ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமானால் இராணுவத்திலிருந்து அவமதிப்புடன் அவர் நிராகரிக்கப்படுவதை எதிர்கொள்வதாக முதலாவது விளைவு அமையும். இதன் அர்த்தமானது ரண விக்கிரம பதக்கம், ரணசூர பதக்கம், விசிஷ்ட சேவா விபூஷணய என்பனவற்றை அவர் பயன்படுத்த முடியாது என்பதாகும் என்று சண்டே ரைம்ஸ் பத்திரிகை நேற்று ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், பாதுகாப்புக் கற்கைகளுக்கான றோயல் கல்லூரி, பி.எஸ்.சி. போன்றவற்றையும் அவர் பயன்படுத்த முடியாத நிலைமையேற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு வருடத்திற்கு முன்னர் யுத்த கதாநாயகனாகப் புகழப்பட்டவர் ஜெனரல் பொன்சேகா. ஆனால், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் சில வாரங்களுக்குள் அவர் சாதாரண மனிதராகக் கூட இல்லாமல் குற்றவாளியாக இருப்பார்.
உலகிலேயே சிறந்த இராணுவத் தளபதியெனப் புகழப்பட்ட மனிதரின் விதி இதுவாகக் காணப்படுகிறது என்று சண்டே ரைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.