சிறீ லங்காவில் சிறுபான்மையினர் தன்னாட்சியையே வேண்டுகின்றனர்; ஆனால் அவர்களின் தாயகத்திலுள்ள ஒடுக்குமுறையால் அதனை நடைமுறைப்படுத்த வாக்களிக்கவில்லை தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தேர்தல் அறிக்கை தனி நாட்டுக்குப் பதிலாகச் சமஷ்டி முறைக் கட்டமைப்பையே விரும்புகின்றது. அதில் பகிரப்பட்ட இறையாண்மை கோரப்பட்டுள்ளதோடு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் வரலாற்று அடிப்படையிலான வாழ்விடமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்றும் அவர்கள் சுயநிருணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்றும் மேலும் கூறப்பட்டுள்ளது. அதிகாரப் பங்கீடானது இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களைக் கொண்ட ஓர் அலகில் சமஷ்டி முறைக் கட்டமைப்பின் அடிப்படையில், தமிழ்ப் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்புடையதாக நிறுவப்பட வேண்டும். அதிகாரப் பங்கீடானது நிலம், சட்டமும் ஒழுங்கும்இ கல்வி, சுகாதாரம் உட்படச் சமூக, பொருளாதார அபிவிருத்தி, வளங்கள் மற்றும் நிதி அதிகாரங்களையும் கொண்டதாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேற்கூறியவற்றைப் பின்வரும் நிலைமைகளிற் பார்த்தல் வேண்டும்:
“எனினும், பல ஆண்டு காலம் நீடித்து ஏழு மாதங்களுக் முன்னர் முடிவடைந்த போர்க் காலத்தில் அழிந்த தங்கள் சொந்த வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மீளக் கட்டியெழுப்பக்கூட இன்னமும் தொடங்காத இந்த நேரத்தில் ஒரு தேர்தலை எதிர்நோக்கத் தமிழர் விரும்பவில்லை. அவர்கள் இராணுவத்தினதும் ஒட்டுப்படைகளினதும் கட்டுப்பாட்டின் கீழ் மனித உரிமைமீறல்கள் என்பது அன்றாட வாழ்க்கையின் ஓரு கூறென ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் பொதுவாக அச்சத்துடன் வாழ்கின்றனர்.” (http://www.guardian.co.uk/commentisfree/2010/jan/08/tamils-election-video-war-crimes).
சனவரி 26, 2010 இல் நடைபெறவிருந்த குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி நான் சனவரி 8, 2010இல் மேலே தரப்பட்டுள்ளதை எழுதியிருந்தேன். சிறிலங்காவில் வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழருக்கு அக்கறை குறைவு.: சுரேன் சுரேந்திரன்அத் தேர்தலில் வாக்களித்தோரின் தேசிய சராசரி 75%ஆக இருந்தும் யாழ் மாவட்டத்தில் தேர்தலில் பங்குபற்றியோர் தொகை (அஞ்சல் வாக்குகள் உட்பட) 25% ஆகவே இருந்தது என்பது பற்றி ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. (http://www.slelections.gov.lk/presidential2010/AIVOT.html).
இந்நிலையில் சிறீ லங்காவில் நிலைமைகள் மோசமடைகின்றன என மனிதவுரிமை அமைப்புக்கள் கூறுகின்றன. ஐக்கிய அமெரிக்க அரச திணைக்களத்தின் 2009ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் பற்றிய அறிக்கை சிறீலங்கா அரசைக் கடுமையாகக் குறைகூறியுள்ளது. சிறீலங்கா அரசோ அல்லது அதனுடன் நெருக்கமாவுள்ள ஒட்டுப்படைகளோ கேள்விமுறையற்ற கொலைகளுடனும் ஆட்காணாமற்போதலுடனும் தொடர்புடையன எனவும் சட்டத்தரணிகளும் ஊடகவியலாளரும் தொந்தரவு செய்யப்பட்டுப் பழிவாங்கப்படுகின்றனர் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. நாட்டில் போரினால் பாதிப்புற்ற பகுதிகளிலேயே ஆட்காணாமற்போதல் மிகக்கூடிய தொகையில் உள்ளதென்றும் நூற்றுக் கணக்கானோர் காணாமற்போயுள்ளனர் எனக் கணிக்கப்பட்டுள்ளதென்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஒரு சில கிழமைகளுக்கு முன்தான் சீறீலங்காவில் நடைபெற்று முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலின் பெறுபேறுகள் பற்றிய வரைபடமானது இலங்கைத் தீவு இனவாரியாக இரு துருவங்களாகப் பிளவுபட்டிருக்கின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது (http://en.wikipedia.org/wiki/Sri_lankan_presidential_election_2010).
