அபிவிருத்திகள் ஆரம்பிக்கும் நாள் ஏப்ரல் 9 – அமைச்சர் டக்ளஸ்

devananda.jpgஏப்ரல் 9ம் திகதியை எமது பகுதிகளுக்கான அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டங்கள் தொடங்கும் நாள் எனக் கொள்ளும்படியும், எமது மக்கள் ஈ. பி. டி. பி.யினராகிய எமக்கு அதிக அரசியல் பலத்தைத் தருவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு மற்றும் வேலணைப் பகுதிகளில் அமைந்துள்ள ஈழ மக்கள் ஜனநாயக்க கட்சியின் அலுவலகங்களில் வைத்து பொதுமக்களைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா, எமது மக்களுடன் நாளாந்தம் தங்கியிருந்து எமது மக்களுக்காக சேவை செய்பவர்களையே எமது மக்கள் தங்கது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். தேர்தல் காலங்களில் மட்டும் எமது மக்களிடம் வந்து வாக்குகளை அபகரித்துக் கொண்டு அதன் பின்னர் எமது மக்களைத் திரும்பியும் பாராதவர்களை எமது மக்கள் கடந்த காலங்களில் இனங்கண்டு கொண்டிருப்பார்கள் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

எமது மக்கள் பல்வேறு அழிவுகளை எல்லாம் சந்தித்திருந்த போது இப்பக்கம் தலை வைத்தும் படுத்திராத பலர் இப்போது தேர்தல் என்று வந்தவுடன் படையெடுத்து வந்து எமது மக்களை மீண்டும் படுகுழிக்குள் தள்ளவே முற்படுகின்றார்கள் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக் காட்டினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

29 Comments

  • darsan
    darsan

    அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சேவை பாராட்டத்தக்கது. அவரது சேவை தொடர்ந்தும் எமது மக்களுக்கு கிடைக்கும் என நம்புகின்றேன்.

    Reply
  • கிருபா
    கிருபா

    அவர் கருத்தை ம்றுப்பதற்கு இல்லை.
    ஆனால் அவரை ஆதரிப்பார்களா என்பது கேள்விகுறியே.

    Reply
  • s, thayalan
    s, thayalan

    மக்கள் பணி இன்னும் தொடர வாழ்த்துக்கள்…………

    Reply
  • jeny
    jeny

    அமைச்சர் வெல்ல வேண்டும். மக்கள் மனதில் இடம்பிடித்தவர் வெத்திலை சின்னத்திற்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்வோம் அவரது இலக்கம் 9

    Reply
  • palli
    palli

    என்னது வெத்திலைக்கா??

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    நண்பா தேவா!
    உன்னைத் தோழரே என இனியும் அழைக்க மாட்டேன்
    வாக்குத் தந்தால் மேம்பாட்டுத் திட்டம் தொடரும் என்கிறாய்.
    வாக்கு இழந்தால் உன் வயிறு மட்டும் பொருமும் என்பாயா?
    அழிவுகளின் பொறுப்பு அவர்களுக்கு மட்டுமல்ல,உனக்கும் உண்டு.
    அழ்வுகளின் போது வீணை வாசித்தவன்,இப்போது நடக்கின்ற ஆக்கிரமிப்புகளைப் பார்த்து வெற்றிலை போட்டுக் கொள்.
    லெபனான் பயிற்சியும்,மாக்சிசக் கவர்ச்சியும் நீ கழட்டி போட்ட ஆடைகளாக இருக்கலாம்.
    அலன் தம்பதிகள் கடத்தல் அமெரிக்க எதிர்ப்பாக,கோடம்பாக்க குண்டு பொழிவு இந்திய எதிர்ப்பாக,டக்ளஷ் என்பது சிங்கள் நண்பனின் பெயராக நீ மாய்மாலம் காட்டலாம்.மக்கள் உன்னை நிராகரித்தார்கள்,இனியுந்தான்.ஆயுதங்களைக் காட்டி,மக்கள் ஆதரவு என்று சொன்னவனுக்கும்,பணத்தைக் காட்டி மக்கள் ஆதரவு என்று சொல்லுகிற உனக்கும் என்ன வித்தியாசம்? சொல்?
    சரியாக முப்பது வருடங்களின் முன் சைக்கிளில் வந்து ஒரு தேனீர் அருந்தி,அய்ந்து நிமிடங்களெனும் கதை பறைஞ்ச காலங்களை நினைச்சுப் பார்.
    இந்த வரலாற்றில் நான் சிதைஞ்சு போனவன்,நீ உயர்ந்து நிற்பவன்.ஆனால் எம் மக்களைப் பார்.
    அவர்கள் சாம்பலாகிப் போனார்கள். அது ஏன் என்று மட்டும் ஒரு கணம் சிந்தித்துப் பார்.

