யதார்த்தமும் இயலாமையும் – கொன்ஸின் பதில் பின்னூட்டம் : ரி கொன்ஸ்டன்ரைன்

Toilet_Cleaning_Brushஅண்மையில் மதங்களைப் பற்றியும் நம்முடைய நீண்ட நாள் நண்பர்கள் மன்னிக்கவும் தோழர்களை ‘கீ போர்ட் மார்க்ஸிட்’ என வர்ணித்ததும் எழுத்துலகில் மாபெரும் புயலைக் கிழப்பிவிட்டதை நான் நன்குணர்ந்தேன். உண்மையில் இந்த ‘கீ போர்ட் மார்க்ஸிட்’ என்ற சொல்லை நான் உபயோகிக்கவில்லை. இது என் சக நண்பர்களின் திட்டமிட்ட சதி அல்லது அதற்கு பின்ணணியில் ரஷ்ய உளவுப்படை இருந்திருக்க வேண்டும். நான் உபயோகித்த சொல் ‘டொட் கொம் மார்க்சிஸ்டுக்கள்’. என்னுடைய இந்தக் கருத்து சில பிற்போக்கு திரிபுவாதிகளால் மாற்றப்பட்டு என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது நிற்க.

இந்த டொட் .com எனப்படுகின்ற பதம் எங்கிருந்து வந்தது? இது commercial என்பதன் சுருக்கம் தான் இந்த .com. இனியாவது எமது தோழர்கள் இந்த வரலாற்றுத் தவறை தொடர்ந்தும் இழைக்காமல் தமது web siteகளுக்கு டொட் .marx, டொட் .len, டொட் .sta, டொட் .mao என்று பெயரிடட்டும். யாருக்காவது என்னில் பேரன்பு இருந்தால் டொட் .cons என்று வைக்கலாம்.

இனி நம்முடைய தோழர் பாண்டியன் விடயத்திற்கு வருவோம். ஏதோ சிலர் (நான் உட்பட) பெரிய முதலாளி, நாட்டிலுள்ள ஏழை மக்களை சுரண்டப் புறப்பட்ட புறம்போக்குகள் என்று தொடங்கிவிட்டார். நாமும் தோழர் பாண்டியன் போல் வெறுங்கையுடன் இந்த நாட்டிற்கு வந்தவர்கள்தான். கக்கூஸ் கழுவுவது தொடக்கம், கோழி பொரிப்பது, பாண் சுடுவது வரை வேலை செய்தவர்கள் தான். ஒரு வித்தியாசம் சில வேளைகளில் இருக்கலாம். நாங்கள் என்ன வேலை செய்தாலும் எமக்கு வேலை கொடுப்பவனுக்கு சற்று நன்றியுள்ளவனாக இருந்து, நாம் ஏற்றுக் கொண்ட வேலையை முழுதார செய்வது முன்னேற்றத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம். (நீங்கள் எனது நிலையை உயர்வாகக் கருதினால்) அல்லது இன்னொரு காரணம், உங்களது தாழ்வு மனப்பான்மையாகக்கூட இருக்கலாம்.

அல்லது நானும் இந்த நாசமாய்ப் போன முதலாளி எனக்கு இரண்டு பவுண்தானே சம்பளம் தாறான் என்று எனக்குள் எண்ணிக்கொண்டு, மொபைல் போனில் கார்ல் மார்க்ஸ் இறக்கும்போது யாரையாவது வைத்திருந்தாரா? வைத்திருந்தால் அதனை தனது மனைவிக்கு தெரிந்து வைத்திருந்தாரா? அல்லது தெரியாமல் வைத்திருந்தாரா? அவர்களுக்கு பிள்ளை இருக்கிறதா? என விவாதித்துக் கொண்டிருந்தால் கோழியும் கருகிப் போயிருக்கும், முதலாளி வேலையிலிருந்தும் கலைத்திருப்பான். ஏதோ காரணத்திற்காக நான் இந்த வேலையை ஏற்றுக் கொண்டேன். இதுதான் எனது சம்பளம் என்ற யதார்த்த உண்மையை மனதார ஏற்றுக் கொண்டு, ஒழுங்காகக் கக்கூஸ் கழுவியததால்தான் பின் அந்த நிலையத்திற்கு மனேஜராகி பின் அதற்கும் மேலாகப் போக வாய்ப்புக் கிடைத்தது. (சில படிப்பும் கொஞ்சம் உதவும்தான்).

அன்றைக்கு உந்த வேலையெல்லாம் செய்ய மாட்டேன் மார்க்ஸிய கொள்கைப்படி தான் வேலைசெய்வேன் என்று அடம்பிடித்து இருந்தால் நானும் என்னவோ ஆகியிருப்பேன். நைஜீரியாவில் எண்ணை எடுக்கின்ற கொம்பனிகள் எல்லாம் தொழிலாளரை வாட்டுகின்றது, அந்த ஊர் மக்களை வதைக்கின்றனர் என்பதே உண்மை. அதற்காக பிரித்தானியாவில் பெற்றோல் ஸ்ரேசனில் வேலை செய்யமாட்டேன் என்று அடம்பிடிக்க முடியுமா?

