எதிர் வரும் பொதுத் தேர்தலில் வாக்குகளை எண்ணும் நிலையங்களில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் பிரசன்னத்துக்கான வாய்ப்புகளை தேர்தல் ஆணையாளர் நேற்று நிராகரித்தார்.
நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்ததினத்தன்று எந்தவொரு அரசியல் கட்சியும் இவ்வாறான வேண்டுகோளை முன்வைக்கவில்லை என்று கூறியே தேர்தல் ஆணையாளர், வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் வாக்களிப்பு நிலையங்களில் நிறுத்தப்படுவதை நிராகரித்துள்ளார்.
சரியான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை நிறுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி நேற்று தேர்தல் ஆணையாளரிடம் எழுத்து மூலம் கோரியிருந்தது.
எனினும், இவ்வாறான வேண்டுகோள் நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்த தினத்தன்றே செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கூறிய தேர்தல் ஆணையாளர், அந்த வேண்டுகோளை நிராகரித்தார்.
Ajith
Poor man. What can he do? Everything under gun point.