    Reply
  • சுகுணகுமார்
    சுகுணகுமார்

    என்ன ஏப்பிரல் முட்டாள் தினத்தை 9ம் திகதிக்கு மாற்றி விட்டார்களா? ஆட யாரும் சொல்லவில்லையே!

    Reply
  • Ajith
    Ajith

    What did our minister do until now?

    Reply
  • santhanam
    santhanam

    நாங்கள் தமிழனின் இன்னல்களை கேள்வியாகவிட்டு செல்கிறோம் ஆனால் விடை யாரிடமும் இல்லை.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சிங்கள மக்களுடனும் சிங்கள அரசியல்வாதிகளுடனும் வெற்றிலை போட்டுக் கொள்ளாமல் எமதுநாட்டின் அதாவது இலங்கைநாட்டை எமது நாடாக பிரதிபலிக்காமல் கருதாமல் நடந்த அரசியல் வரலாறே கடந்து போன ஆறுதசாப்தமாக எழுதப்பட்ட வரலாறு. ஒரு வித பிரிவினைவாத அரசியல் முயற்சி.
    இதன் பயனாக தமிழ்மக்கள் இலங்கைத் தலைநகரில் தான் தமக்கு பாதுகாப்பு தேடமுடியும் தமது வாரிசுகளுக்கு எதிர்காலத்தை அமைக்க முடியும் என வசதியுள்ளவர்கள் எண்ணினார்கள். இதுவெல்லாம் கடந்த எட்டுமாதத்திற்கு முன்பு பலகால வருடங்களாக தமிழ்இனத்தின் மீது சுமத்தப்பட்ட அரசியல் சுமை. தமிழ் அரசியல்வாதிகளின் அறிவுகெட்ட தனத்தால் விளைந்த விளைவே!.

    தமிழ்வாதம் என்ன எதிர்பார்கிறார்? இன்னொரு முள்ளிவாய்கால்லையா?. அல்லது அங்கு போர்நடைபெறாதலால் தனக்கும் தனது கூட்டத்திற்கும் வருமானம் வறண்டு போய்விட்டது என்பதாலா?. அல்லது இடைத்தங்கல் முகாம்கள் இல்லாமல் யாழ்மக்கள் சுகந்திரமாக திரிகிறார்கள் என்பதாலா?. உமது நோக்கம் என்ன என்பதை எமக்கும் புரியவையுங்கள்.

    வெற்றிலை போட்டால் வாய்சிவக்கும் என்பதல்ல. உரியநேரத்தில் வெற்றிலையை பரிமாறாமலும் பல பக்கவாத நோய்கள் வரவாய்புண்டு அரசியலில். நீங்கள் டக்கிளஸ் தேவானந்தாவுக்கு அடிக்கிற சேறு தமிழ்மக்கள் நலன்கருதியதோ அல்லது அரசியல் தன்மைவாய்ததோ அல்ல. ஆரோக்கியமான கருத்துக்களையே தேசம்நெற் வாசகனாகிய நான் எதிர்பார்கிறேன் அதுபோல் மற்ற வாசகர்களும் எதிர்பார்ப்பார்கள் என்பதில் நீங்களும் உடன்பாட்டிற்கு வருவீர்கள் என நினைக்கிறேன்.

