இலங்கை அரசாங்கம் கடுமையான ஆட்சேபனைகளைத் தெரிவித்திருப்பதற்கு மத்தியில் இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பான விடயங்கள் குறித்து தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு விசேட நிபுணர்கள் குழுவை அமைக்கும் திட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும், அக்குழுவினை தாமதமின்றி நியமிக்கப் போவதாகவும், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஐ.நா. வில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அறிவித்திருக்கிறார்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு நிபுணர்கள் குழுவை நியமிப்பதற்கான உரிமை தமக்கிருப்பதாக மேலும் அவர் கூறியுள்ளார். அதே நேரம் இந்த நடவடிக்கை பொருத்தமற்றதும் அவசியமில்லாததொன்று என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இம்மாத முற்பகுதியில் கூறியிருந்தார்.
பான் கீ மூன் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் உத்தேச நிபுணர் குழுவானது இலங்கையின் இறைமையைப் பாதிக்காது என்றும் தெரிவித்தார். கடந்த மே மாதம் இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் பான் கீ மூனும் கூட்டாக அறிக்கை விடுத்திருந்தனர். அந்த அறிக்கையை அடியொற்றியே உத்தேச நிபுணர் குழு அமைக்கப்படும் ஏற்பாடு என்றும் மாதாந்தம் நடைபெறும் செய்தியாளர் மாநாட்டின்போது பான் கீ மூன் தெரிவித்ததாக ஐ.நா. செய்திச்சேவை நிலையம் தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டிருக்கிறது.
நிபுணர் குழுவை அமைக்கும் நடவடிக்கையானது அழைக்கப்படாததும் பொருத்தமற்றதுமான நடவடிக்கையென ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இந்த நிபுணர் குழுவை அமைப்பதை நிறுத்துவதற்கான முயற்சியாக பல நாடுகளிடம் இலங்கை ஆதரவை கோரியிருந்தது. கடந்த வாரம் அணிசேரா நாடுகள் அமையத்தின் ஒத்துழைப்பு பிரிவின் தலைவரும் ஐ.நா. விற்கான நிரந்தர பிரதிநிதியுமான கே.அப்டலாடிஸ், பான் கீ மூனுக்கு கடிதமொன்றை எழுதியிருந்தார். “தனிப்பட்ட நாடுகளை இலக்குவைத்துச் செயற்படுவதை அணிசேரா அமையம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் இந்த நடவடிக்கை அணிசேரா அமையத்தினதும் ஐ.நா. வினதும் சாசனங்களுக்கு முரணானது எனவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதேவேளை, நியூயோர்க்கில் ஊடகங்களுடனான சந்திப்பில் இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் பான் கீ மூன், சர்வதேச மனிதாபிமான மனித உரிமைகள் சட்ட மீறல்கள் தொடர்பாக பரிகாரம் காண்பதற்காக பதிலளிக்கும் கடப்பாட்டை உறுதிப்படுத்துவது தொடர்பான அம்சத்தை கூட்டறிக்கை உள்ளடக்கியுள்ளதெனக் கூறியுள்ளார்.
நான் அமைக்கும் குழுவானது தரம், முக்கியமான விடயங்கள் என்பவை தொடர்பாக எனக்கு ஆலோசனை வழங்கும். சர்வதேச ரீதியாகப் பெற்றுக்கொண்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பான வழிகாட்டலை கொண்டதாக இது விளங்கும். இந்தக் குழுவானது எனக்கு நேரடியாக அறிக்கை சமர்ப்பிக்கும் என்று பான் கீ மூன் கூறியுள்ளார்.
அதேசமயம், நிபுணர்கள் குழுவின் நோக்கத்தின் தன்மை குறித்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட தன்மை அணிசேரா அமையத்தின் கடிதத்தில் காணப்படுவதாகவும் பான் கீ மூன் கூறியுள்ளார்.”ஐ.நா. வின் செயலாளர் நாயகம் என்ற ரீதியில் எனக்குள்ள அதிகார எல்லைக்குள் அந்த அமைப்பை ஸ்தாபிப்பதென்ற தீர்மானத்தை நான் கொண்டுள்ளேன். இந்த அமைப்பானது இலங்கையின் இறைமையை எந்த வழியிலும் பாதிக்காது எனவும் கூறியுள்ளார்.
