மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் செல்வதற்கும் சென்னையிலுள்ள தனது மகளான ஜெகதீஸ்வரி மதியாபரணனுடன் வாழ்வதற்கும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை அனுமதிகோரக்கூடும் என்று அவரின் உறவினரும் முன்னாள் எம்.பி.யுமான சிவாஜிலிங்கம் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 10 வருடங்களாகப் பக்கவாதத்தால் பார்வதி (79 வயது) பீடிக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் அவர் கனடாவுக்குச் சென்று அங்குள்ள அவரின் மகள் விநோதினி இராஜேந்திரனுடன் வசிப்பதற்கான முயற்சி தோல்வியடையக்கூடும் எனவும் சிவாஜிலிங்கம் எக்ஸ்பிரஸ் செய்திச் சேவைக்கு சனிக்கிழமை கூறியுள்ளார். மருத்துவக் காரணங்களுக்காக கனடிய அதிகாரிகள் விண்ணப்பங்களை நிராகரிப்பது தெரிந்தவொன்றே என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன்,நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அனுமதி வழங்குவதைத் தாமதப்படுத்துவது அறிந்த விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தின் தடுப்புக் காவலில் இருந்தபோது பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை மரணமானார். அதனையடுத்து தாயாரை கனடாவுக்கு தருவிக்க விநோதினி முயற்சித்தார். ஆனால், அவரின் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
தனது மகள்மாருடன் இருப்பதற்கே பார்வதி விரும்புகிறார்.கனடாவில் விநோதினியுடன் இருப்பதற்கே அவர் அதிகளவுக்கு விரும்புகிறார். அவரை கனடாவுக்கு வரவழைப்பது தொடர்பாக குடும்பத்தினர் சட்டத்தரணிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஓரிரு மாதங்களில் கனடியர்கள் தீர்மானமெடுப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்கிறோம். வெற்றியளிக்காவிடின் அவரை மருத்துவ சிகிச்சைகளுக்காக இந்தியாவுக்குக் கொண்டு செல்ல அனுமதி கோருவோம் என்று சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். 1983/2003 வரை பார்வதி தனது கணவருடன் திருச்சியில் தங்கியிருந்தார். அதன் பின்னரே அவர்கள் இலங்கைக்கு திரும்பி வந்தனர்.
DEMOCRACY
/அம்மா அறியானில் ‘அம்மா எனும் கருத்தாக்கம்’ வெளிப்பட்ட விதத்தை ஜான் இவ்வாறு குறிப்பிடுகிறார் :
அம்மா என்ற கருத்தாக்கம் பிற நாடுகளில் நிலைத்திருந்தது போலல்ல இந்தியர்களாகிய நம்மவர்களுடையது. அது சக்தியின் ஊற்றுக் கண். தெளிவாகச் சொன்னால் புராணசக்தியின் தெளிவான ஊற்றுக் கண் இருப்பது பெண்களிடம் அல்லது தாயிடம். எந்த ஒரு சித்தாந்தமானாலும், எந்தத் துத்துவ அடிப்படையின் வாயிலாகச் சிந்திப்தாலும் மானுடக் குலத்தின் பேரழிவு வேதகாலக் கலாச்சாரத்தின் அடிப்படையில் சொன்னால் பெண் அல்லது சக்தியின் பரழிவாகும். இந்தத் தத்துவம்தான் அம்மா அறியான் என்ற சினிமாவில் கையாளப்பட்டதற்கு அடிப்படை. /–யமுனா ராஜேந்திரன்!.
வந்தாரை வாழவைப்போம்!. இருபது ஆண்டுகாலம் வாழ்ந்தவரை, மலையக தமிழரைப் போல்(மலையக தமிழரை விட அதிக ஏழைகள் இருந்தும்!), கரம் கூப்பி வணங்கி வரவேற்கிறோம்!.
NANTHA
சல ரோகம் உள்ளவர்களை கனடா “குடியேற்ற” வாசிகளாக அனுமதிப்பதில்லை. பிரபாகரனின் அம்மாவை அனுமதித்தால் பல தமிழர்கள் கோர்டு வரை செல்வார்கள். ஏனென்றால் பல தமிழர்களின் பெற்றோர்களை சலரோகம் உள்ள காரணத்தால் கனடா வர விடவில்லை.
கனடா “வில்லங்கத்தில்” மாட்டிக்கொள்ளும் என்று நம்ப முடியாது.
மாயா
தேசியத் தலைவரது தாயாருக்கே வாழ்வு கொடுக்க முடியாத புலிகள், இந்த பாவப்பட்ட தமிழ் மக்களுக்கு எப்படி விடுதலை வாங்கித் தரப் போறாங்கள்? யோசியுங்கோ. அடுத்து இந்த நாடு கடந்த , நிலாத் தமிழீழக் கதைகளை நம்பி ஏமாற மாட்டீங்கள்?