    Reply
  • NANTHA
    NANTHA

    புலிகளை எதிர்ப்பவர்கள் தமிழர்கள் அல்ல என்று ஒரு துவேஷ மனப்பான்மை புலன் அறுந்த தமிழர்களிடம் உண்டு. அவர்களின் எதிர்பார்ப்பு இலங்கையில் கொலைகள் விழவேண்டும், குண்டுகள் வெடிக்க வேண்டும் என்பதே ஆகும்.

    புலிகள் தொலைந்த பின்னர் “வெள்ளை வான் கடத்தல்” நின்று போன காரணத்தை டக்ளசுக்கு எதிராக எழுதுபவர்கள் கூறினால் நல்லது. ஏனென்றால் புலிகள் இருந்த பொழுது நடந்த வெள்ளை வான் கடத்தல் அனைத்தும் ஈபிடீபி செய்கிறது என்று பொய் சொன்னவர்கள் இன்று “மவுன” விரதம் அனுஷ்டிக்கிறார்கள். டக்லஸ் பிரபாகரன் என்ற அமெரிக்க கூலி போல ஆயிரக்கணக்கான தமிழர்களை கொல்லவில்லை என்று கவலைப்படுகிறார்கள் போல் தெரிகிறது.

    இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டால் “விடுதலை” கிடைக்கும் என்று நினைப்பவர்களுக்கு டக்லஸ் போல வாக்கு கேட்டு வருபவர்கள் “கொஞ்சம்” குறைவானவர்களாகவே தெரிவார்கள்.

    வெற்றிலை என்பது இந்துக்களும், பெளத்தர்களும் வரவேற்புக்கு பயன்படுத்தும் ஒரு முக்கியமான பொருள் என்பது கத்தோலிக்க பாதிரிகளின் ஆட்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. தமிழ் நாட்டிலும், கேரளாவிலும் இந்துக்கள் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் வெற்றிலை கொடுத்து வரவேற்பார்கள். இலங்கையில் பவுத்தர்களும் அப்படியே செய்வார்கள்.

    தமிழ் படம் பார்த்து அறிவு கொளுந்துகளாகிய “தமிழர்களுக்கு” வெற்றிலை கொடுத்தல் என்பது நையாண்டியாகவே இருக்கும். இவர்களுக்கு வெற்றிலை “போட்டு” பழக்கமே ஒழிய வெற்றிலை வைத்து வரவேற்ற பண்பாடு கிடையாது.

    தமிழ் பகுதிகளில் புலித்தோலை கழற்றிவிட்டு நரித்தோலை போர்த்துக்கொண்டுள்ள சம்பந்தன் கும்பலை விட டக்லஸ் எவ்வளவோ மேல். டக்ளசுக்கு கண்டிப்பாக ஆதரவு அதிகரித்துள்ளது.

    Reply
  • Appu hammy
    Appu hammy

    Major Earth Quake is on 8th April 9th !…. Most of the ” Foul Mouth Politicos ” will get buried for ever !.