நிபுணர் குழு அவசியமற்றது உறுதியான நிலைப்பாட்டில் கொழும்பு
இலங்கை விவகாரம் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்க விசேட நிபுணர் குழுவொன்றை அமைக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கப்போவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் உறுதியாகத் தெரிவித்திருக்கும் நிலையில், அத்தகையதொரு குழு அவசியமில்லையெனத் தெரிவித்திருக்கும் அரசாங்கம் இந்த விடயம் தொடர்பான தனதுநிலைப்பாட்டில் மாற்றமில்லை எனவும் அறிவித்திருக்கிறது.
ஐ.நா. செயலாளர் நாயகம் தற்போது தெரிவித்திருக்கும் விடயங்கள் குறித்து தான் அறிந்திருக்கவில்லை எனவும் இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொண்டிருக்கும் நிலைப்பாடு மாற்றமடையாதென்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியுள்ளார்.
நிபுணர் குழுவொன்றை அமைப்பது தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பரிசீலனை செய்து வருவதாக ஐ.நா. விலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கோஹண கொழும்புக்கு அறிவித்திருந்தார். அந்த நிலைப்பாட்டை மட்டுமே நாம் அறிவோம் என்று சமரசிங்க மேலும் கூறியுள்ளார். இலங்கை மற்றும் அணிசேரா அமையம் ஆகியன தெரிவித்திருக்கும் ஆட்சேபனைகளின் மத்தியில் நிபுணர் குழுவை அமைப்பதை தான் முன்னெடுக்கப்போவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Ajith
Well done Ban-Ki-Moon. Can he survive the pressure from Vije Nambiar. I don’t understand the clean Rajapakse and group afraid of this one. He appointed Judges within a day to the Military Court against the Charges for Fonseka. Why cannot he allow Ban-ki_Moon’s Commission to make inquiry about the charges Fonseka made against him.
It is shame on the parties allied with Rajapakse to defend his war crimes. He and his familiy should be punished for their crime against humanity.
தமிழ்வாதம்
சரத் தூக்கு மேடைக்கு போகுமுன், இரசாயனப் படிவுகள் மறையுமுன் விசாரணை செய்வது தேவையெனினும், இந்திய, சீன அதிகார வர்க்கங்களை மீறி, மேற்கின் பலப்பரிட்சை சித்தியடையுமா என்பது சந்தேகமே.
ஆயினும் இரு முரண் நாடுகளை ஒரே வேளையில் நண்பனாக வைத்திருக்கும் இராஜ தந்திரம் நீண்டகாலம் தாக்குப் பிடிக்காது.
இலங்கைத் தேர்தல் மகிந்தவிற்கு சார்பாக ஆக்கப்ப்டாவிட்டால், அது தனக்கு பேரிடியாகும் என்பதால், உறவினர்கள் கொண்ட சாம்ராஜ்ஜியம் உருவாக்குவதில் மகிந்த சிந்தனை செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
கென்னடி, புஷ், காந்தி குடும்பம் போன்றதை விட, 76 வருட அரசியல் வரலாறு கொண்ட ராஜபக்ஷ குடும்ப அதிகார அமைப்பு விரிந்தது என்று சொல்லாமல்,செயலில் காட்டி விட்டார். அதே வேளை தமிழர்களை சிதறடித்தலில் மகாவம்ச நாயகன் வெற்றி குறைத்து மதிப்படைவதற்கில்லை.
