மலைய கத்தில் சகல துறைகளையும் உள்ளடக்கிய முழுமையான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கான பத்தாண்டு செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற் கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான தேச நிர்மாண, தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.
தோட்டத் தொழிற்துறை அபிவிருத்தி, வேலை வாய்ப்பு, சுகாதார, கல்வித்துறை மேம்பாடு, விளையாட்டுத்துறை அபிவிருத்தி என முழுமையான செயல் திட்டத்தைக் கொண்ட நகல் வரைவு அரசாங்கத்திற்குக் கையளிக்கப்பட்டு அமைச் சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதியமைச்சர் சிவலிங்கம், அடுத்த வரவு – செலவுத் திட்டத் துடன் நிதியொதுக்கீடு பூர்த்தி செய்யப்பட்டு அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைமுறைப்படு த்தப்படுமென்று கூறினார்.
இதேவேளை, மலையகத்தின் பத்தாண்டு அபிவிருத்தித் திட்டத்திற்கான மூலதனத்தை வெளிநாடுகளிலிருந்து நேரடியாகப் பெறுவதற்கும் வழிவகைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளன. அந்த வகையில் யூ. என். டி. பீ. 20 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ள தென்றும் பிரதியமைச்சர் கூறினார்.
தவிரவும், இந்திய அரசாங்கமும் பல்வேறு துறைகளை அபிவிருத்தி செய்ய ஒத்துழைப்புகளை நல்குவதாக உறுதியளித் துள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். மலையகத்தில் கல்வித் துறையை மேம்படுத்துவதற்காக இந்திய பல்கலைக்கழக ங்களின் கிளைகளை மலையகத்தில் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வாக்குறுதி அளித்ததற்கமைய 500 வீடுகளைக் கூடிய விரைவில் நிர்மாணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அநேநேரம், மலையகத்தில் போக்குவரத்துத் துறையில் நிலவும் சிரமங்களைக் களையும் பொருட்டு மேலும் 30 பஸ் வண்டிகளை விரைவில் பெற்றுக் கொடுக்கவும் இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகப் பிரதியமைச்சர் தெரிவித்தார். ஏற்கனவே, 20 பஸ் வண்டிகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
பெருந்தோட்டத் தொழிற்துறையில் எதிர்காலத்தில் 10%ற்கும் குறைவானவர்களே தொழில்புரியும் நிலை உருவாகும். அதற்கு ஏற்றவாறு பெருந்தோட்டப் பகுதிகளைக் கிராமங்களாக மாற்றும் திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டு மென்றும் பிரதியமைச்சர் கூறினார்.