வட மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகியனவும் மத்திய மாகாணத்தில் தமிழர் பல தலைமுறையாக வாழ்ந்துவரும் நுவரேலியா மாவட்டமும் பொன்சோகாவிற்கு வாக்களித்தன. பெரும்பான்மையான மற்றைய மாகாணங்கள் இராசபக்சவிற்கு வாக்களித்தன. இரு கொடியவர்களில் பொன்சேகா சற்றுக் குறைந்த கொடியவர் எனத் தமிழர் பொதுவாகக் கருதினாலும் பதவி வகிக்கும் குடியரசுத் தலைவர் மேல் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமும் நம்பிக்கை இழந்துவிட்டதென்பதையும் தேசியப் பிரச்சனையைத் தீர்க்கும் ஆற்றலோ நேர்மையோ அவருக்கில்லை என்பதையும் இது தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. அதேபோன்று பெரும்பான்மைச் சிங்களச் சமூகமும் இரு கொடியவர்களில் எவர் தாம் விரும்புகின்ற அதிதீவிர தேசியவாதி என்பதையும் இனத்துவேசம் கொண்டவர் என்பதையும் இத்தேர்தல் எடுத்துக் காட்டியுள்ளது.
சிறீ லங்காவின் பொது ஆட்சிமுறையானது கருத்து வேற்றுமையை ஏற்றுக்கொள்வதில்லை என்பதையும் அப்படியானவர்களைக் கொடூரமாகத் தண்டிக்கும் என்பதையும் பல ஊடகவியலாளரும் அரசியல்வாதிகளும் கடத்தப்பட்டமையும் கொலை செய்யப்பட்டமையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. குடியரசுத் தலைவர் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரை இராசபக்ச சிறையிலடைக்கத் தீர்மானித்துவிட்டார் என்பது இப்பொழுது தெட்டத்தெளிவாகி விட்டது. தனி ஒருவரோ சமூகமோ கட்சியோ பிரிவினையை ஆதரிப்பதை நாட்டின் அரசியல் யாப்பே தடைசெய்கின்றது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது தமிழ்த் தேசியம் என்ற கோட்பாட்டில் அதாவது தாயகம், தமிழர் தேசம், தமிழர் இறையாண்மை மற்றும் தமிழர் தன்னாட்சி உரிமை ஆகியவற்றை ஆணித்தரமாக ஆதாரமாகக்கொண்டு அம்முன்னணி அமைக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.
1977 ஆம் ஆண்டில் (பிரிவினைனயை எடுத்தியம்புவதைத் தடைசெய்கின்ற அரசியல் சட்டத்தின் ஆறாவது திருத்தம் செய்யப்படுமுன்) இலங்கையிலுள்ள தமிழர் இலங்கைத் தீவில் தமெக்கென்ற ஒரு தனிநாடு வேண்டும் என்ற தம் வேட்கையை எவ்வளவு வலுவாக எடுத்துக் காட்டினரோ அதேபோன்று வலுவுடன் உலகெங்குமுள்ள புலம்பெயர்ந்த தமிழர் தாம் குடிகொண்ட நாடுகளில் பக்கசார்பற்ற மேற்பார்வையுடன்கூடிய கருத்துக் கணிப்புகளை நடத்தி அதே வேட்கையை எடுத்துக் காட்டி வருகின்றனர்.
உலகத் தமிழர் பேரவையின் தலைவரான வண. எஸ்.ஜெ. இமானுவேல் அடிகளார் அவர்கள் பரிகாரமாக அல்லாது ஒரு தந்தையின் வழிகாட்டலாகத் தமிழ் உடன்பிறப்புகளுக்கு அண்மையில் எழுதிய மடலின் ( http://globaltamilforum.org/userfiles/file/GTF_Letter_from_President_to_Tamils_10_March_2010__-_Tamil_Version_-_Final.pdf ) ஒரு பகுதியைக் இங்கே மேற்கோள் காட்டுகின்றேன்:
“பசி பட்டினியோடு அச்சமுற்றும் அச்சம் ஊட்டப்பட்டும் நாம் உள்ளோம். இன்றைய நிலையில் தமிழரது துயர துன்பங்களுக்கு முடிவு உண்டென்றால் அது எமது உண்மையான விடுதலையிலேயே தங்கியுள்ளது. எனவே இலங்கைத் தீவில் வாழுகின்ற எம் உடன்பிறப்புகளுக்கே எமது உண்மையான விடுதலைக்கான மூல அடிப்படைப் பொறுப்பு உள்ளது. ஆகையால் தம் வாக்குகளை இட்டு நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் பொழுது தமிழரது விடுதலைக் குறிக்கோளுக்கு இரண்டகம் இழைக்கக்கூடிய பொய்யான அரசியல் தலைவர்களுக்கோ கட்சிகளுக்கோ ஆதரவு வழங்காது சிறீலங்காவிலும் வெளியேயும் வாழும் ஒட்டுமொத்தத் தமிழரது அடிப்படை வேட்கைகளில் பற்றுறுதியுடையோருக்கு ஆதரவு வழங்குமாறு நாம் பரிந்துரைத்து வலியுறுத்துகின்றோம்.”