    Reply
  • Sivam
    Sivam

    “பல்லிக்கு தோழர் மீது கடுமையான விமர்சனங்கள் உண்டு; அது எம்மின மக்களுக்கு அவரது சேவை போதாது என்பதால் தான்; ஆனால் அவர் பதவி விலகுவது எமக்கு இருக்கும் இறுதி துருப்பு சீட்டும் தொலைந்து விடுவது போல் ஆகி விடும், இதுவரை பல தடவை புலி அனுப்பிய யமனுக்கு விருந்து கொடுத்து அனுப்பிய தோழர் இன்று மக்களின்(தமிழ்) முடிவுக்காய் தன் பதவியை இளப்பது தவறு; (இது கோழி மிரித்து ஏதோ சாவது போல்)
    கண்டிப்பாக தோழர் ஆட்ச்சியில் இருக்க வேண்டும், எதோ அவரால் முடிந்தவைகளை எம்மினத்துக்கு செய்ய வேண்டும் என நானும் தோழரும் வணங்காத கடவுளிடம் வேண்டுகிறேன் ;விமர்சனம் என்பது வளர்ச்சிக்கு என்பது தோழர் அறியாததா?? பல்லிக்கு தெரிந்ததை சொல்லுகிறேன்”

    Reply
  • palli
    palli

    சிவம் இது என்ன புது விளையாட்டு;
    உங்கள் கருத்தை பல்லியின் கருத்தாய்?
    ஓஓ இதுதான் பக்கத்து இலைக்கு பருப்பா??

    Reply
  • thaya
    thaya

    உங்கள் வினாக்களை
    தவறாமல் தோழர் முன்
    கொண்டு செல்லுங்கள்..
    தேசம் ஒருநாள்
    அவரால் தலை நிமிரும் போது
    உங்கள் வினாக்களினாலேயே
    எல்லாம் நடந்தது என்று
    நீங்களும் பங்கெடுப்பதற்காக……….

    Reply
  • Jeyarajah
    Jeyarajah

    வெற்றிலையா வீணையா என்பதல்ல பிரச்சனை. இப்ப நாங்கள் எப்படி முடிவு எடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். வீர வசனங்களோ வெற்றுப் பேச்சுக்களோ வெளவாலில் இருந்து தோல் உரிக்கிறதுவரை கேட்டுப் புளிச்சுப் போச்சு. நடக்கக்கூடியவற்றைப் பற்றிக் கதைப்போம். கதைக்கிறதைச் செய்வோம். இதுதான் கடைசியாகக் கண்ட உண்மை.

    வடக்கு கிழக்கில் இதுவரை இல்லாதஅளவு வேட்பாளர்கள் தேர்தலில் நிற்பதே ஜனநாயகத்திற்கான வெற்றி. யாழ்ப்பாணத்திலேயே டக்ளஸ்சைப் போடப் போனவரின் குடும்பம் இருக்கிறது. ஆனால் டக்ளஸ் பழிவாங்கவில்லை எய்தவன் இருக்க ஏன் அம்பை நோவானென்று. (இது எங்கேயோ கேட்டமாதிரி இருக்கு)

    படிப்படியாக திரும்பி வருகிற இயல்பு வாழ்க்கையையும் குழப்பாமல் இருக்கிறது எல்லாத்துக்கும் நல்லம்.

    Reply
  • santhanam
    santhanam

    இந்தியாவில் சூளைமேட்டில் செய்த கொலைவழக்கு டக்ளஷ்ற்கு தமிழ்நாட்டில் வழக்கு கிடப்பில் இருக்கிறது பின்னூட்டம் விடுபவர்களிற்கு தெரியுமோ இவர்கள் எம்மினத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் தலைவர்கள்.

    Reply
  • alex.eravi
    alex.eravi

    EPDP gunmen killed Red Cross employee alleges Citizen’s Group

    A citizen’s group from the Vadamaratchy area in the Jaffna peninsula has alleged that gunmen belonging to the Eelam Peoples Democratic Party (EPDP) were responsible for the killing of an employee of the International Committee of Red Cross (ICRC) in Jaffna on Tuesday December 23rd.

    The organization called Vadamaratchy Civil Rights Association (VACRA)has in a letter sent to the ICRC , several diplomatic missions, human rights and media organizations charged that the EPDP was responsible for the assassination of 42 year old Sivasundaralingam Gangatharan.

    The ICRC continues its essential activities to help conflict-affected people throughout the country.

