurt my people, the Sinhalese. Absolutely nothing and I hope that message has penetrated into your skull-capped skull and the Tamil Roman Catholic Bishops too who believe that they have the God given right to use the Church pulpit as their own political forum to growl a cornucopia of lies about the Sri Lankan government and the island’s majority Sinhalese to win the sympathetic hearts of their congregation. I hope that is clear.
Sincerely,
Asoka Weerasinghe
palli
// இப்போ கத்தோலிக்கர் ஒருவரை முன் வைப்பது ஈழ்த்தமிழரை ஏமாற்ரியதுபோல் உலகத்தை ஏமாற்ரவேயாகும்.//
பலர் புரிந்து கொள்ளாத உன்மை; ஆனாலும் இதுவே உன்மை; இதை இப்படியும் சொல்லலாம் நம்ம வீட்டுபிள்ளை தப்பு செய்யாது ஆனால் கூடவந்தவந்தான் இவனையும் கெடுத்து விட்டதாக சொல்வார்களே சில பெற்றோர்கள். அதுபோல்தான் இதுவும் நாம் அனைவரும் உத்தமர்; ஆனால் தலமை தாங்குவதால் சிலர் மட்டும் சின்ன பிள்ளைகள்.
மாயா
இதெல்லாம், புலிகளோடு இருந்து வறுகிய இந்துக்களை காப்பாற்றி வணபிதா இல்லை வனபிதா சிலுவை ஏறுவதற்கு சமம். அவர் சிலுவை மரத்தில் தொங்கினால் மகிழலாம். ஆனால், சிலுவையை நம்பியவர்கள்தான் பாவம். முடிந்தால் வனபிதாவின் அங்கியை கழட்ட முயற்சி செய்யுங்கள்.
Kusumpu
பல்லி! //சில பாடல்வரிகளை இசை விளுங்கி விடுவதாக பாடல் ஆசிரியர்கள் குறை கூறுவது உண்டு/
உதை இப்படியும் சொல்லலாம். உந்தப் பின்னணிகள் எல்லாம் முன்னணிக்கு வந்தால் பாட்டு மட்டுமா கேட்காது பாட்டாளியின் குரலும் கேட்காது.
Suman
அன்பான உடன்பிறப்புக்களே எனும் போது அம்பான உடன் அறுப்புக்களே என்று விளங்கிக் கொள்வது அவசியம்.
//ஒன்றாய்ச் சேர்தல் தொடக்கம்: ஒன்றாய் இருத்தல் முன்னேற்றம்: ஒன்றாய்ச் செயற்படுதலே வெற்றி// இதைக் கிறிஸ்தவன் சொல்லக்கூடது. பிரிந்து போய் மதம்மாறி வெள்ளையனுக்கு அடியாளாகி தன் சொந்த கலைகலாச்சாரங்களை விற்று இன்று நாடுமின்றி ஊருமின்றி தமிழ்மக்கள் திரிவதற்கு அடிகோலியவர்கள் கிறிஸ்தவர்களே. பிரிவினையின் ஆரம்பமே கிறிஸ்தவத்தில் தானே ஆரம்பமாகிறது. ஒரு பைபிளை வைத்துக் கொண்டு கோடிக்கணத்தின் பிரிந்து திரிவது எந்தமதம்? ஒரு பைபிளை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள் கோடிக்கணக்கிலுள்ள மக்களை எப்படி விளங்கிக் கொள்வார்கள்.பிரிவினையின் உடன்பிறப்புக்களே பைபிளைக் காவுகிறவர்கள்தான்.
Rohan
சுமன் //இதைக் கிறிஸ்தவன் சொல்லக்கூடது. பிரிந்து போய் மதம்மாறி வெள்ளையனுக்கு அடியாளாகி தன் சொந்த கலைகலாச்சாரங்களை விற்று இன்று நாடுமின்றி ஊருமின்றி தமிழ்மக்கள் திரிவதற்கு அடிகோலியவர்கள் கிறிஸ்தவர்களே. //
இந்தக் கிறிஸ்தவன் மட்டும் இல்லாவிட்டால்,நாம் இன்னமும் கோவணம் கட்டிக் கொண்டு கீழ்ச் சாதிகளை அடிமை குடிமையாக வைத்துக் கொண்டு குறுநில மன்னர்களாகக் கோலோச்சியிருக்கலாம்! Damn!!
Ajith
Mr Asoka Weerasinghe,
It was a very long comment about LTTE and Tamil Christiann. I don’t thing you are a real buddhist. I understand your anger about LTTE attack on Dalada Maligawa . Unfortunately, it is the place from where the real buddhist terrorism started. I think you can remember in 1958, a Sinhala buddhist monk assasinated the father of Sri Lanka Late SWRD Bandarainaiaka for signing an agreement to give some rights to tamils. Did you all stop with that. You drag the tamil people including pregnant women, childred, elders from the houses to the streets, put the petrol in their bodies and burnt them. Just think Buddha’s teachings of love and tolerance and compare with sinhala buddhists blood thirsty murders. It is you so called buddhists killed buddha.