மாயா
தம்பி, புலிகளில இருந்தவைதான், இப்பதான் சுதந்திரமா நடமாட முடியுதென்று கிளிநொச்சியில இருந்து சொல்லினம். நீங்கள் வேணுமென்றால் லண்டனில ஏதாவது ஒரு தெருவையாவது சுதந்திரமாக்கி எடுக்க பாருங்கோ? அதுதான் இப்ப முடியும்.
NANTHA
சுரேந்திரன்!
// புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது தமிழ்த் தேசியம் என்ற கோட்பாட்டில் அதாவது தாயகம், தமிழர் தேசம், தமிழர் இறையாண்மை மற்றும் தமிழர் தன்னாட்சி உரிமை ஆகியவற்றை ஆணித்தரமாக ஆதாரமாகக்கொண்டு அம்முன்னணி அமைக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது//
அப்படியாயின் இந்த ஆட்கள் எதற்காக பொன்சேகாவுக்கு வாக்களிக்கும்படி கேட்டனர்? பொன்சேகா தாயகம், தமிழர் தேசம், தமிழர் இறையாண்மை மற்றும் தமிழர் தன்னாட்சி உரிமை என்பவற்றை ஆதரிப்பதாக கூறியிருக்கிறாரா?
வண. இம்மானுவேலின் உடன் பிறப்புக்கள் வத்திக்கானில்தான் இருக்கிறார்கள். இலங்கையில் அல்ல! பொன்சேகாவுக்கு அளிக்கபட்ட வாக்குகளை எப்படி வத்திக்கானின் பணம்பெறும் இம்மானுவல் “தனது” அமைப்புக்கான வாக்குகள் என்று உரிமை கொண்டாடுகிறார்? வத்திக்கானுக்கும், பொன்சேகாவுக்கும் ஏதாவது “டீல்” இருக்குமோ?
ஆனால் உங்களுடைய அமைப்பில் அதே புலிக் கோஷ்டிகளே இருக்கிறார்கள். வெளிநாட்டுத் தமிழரிடம் “உண்டியல்” தூக்க” மீண்டும் முயற்சிக்கிறீர்கள். என்ன இருந்தாலும் ருசி கண்ட பூனைகள் ஆச்சே!
pagal
. வெளிநாட்டுத் தமிழரிடம் “உண்டியல்” தூக்க” மீண்டும் முயற்சிக்கிறீர்கள்./
தூக்க முயற்சிக்கவில்லை. தூக்கியாச்சு…..முன்னால் புலிகள் இப்போ ரி.என்.எ
சுரேன் சொல்வது உண்மை. மாற்றத்திற்காக மக்கள் வாக்களிக்கவில்லை. மரணத்திற்காக வாக்களிக்கின்றார்கள். இப்போதும்….எப்போதும்….
Ajith
தூக்க முயற்சிக்கவில்லை. தூக்கியாச்சு…..முன்னால் புலிகள் இப்போ ரி.என்.எ
சுரேன் சொல்வது உண்மை. மாற்றத்திற்காக மக்கள் வாக்களிக்கவில்லை. மரணத்திற்காக வாக்களிக்கின்றார்கள். இப்போதும்….எப்போதும்….
pagal
You are right. In Sinhala Sri Lanka, voting tamils for tamil parties means against Sinhala masters interest. Whether you vote or not to tamil parties the end result is massacre of tamils by Sinhalese with the help those joined Rajapakse White van company.
I understand there are some hooligans working with Rajapakse company tarted to collect funds inside and outside Sri Lanka for the permanent establishment of Rajapakse White van company.
NANTHA
What happened to the WHITE VAN after the destruction of LTTE?
Ajith
Still in operation.Waiting for next opportunity.