    For more with comments:
    http://transcurrents.com/tc/2008/12/post_182.html

    Reply
  • alex.eravi
    alex.eravi

    Assassinating Tamil Parliamentarians: The unceasing waves

    Meanwhile, the EPRLF breakaway faction led by Kathiravelu Devananda alias Douglas had formed itself into the Eelam People’s Democratic Party (EPDP).

    Using the ‘captive’ votes of the islands of Jaffna, the EPDP, with about 10,000 votes, got nine seats from Jaffna District. The rest of the voters lived in LTTE-controlled areas and were not allowed to vote by the Tigers.

    One of those elected on the EPDP ticket was Nadarajah Atputharajah, alias Ramesh, who edited the Thinamurasu weekly.

    EPDP killing
    Serious differences arose between Douglas and Ramesh with the latter gradually following a pro-Tiger line in the Thinamurasu tabloid. Douglas found it increasingly difficult to control Ramesh.

    Then Ramesh and his brother-in-law were shot dead at Wellawatte. With that killing, Douglas re-established control over the paper. Though the LTTE was blamed by Douglas, it was widely suspected that it was an internal EPDP killing.
    Ramesh’s death triggered off an exodus of EPDP Parliamentarians to foreign countries. Today Devananda is the lone EPDP MP in Parliament.

    None of those elected as MPs from the EPDP are in the party today except for Devananda’s uncle Sivathasan and Batticaloa’s Rasamanickam.

    Most of the EPDP ex-Parliamentarians are abroad and many of them, in their refugee claims, have blamed the Ramesh killing on Douglas. This speaks volumes about the inner democracy within the EPDP.

    Raviraj assassination
    The EPDP was implicated in this killing. The killers are suspected of having hidden in a place of worship before taking on their target. The slow ‘progress’ of the investigation makes many suspect high-level connivance in the killing.

    The EPDP also struck in Jaffna when former TULF Jaffna District Parliamentarian Sivamaharajah was killed. Since Sivamaharajah was also running a newspaper, his killing was seen as being a media-related one.

    His political background was overlooked. Incidentally Sivamaharajah and Devananda share a common ‘caste’ constituency.
    The next Tamil Parliamentarian to be assassinated was the UNP’s Thiagarajah Maheswaran. He was killed at the Sivan Temple premises.

    The EPDP was suspected because of business rivalry between Devananda and Maheswaran and also because the Colombo District MP had threatened to expose alleged EPDP killings in Jaffna.

    Since the LTTE had tried to kill him in 2004 through an underworld killer, the LTTE was also suspected.
    The brazen attempt by Police Chief Victor Perera to ‘influence’ investigations and point the finger at the Tigers seems to suggest that the state-backed EPDP was responsible. A massive cover-up may be in progress.
    – D.B.S.Jeyaraj

    For in full:
    http://www.nation.lk/2008/03/16/newsfe1.htm

    Reply
  • NANTHA
    NANTHA

    புலிகள் தொலைந்த பின் டக்லஸ், கருணா மீதான தாக்குதல்களையும் பொய்களையும் அவிழ்த்துவிடுவதில் புலிகளின் கொலைகாரப் பங்காளிகளான கத்தோலிக்க கோஷ்டிகள் முன் நிற்கிறார்கள். புலிகளின் கொலைப் பட்டியலில் உள்ள அனைவர் மீதும் சேறுவாருவதில் கத்தோலிக்க கோஷ்டிகள் முனைந்துள்ளனர். புலிகளின் பின்னர் தமிழ் பகுதிகளில் தாங்கள்தான் தலைவர்கள் என்று கத்தோலிக்க பாதிரிகள் கதை தொடங்கியுள்ளதுடன் அதற்கு மெருகூட்ட இந்த அலெக்ஸ் என்பவர் அலைகிறார்.

    டி பி எஸ் ஜெயராஜா நாடறிந்த கத்தோலிக்க பிரசங்கி. அந்த ஆளின் புலம்பல்களை இங்கு ஒருவர் மெதுவாக வெட்டி ஓட்ட முனைந்துள்ளார்.

