ஏப்ரல் மாதத்தின் ஓய்வூதியப் பணம் (ஏப்ரல்) ஆறாம் திகதி வழங்கப்படும். ஓய்வூதிய திணைக்களத்தின் முந்திய அறிவிப்பின் பிரகாரம் ஏப்ரல் மாதம் எட்டாம் திகதியே ஓய்வூதியப் பணம் வழங்கப்படவிருந்தது. ஏப்ரல் 8ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அம்மாதத்துக்கான ஓய்வூதியச் சம்பளம் 6ம் திகதி வழங்கப்படும் என ஓய்வூதியத் திணைக்களம் மாற்றியமைத்துள்ளது.