According to reports from Sri Lanka, both Mr J C Weliamuna and Dr Saravanamuttu are understood to have been placed at the top of a list ranking 35 human rights activists.
john
கடந்தகாலத்தில் உங்கள் புலிகளின் இயக்கத்தில் என்ன நடந்தது தலைவர் இன்னும் இருக்கிறாரா? இல்லையா? பெருந்தொகைப்பணத்திற்க என்ன நடந்தது இதுகளையும் சேர்த்து வண இமானுவேல் சொல்ல வெண்டும் அது என்ன ஒருபக்கத்தை மட்டும் விட்டுவிட்டு வத்திகானை மட்டும் கொண்டுவந்து; சுரேன் உங்கட காலம் முடிந்து விட்டதை உணருங்கள் கொள்ளையிட்ட பணத்துடன் ஒதுங்கிடுங்கள். ஏன் அரசியல் மக்கள் உரிமைகள் என்று பேச ஆரம்பித்தால் புலியிலிருந்து கணக்கு வழக்குகளுடன் பேச ஆரம்பிக்க வேண்டும்.
pulavan
மகிந்தாவும் வெள்ளைவான் கம்பனியும்; அஜித் உண்மையை பரிந்து கொள்ளுங்கள் இந்த வெள்ளைவான் குழுக்களும் புலிகளின் இறுதிக்காலத்தில் யாழில் புலிகளை தேடித் தேடி அழித்தவர்களும் புலிகளே மாத்தையா பிரிவினரும் பின்னடியில் கருணா குழுவினரம் ஒன்று சேர்ந்து பிரபா புலிகளைக் தேடித் தேடி கொலை செய்தனர் இதில் பல முன்னாள் புலிகள் இன்று அரசுடன் துணைப்படையில் உள்ளனர் பிரபாகரனின் மண்டை திறக்கும்போது பக்கத்தே நின்றவர்களன் பெயர்ப்பட்டியலில் முன்னாள் புலிகளும் உள்ளனர் என்பதை மறந்துவிட வேண்டாம்.
இலங்கை அரசை மனித உரிமைமீறல்களுக்கு இழுக்கும் பொதுத இவர்கள் புலிகளின் மனித உரிமைமீறல்களை முன்வைக்க சாட்சியங்களாக வரவுள்ளனர் பொறுத்திருக்கவும் இலங்கை அரசும் இதனை தயார் செய்துவிட்டது இந்திய ஒரு கல்லில் இரண்டு மாங்காய் விழுத்தப்போகிறத எல்லாம் ஒரு செற்றப் கேம் நடக்க இருக்கிறது பொறுத்திருக்கவும்.
இவ்வளவு காலமும் ஈபிடிபி என்றும் வெள்ளை வான்கடத்தல்கள் என்பதற்கும் எந்த வித தொடர்பு இல்லை என்பதம் வெளிவரும் இலங்கை அரசும் முன்னாள் புலிகளும் யாழில் செய்யும் அட்டகாசம் இன்னும் கறைந்தபாடீல்லை காரணம் இவர்கள் எல்லோரம் இலங்கை உளவுப்படையினரே.
பிரபாகரன் புலிகள் தனக்கு மட்டுமல்ல இலங்கை உளவுப்படைக்குமே ஆட்களை பயிற்ச்சி அளித்துள்ளார் இலை எல்லாமே தமிழர்க்கு எதிராகவே செயற்ப்படுகிறது.
thiru
எங்களைப் பொறுத்தவரையில் புலியின் கருணா பிரிவு மாத்தையாபிரிவு திலீபன் பிரிவு சுப பிரிவு பிரபாபிரிவு எல்லாமே பாசிசப்புலிகள் தான் இவர்கள் பயங்கரவாதிகளே
Ajith
Mr John,
Why do you want the information about whether the leader is dead or alive. Why don’t you go and ask your leader Rajapakse and Gotabaya whether they killed real leader or not. It is the right of the people who gave money to that organisation and not the people who is waiting to destroy that orgainsation. Why don’t you go and ask Douglas or Rajapakse about what happened to the money they got from refugees in the camp to release them out of the camp and all those money and goods they stole from tamil people. Have you forgotten the number of businessmen ran away after giving millions to Rajapakse as ransom?
Are you threatening Suren? This is exactly the same technique used by Rajapakse to murder Lasantha, Raviraj, Fonseka and so on. If you are interested in people, go in front of people, don’t hide under the fence and throw the stones to get reward from Rajapakse.