    யு என் பி சார்பு பத்திரிகைகளில் வரும் செய்திகளை பிரதி பண்ணி வரும் இந்த அலெக்ஸ் என்ற ஆள் பற்றி ஜாக்கிரதையாக இருங்கள்! அவருடைய “கதைகளில்” புலிகளின் கொலைகள் பற்றி ஒன்றும் வராது என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்!

    Reply
  • Sivam
    Sivam

    பல்லி – நீஙகள் கனக்க கதைப்பதால் எப்ப எங்க கதைக்கிறீர்கள் என்று உங்களுக்கே ஞாபகம் வருவதில்லை.

    டக்ளஸ் ராஜினாமா நாடகம் பின்னூட்டத்தில கிடக்கு. தேசத்தில முன்பக்கத்திலே வருகுது. பாருங்கள்!

    palli on January 30, 2010 10:16 pm
    பல்லிக்கு தோழர் மீது கடுமையான விமர்சனங்கள் உண்டு; அது எம்மின மக்களுக்கு அவரது சேவை போதாது என்பதால் தான்; ஆனால் அவர் பதவி விலகுவது எமக்கு இருக்கும் இறுதி துருப்பு சீட்டும் தொலைந்து விடுவது போல் ஆகி விடும், இதுவரை பல தடவை புலி அனுப்பிய யமனுக்கு விருந்து கொடுத்து அனுப்பிய தோழர் இன்று மக்களின்(தமிழ்) முடிவுக்காய் தன் பதவியை இளப்பது தவறு; (இது கோழி மிரித்து ஏதோ சாவது போல்)
    கண்டிப்பாக தோழர் ஆட்ச்சியில் இருக்க வேண்டும், எதோ அவரால் முடிந்தவைகளை எம்மினத்துக்கு செய்ய வேண்டும் என நானும் தோழரும் வணங்காத கடவுளிடம் வேண்டுகிறேன் ;விமர்சனம் என்பது வளர்ச்சிக்கு என்பது தோழர் அறியாததா?? பல்லிக்கு தெரிந்ததை சொல்லுகிறேன்
    பல முக்கிய புலிகளை கூட தோழர் காபாற்றி இருக்கிறார்; ஏன் இன்று கூட்டமைப்பு பலர் சிறை செல்லாமல் இருக்ககூட இந்த தோழர் தான் காரணம் , இதை பிரேமசந்திரனுடன் தொடர்புள்ளவர்கள் கேட்டறியலாம்; தோழரை களட்டி விடுவதில் மகிந்தாகூட சம்மதபடலாம்;
    ஆனால் தமிழனாய் என்னால் முடியவில்லை, பல்லியை விட தோழரை விமர்ச்சித்தவர்கள் யாரும் இருக்க முடியாது; அது எனது சுய நலன் அல்ல, அவரது பொதுநலன் விரும்பியே, இது நாடகமோ அல்லது நையாண்டியோ பல்லிக்கு தெரியாது; ஆனால் தோழர் தன்னும் அரசுடன் இருக்க வேண்டியது தமிழருக்கு காலத்தின் கட்டாயம்; இதை தோழரும் புரிந்திருப்பார் என பல்லி நினைப்பதில் தப்பில்லை;

    Reply
  • Appu hammy
    Appu hammy

    GOOD STORY BUT EVERONE KNOW WHO IS EXPERT IN THIS JOB!!IN JAFFNA 1984 “GOD MUST TAKE CARE TAMIL PEOPLE”
    யாழ்ப்பாணத்தில் பணம் பறிக்கும் கும்பல் எச்சரிக்கையுடன் இருக்கக் கோருகிறது ஈ.பி.டி.பி.