Just I am quoting one sentence below
“This is what I told the former Roman Catholic rascal in Toronto in one of my letters”
I am not going to call you a “bloodthirsty Sinhala rascal” because that is the culture you were brought up.
Do you know that I lost my loving father and mother in the hands of Sinhala buddhists. Just imagine how many children lost their parents to the brutality of Sinhala criminals ( I won’t call you as buddhists because you all killed buddha). Did you stop with 1958? No, you continued and it continues. What a pathetic situation in Sri Lanka today. It is not only tamils lost freedom but true sinhalese, including the Mahanayaha Thero’s of Asgiriya also lost their freedom. They can’t have a conference in the so called Dalada Maligawa. A group of Sinhala buddhists are threatened to bomb Dalatha Maligawa. Why you are not worried about that? Buddhist priests are not asking to give rights to the tamils but asking the rights of a man who fought against tamils and killed over 40,000 innocent tamils inside Mullivaygal and put 300,000 innocent tamils in a detention camps. Do you know how many temples, churchs, schools were destoyed by Sinhala criminals since 1958.
The truth is that the origin of terrorim against tamils and sinhalese are from Dalada Maligawa.
BC
//Rohan- இந்தக் கிறிஸ்தவன் மட்டும் இல்லாவிட்டால்,நாம் இன்னமும் கோவணம் கட்டிக் கொண்டு….//
நீங்கள் அந்த ஸ்டைலான மதத்திற்க்கு மாறிவிட்டவர் என்று நினைக்கிறேன்.
Ajith
பிரிந்து போய் மதம்மாறி வெள்ளையனுக்கு அடியாளாகி தன் சொந்த கலைகலாச்சாரங்களை விற்று இன்று நாடுமின்றி ஊருமின்றி தமிழ்மக்கள் திரிவதற்கு அடிகோலியவர்கள் கிறிஸ்தவர்களே. பிரிவினையின் ஆரம்பமே கிறிஸ்தவத்தில் தானே ஆரம்பமாகிறது. ஒரு பைபிளை வைத்துக் கொண்டு கோடிக்கணத்தின் பிரிந்து திரிவது எந்தமதம்? ஒரு பைபிளை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள் கோடிக்கணக்கிலுள்ள மக்களை எப்படி விளங்கிக் கொள்வார்கள்.பிரிவினையின் உடன்பிறப்புக்களே பைபிளைக் காவுகிறவர்கள்தான்.
Suman,
It is absolutely disgusting. You cannot escape your responsibility by critising others. You should accept the fact that is the brutality of the Hindus and Buddhists (originated from India) which denied the livelihood of the those tamils in the name caste is the primary reason for tamils and sinhalese changing into Christianity and Islam. I am not a Christian but humanity is important for every one. It may be wrong converting people from one relegion to another but that does not mean you have the right to critisise those who changed the relegion. It is a choice they made. The fundamental problem with you all that your personality and attitude towards people. You all are happy to criticise others but never critise yourself for your mistake. What you are going to achieve by creating hatredness against a Christian or Islamist or Buddhist or Hindu? It is upto the GTF to decide on its leadership. If you don’t agree with the GTF, put your proposals or suggestions and facts in front of people to make a choice.Don’t hide under the fence and throw the stones whoever pass that route.
Rohan
//இந்தக் கிறிஸ்தவன் மட்டும் இல்லாவிட்டால்,நாம் இன்னமும் கோவணம் கட்டிக் கொண்டு….//
//நீங்கள் அந்த ஸ்டைலான மதத்திற்க்கு மாறிவிட்டவர் என்று நினைக்கிறேன்.//
நாங்கள் சரி வர மாட்டோம். உண்மை தெரிகிறதோ இல்லையோ, மற்றவர் மேல் judgement passபண்ணிக்கொண்டிருப்போம்.
underwear போட்டு pantsஉம் போடுவது style மதம் என்றால் அந்த மதத்திற்குநானும் எப்போதோ மாறியாயிற்று.
எனக்கு இந்து மதம் என்ற கோட்பாட்டிலெல்லாம் கரிசனை கிடையாது.நான் பிறப்பால் சைவ சமயத்தவன். முடிந்த அளவுக்கு எனக்குத் தெரிந்த சைவ சமயக் கோட்பாடுகளுக்குள் வாழ முயன்று வருகிறேன்.
palli
கோழி கூவிச்சாம் அதனால் பொழுது விச்சிச்சாம்; உன்மையில் கோழி கூவியதாலா? அல்லது விடியும்போது கோழியும் கூவிச்சா?
சுமன் விடை தேடுங்கள். கிடைக்கும் ஏதாவது??