அரஸ்
இலங்கைக்கு இந்தியாதான் பெரும் அச்சுறுத்தல் என்றும் இந்தியாவுக்குப் போட்டியாக இலங்கையின் ராணுவ பலத்தை உயர்த்துமாறு யோசனை கூறியவர் பொன்சேகா. நான்தான் அதை முற்றாக நிராகரித்துவிட்டேன் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அதிபர் ராஜபக்சே சிங்கப்பூர் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
பெடரல் சிஸ்டம் (கூட்டாட்சி முறை) என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. அது பிரிவினையுடன் தொடர்புடையது. கட்டாயம் பிரிவினையில்தான் போய் நிறுத்தும். பெடரல் சிஸ்டத்தை ஆதரித்தால் நான் வீட்டுக்குப் போக வேண்டியதுதான்.
NANTHA
Ajith is writting the usual LTTE propaganda and unable to tell how WHITE VAN syndrome vanished with LTTE. LTTE big mouths cried that EPDP kindnap Tamils. Now he drag story somewhere without giving answer.
Ajith
The answer is clear. It is an election trick.Didn’t you hear missing of journalists who supported Fonseka. Why your government keep Emergency regulations or travel restrictions to independent journalists. You can’t deny they are there? Under which constitution in Sri Lanka white van abductions are legalised. You have no right to criticise until you are clean. People will decide who runs white van company.
News Flash
2007
1. Eight Tamil male civilians have been abducted by unidentified armed men in white vans within seventy two hour period beginning Wednesday, Jaffna branch of Human Rights Commission (HRC) officials said.
Bodies of four youths, abducted earler by Sri Lanka Army 2. (SLA) trooper and collaborating paramilitaries driving white vans, were found in Jaffna district Tuesday morning, civil society sources in Jaffna said.
3. Enforced disappearances in Sri Lanka are the enforced disappearances of civilians in white vans often without number plates.
4. Human rights agencies such as Human Rights Watch and Asian Human Rights Commission have documented that abductions by death squads and pro government militias. 4. The Asian Human Rights Commission (AHRC) has been informed by the Civil Monitoring Commission (CMC) regarding the forcible abduction and disappearance of two men, Satkunarajah Sasindran and Robin Rosten, by armed men in white vans in separate incidents on 8 May 2007 in Colombo. The manner by which these victims were abducted is similar.
innathamby Sivamaharajah was shot dead on 20 August 2006 inside his house which was 300 metres inside the High Security Zone of the Sri Lanka Army in Tellippalai in Jaffna
Nimalrajan was a senior Jaffna based journalist who was shot dead by gunmen in the Sri Lanka Army’s high security zone on 19 October 2000.
On 12 August 2005 Tamil broadcaster Relangi Selvarajah and her husband, a political activist, were killed by unidentified gunmen in Colombo was assassinated.
On 3 May 2006 Suresh Kumar was killed as journalists gathered in Colombo to celebrate Press Freedom Day.
Nadarajah Raviraj, 44, Jaffna district Tamil National Alliance (TNA) parliamentarian was shot in Colombo at 8:30AM on Friday 10 November 2006.
Sathasivam Baskaran – On August 16, driver come distributor of the Jaffna based Uthayan newspaper was shot dead.
NANTHA
Ajith!
You do the same LTTE propaganda!
I asked why no more WHITE VAN kidnappings after the destruction of LTTE? But you have no answer
Ajith
Nantha,
So you agree that the white van abductions and murders are true and carried out by Douglas group and Rajapakse government. Can you explain under which Sri Lankan law those abductions and murders carried out. What you saying is you and your government are above the law and under justice system.
Now white van is concentrating in the South targetting Sarath Fonseka’s supporters.
Political analyst and cartoonist Prageeth Eknaligoda, a journalist for the news site Lankaenews, has been reported missing since the night of January 24.
On May 7, four persons in a white van and wearing SLA uniforms abducted Stephen Sunthararaj, project manager at the Center for Human Rights and Development. Sunthararaj had been held by police with no charges since February and had just been released by the courts, which had ruled that there was no evidence upon which to charge him with a crime. Sunthararaj’s wife received ransom demands in the weeks after his abduction, but she was not able to win his release and received no further word about her husband.
NANTHA
Douglas is still there but no white van kidnappings. LTTE did the kidnappings and now no more kidnappings because LTTE is no more!
Ajith
Douglas is still there. White van threat still there. Temporory stopping does not mean that he has become clean. The matter of the fact the choice of people still LTTE, not the Douglas.
NANTHA
AJITH:
ONLY LTTE PROPAGANDA TELLS “THREATS” BUT NOTHING THERE AS YOU IMAGINE. SOMETIME YOU AS A TIGER SUPPORTER MAY AFARAID TO FACE THE PEACE IN THE TAMIL REGIONS.
BUT TAMILS FEAR THE LTTE THREATS BECAUSE OF THE DIASPORA TAMILS AND THEIR SUPOORT TO THE LTTE CRIMINALS!