    அரசியல் கட்சிகளின் பெயராலும் ஒருசில நிறுவனங்களின் பெயராலும் யாழ் குடாநாட்டில் பொதுமக்களிடம் இருந்து பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு வருவதாக ஈ.பி.டி.பி. தலைமை அலுவலகத்திற்கு தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. எனவே யாழ். குடாநாட்டு மக்கள் இந்த விடயத்தில் விழிப்பாக இருந்து செயற்பட வேண்டுமென ஈ.பி.டி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன் கேட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், யாழ் மாநகர சபைத் தேர்தல் காலத்திலும் நலன்புரி நிலையங்களில் இருப்போரை விடுவித்துத் தருவதாகக் கூறி சில சக்திகள் இதேபோன்று பொது மக்களிடமிருந்து பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    Reply
  • thayakan
    thayakan

    உங்கள் நா
    எது வேண்டுமானும்
    பேசுங்கள்…
    உங்கள் பேனா
    எது வேண்டுமானாலும்
    எழுதுங்கள்..
    ஆனால் பொய்களால்
    எதையும் அசுத்தப்படுத்த வேண்டாம்.
    உண்மை வெளிவருமம.
    வீண் பழி சுமத்தாதீர்கள்…

    Reply
  • palli
    palli

    எனது எழுத்தை எனக்கே அறிமுகம் செய்த சிவத்துக்கு நன்றி, ஆனால் காலத்துக்கு காலம் நம்ம அரசியல்வாதிகள் மாறுகினமே, அதுக்கேற்றாப் போல்தானே நாமும் எழுத வேண்டும்; தோழர் விடயத்திலும் அப்படிதான் பாருங்கள்;

    Reply
  • thayakan
    thayakan

    தமிழ் வாதம் அவர்களே!

    உங்கள் வாதம் என்ன தவறான வாதம். அழிவு யுத்தம் மக்களை நடுததெருவில் நிறத்தும் என்று சொன்னவர் தோழரே…

    இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னரான ஆயுதப்போராட்ட வரலாற்றில் தமக்கும் பங்குண்டு என்று கூறும் தோழர் ஒரு போராட்ட இயக்கத்தை வழி நடத்தி சென்றவர்களில் ஒருவர். ஆயுதப்போராட்டத்தை நடத்தியவன் என்ற வகையில் மக்கள் படும் அவலங்களுக்கு தாமும் பொறுப்ப என்றும். அதை தான் பகிரங்கமாக ஏற்றுக்கொள்கிறேன் என்றும் சொல்லியிருந்தார். அவர் சொன்னது பொல் ஏதோ ஒரு வகையில் அவருக்கும் பங்குண்டு என்பதை அவரே ஏற்றுக்கொண்ட விடயம்.

    ஆனால் சமாதானத்திற்கான சந்தர்ப்பங்கள் கிடைத்த பொது அதை சரிவரப்பயன்படுத்த மறுத்தவர்களே அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.

    Reply
  • thayakan
    thayakan

    தோழரின் விடயத்திலும் அப்படித்தான் என்று
    பல்லி சொல்லி விட்டது!
    பிறகென்ன?… சகுனம் பிழைச்சுப்போச்சு!…
    உடனடியாக தோழருக்கு உத்தரவிடுங்கள்
    மறுபரிசீலனைக்கு தயாராகுமாறு…..

    Reply
  • palli
    palli

    // சகுனம் பிழைச்சுப்போச்சு!… உடனடியாக தோழருக்கு உத்தரவிடுங்கள் மறுபரிசீலனைக்கு தயாராகுமாறு…..//
    ஜயோ ஜயோ தோழரே கூண்டை விட்டு எப்படி பறப்பது என தனது சகாக்களுடன் பேசி வரும்போது; பல்லி பலன் சொல்லுகிறார் என தயா தடம் புரள்வது நியாயமா..? எதுக்கும் தோழர் நட்ப்பாய் இருந்தால் ஒரு போனை போட்டு அவரது நிலையை கேட்டு பாருங்களன், வெத்திலைக்கும் வீணைக்கும் உள்ள வேறுபாடு சொல்லுவார், தயாகரனுக்கு எதுக்கெடுத்தாலும் அவசரம் அவசரம்;