பார்த்திபன்
ஐ.நாவும் சரி ஐரோப்பிய சில நாடுகளும் சரி சில விடயங்களை திட்டம் போட்டுச் செய்யப் பார்க்கின்றார்கள். அதிபர் தேர்தலின் போது ஐரோப்பிய வரிச்சலுகையை 6 மாதங்களில் இரத்து செய்யப் போவதாக அறிவித்து, மகிந்தவிற்கு எதிரான நிலையை இலங்கையில் ஏற்படுத்த முயன்ற ஐரோப்பிய நாடுகள், மகிந்தவின் அமோக வெற்றியின் மூலம் மூக்குடைபட்டது தான் மிச்சம். இப்போது வரிச்சலுகையை நீடிப்பது தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கைகள் நடாத்தப்பட்டுள்ளன. இதே போன்ற நடவடிக்கையைத் தான் தற்போது இலங்கையின் பொதுத் தேர்தலின் போதும் மகிந்தவிற்கு எதிரான நிலையை ஏற்படுத்த பான்கீமூன் முனைகின்றார். இதனாலேயே மீண்டும் சிஙகள மககள் ஒன்று திரண்டு மகிந்தவிற்கு ஆதரவளிக்கும் நிலை தோன்றி, இலகுவாக மகிந்த பெருண்பான்மை பெறும நிலை தோன்றும். இதன் மூலம் ஐ.நா மூக்குடைபடும் நிலை தான் வரும். அணிசேரா நாடுகள் உட்பட பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கும் போது, ஐ.நாவால் ஒன்றுமே செய்ய முடியாது. அதனால் இலங்கை அரசு மீதான போர்க் குற்ற விசாரணைகள் கொஞ்சம் பிற்போட்டுவிட்டு, இலங்கையில் பல்லின மக்களும் வேறுபாடின்றியும் நிம்மதியாகவும் வாழும் நிலையை இலங்கை அரசு ஏற்படுத்த, ஐ.நா அழுத்தம் கொடுக்க முன் வர வேண்டும். இப்படியொரு நிலையை ஐ.நா எடுக்கும் போது உலக நாடுகள் இதனை எதிர்க்க முனையாமல், ஆதரவு கொடுக்கும் நிலை தோன்றலாம். எனவே உடனடியாக ஐ.நா செய்ய வேண்டியது, இலங்கை மக்கள் சுபீட்சமாகவும் நிம்மதியாகவும் வாழும் நிலையை உருவாக்க உண்மையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து வெறும் கண்துடைப்பிற்காக நாடகமாடுவது எதனையும் சாதிக்காது.
Ajith
Parthipan thinks Rajapkse is the great leader of the world and UN and EU are depend on Rajapakse for running their organisations and countries. The truth of the matter is Rajapkse is playing a double game to cheat Sinhala masses. Rajapkse has already handed over soverignity of Sri Lanka to China and India. Every one knows NAP is a group of corrupted nations. Why couldn’t they stop Invasion of America into Irag and Afcanistan. Why couldn’t they stop economic sanctions against Libya and Cuba. The poor sinhala masses cannot understand the reality because they have been poisned by Sinhala politicians that tamils are enemies. Majority of Sinhala masses cannot read or write English or tamil . Only information and gidance they get from Sinhala fundmentalists Bikku’s and Papers. How long Rajapakse is going to cheat people. Who is going to pay the loans he borrowed from China, India, World Bank. In politics, in no time any change is possible. To Sinhala people, he will say we don’t surrender our country to conditions of EU and World Bank. Next minute he will send a group to discuss with EU and World Bank to say I will do everything what you say. At one point he will face the reality and you people have to find another Sinhala master.
NANTHA
ஐ. நா.வின் தீர்மானத்தை அமரிக்காவும் இஸ்ரேலும் குப்பையில் பலமுறைகள் வீசியுள்ளன. இராக் மீதானா ஐ.நா தீர்மானத்துக்கும் அதுவே நடந்தது. அமெரிக்க சார்பு தீர்மானங்கள் ஐ.நா. வில் விலை போகாத சரக்குகள். பான்.கி.மூன். தனது அடுத்த பதவிக் காலத்துக்காக இப்போது விசில் அடிக்கிறார். அது ராஜபக்ஷவை ஒன்றும் செய்யப்போவதில்லை! ஐ.நா. பொதுச்சபையில் அமெரிக்காவின் வால்கள் சிறுபான்மையே ஆகும். அமெரிக்காவின் வீட்டோ பொதுச்சபையில் செல்லுபடியாகாது. தவிர பாதுகாப்புச் சபையில் இலங்கைக்கு ஆதரவு கொடுக்க சீன, ரஷிய வீட்டோக்கள் எப்போதும் தயார் என்ற விஷயங்கள் எங்கள் புலிகளுக்கு தெரிய நியாயமில்லை!
இந்த நடவடிக்கை மூலம் மூனின் இந்திய மருமகனுக்கு ஐ.நா.வில் பதவி உயர்வு கிடைக்கலாம். புலிகள் கனவு காணும் எதுவும் நடக்கப் போவதில்லை!
rohan
இன்றைய செய்திகள் இந்த நிபுணர் குழுவை அமைக்க மூன் நம்பியாரிடமும் கோகன்னவிடமும் ஆலோசனை பெறுவதாகச் சொல்கின்றன.