    Reply
  • joy
    joy

    /சமாதானத்திற்கான சந்தர்ப்பங்கள் கிடைத்தபோது அதை சரிவர பயன்படுததுதாதவர்களே அகற்கான பொறுப்பை ஏற்கவேண்டும்./ தாயகன்.
    இவைகள் மட்டும் சரியாக பயன்படுத்தினவையோ? இன்று இடத்திற்கிடம் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒரு பொன்னான வாய்பு என வாய்கூசாமல் பேசித்திரியும் டக்கிளசும் அவருடைய ஆட்களும் அன்று அதற்கெதிராகவே செயற்பட்டவை புலிகளுடன் கள்ள உறவு வைத்து செயற்பட்டவை. இதனுடைய தொடர்ச்சிதான் புலிகளினிற்கூடான பிறேமதாசாவின் உறவு ஏற்பட காரணமாக அமைந்தது. புலிகளை எதிர்த்தவர்களும் இந்தியாவை ஆதரித்தவர்களும் மேற்குலக ஆதரவுடன் பிரேமதாசா புலிகள் கூட்டு செயற்பாட்டினால் அழிக்கப்பட்டனர் ஓரங்கட்டப்பட்டனர். அதே காலகட்டத்தில் பிரேமதாசாவுடன் எப்படி இனைய முடிந்தது? பிரேமதாசாவை 10வருடத்துக்கு அசைக்க முடியாது அதனால் தான் இனைந்திருக்கின்றேன் என்று டக்கிளசால் அனறு எப்படி தனது அரசியல் நிலைப்பாட்டை எப்படி நியாயப்படுத்த முடிந்தது? பின்பு பல்டியடித்து சுதந்திரக்கட்சியுடன் எப்படி இனையமுடிந்தது. எதிர்காலத்திலும் எந்தக்கட்சியோடும் இனைவார் அவருக்கு கொள்கையுமில்லை.

    ஏதாவது செய்து வாக்கு வங்கியை தக்கவைத்து கொள்வது தான் அவருடைய அரசியல் அவருடைய முன்னாள் சகா பேட்டி கொடுத்தது போல் அன்று வெறும் சூட்கேசுடன் வந்த டக்ளசு பல கோடிகளுக்கு சொந்தக்காரன். அவருக்கு சூளைமேட்டு கொலை வழக்கு மட்டுமல்ல ஒரு வைர வியாபாரியின் பிள்ளையை கடத்திவைத்து பலகோடி கேட்டு பிடிபட்ட இன்னுமொரு கிறிமினல்
    வழக்குமுண்டு. கடந்த 20வருட அவருடைய ஜனநாயக அரசியலில் மத்தியில் கூட்டாச்சி மானிலத்தில் சுய ஆட்சி என்ற கோசம்
    மட்டுமே அவருடைய கோசமாகவிருந்தது. அதுக்கும் இராஜபக்சா ஆப்பு வைத்துவிட்டார். இப்போது வீனை என்னெடா வெத்திலை
    என்னெடா என்று சொல்லிக் கொண்டு திரிகின்றார்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….கடந்த 20வருட அவருடைய ஜனநாயக அரசியலில் மத்தியில் கூட்டாச்சி மானிலத்தில் சுய ஆட்சி என்ற கோசம்
    மட்டுமே அவருடைய கோசமாகவிருந்தது….//
    வடக்குகிழக்கு ‘என்றும் பிரிக்கமுடியாத அலகு’ என்றும் சொன்னார் அதற்கு முன்னர்! அதுக்கும் ஜே.வி.பியும் சுப்பிரீம்கோட்டும் ஆப்பு வைத்து விட்டது.

    Reply