மேற்கு நாடுகள் அனைத்துமே முதலாளித்துவ சுரண்டலை மேற்கொள்கின்ற நாடுகளே. எனக்கு முதலாளியாக வேண்டும் என்று சின்னச் சின்ன ஆசைகள் இருந்தது, இங்கு வந்தேன். ஆனால் இலங்கையில் ஒடுக்குமுறைக்கு உள்ளான தமிழ் மக்கள் எதற்காக முதலாளித்துவ நாடுகளை நோக்கி படையெடுக்கின்றனர். மக்கள் சரி படையெடுக்கட்டும். நம்மடை கீபோர் மார்க்ஸிஸ்டுக்கள் மன்னிக்கவும் டொட் கொம் மார்க்ஸிஸ்ட்டுக்கள் ஏன் முதலாளித்துவ நாடுகளை நோக்கிப் படையெடுக்கின்றனர்.

நான் செய்யும் தொழில் hotel, உல்லாசப் பயணம் தொடர்பான தொழில். கடந்த 10 வருடங்களாக எனக்கு இந்தத் தொழில் மூலமாகத்தான் சில அமைச்சர்களின் நேரடித் தொடர்பு கிடைத்தது. சிறீலங்காவில் எனக்கு ஒரு சதம்கூட மூலதனமும் இல்லை, ஒரு சதம் நயமும் இல்லை. நான் எனது அரசியல் நம்பிக்கைகளையும், பொது வேலையையும், தொழிலையும் ஒன்றாகக் கலப்பதில்லை. நீங்கள் உங்களது அனுபவத்தையும் புத்தியையும் மட்டுமே அடிப்படையாக வைத்துக்கொண்டு சேறடிப்பது உங்களுடைய இயலாமையைத்தான் காட்டுகின்றது.

இந்த கம்மியூனிச பலஸ்தீன அடக்குமுறை கதையெல்லாம் அங்கு போய்ப் பார்த்தால் நீங்கள் பேசமாட்டீர்கள். அறியான்மையில் பெரிதுபடுத்திக் கதைப்பதில் பிரயோசனம் இல்லை. சீனாவின் கிராமப் புறங்கள் எல்லாம் சென்று வந்திருக்கிறேன். சீன கம்மியூனிசத்தைப் பற்றி நான் யாரிடமும் கதை கேட்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல் பாலஸ்தீன மக்களின் எதிரி இஸ்ரேலியர்கள் மட்டுமல்ல அல்ல, ஏனைய முஸ்லிம் அரபு நாடுகளும்தான்.

கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது சோசலித்திற்கும் முதலாளித்துவத்திற்கும் வின்சன்ட் சர்ச்சில் கூறிய கருத்து நூற்றுக்கு நூறு வீதம் சரி. ‘‘முதலாளித்துவத்தில் தீமை என்னவென்றால் செல்வங்களை சரியாக பங்கிட்டு கொள்ளாதது. சோசலிசத்தின் நன்மை என்னவென்றால் கஷ்ட துன்பங்களை சரியாக பங்கிடுவது.’’

எங்களுடைய மனத்திருப்திக்கு பிடித்தவற்றை, தத்துவங்களை வாரி வழங்கலாம். ஆனால் யதார்த்தம் என்று ஒன்றிருக்கின்றது. அதை புரியாத போதும், ஏற்றுக்கொள்ள முடியாதபோதும் தான் காழ்ப்புணர்வு மேலோங்குகிறது.

பின்னோட்டம் விட்ட பல பேரும் நண்பர் பாண்டியனும் நான் சிறீலங்காவில் கலந்துகொண்ட மகாநாடுகளைப் பற்றி பல கொன்ஸ்பிரசி தியரிகளை கூறுகிறார்கள். சென்ற வருடம் மார்ச் 9ல் நடந்த மகாநாட்டிற்கு திருமதி ராஜேஸ்பாலா லண்டனில் இருந்து ஆட்களை சேர்த்தார். அதன்படி என்னையும் வருமாறு கேட்டதால் இணைந்து கொண்டேன்.

இந்த வருடம் ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற மகாநாட்டிற்கு கலந்து கொள்ள விருப்பமானவர்கள் என்னை அல்லது டாக்டர் நடேசனை தொடர்புகொள்ளும்படி எமது முழு தொடர்பிலக்கங்களுடன் கட்டுரை வெளியிடப்பட்டது. இக்கட்டுரைகள் இன்றும் ‘தேனீ’, ‘Sri Lanka Guardian’, ‘Daily Mirror’ இணைய ஊடகங்களில் இருக்கின்றது. ஒருவர்கூட என்னை தொடர்பு கொள்ளவில்லை. அதுபற்றி விசாரிக்கக்கூட இல்லை. உண்மை நிலைமை இப்படி இருக்கும்போது ‘இவர்கள் யார்?’, ‘இவர்கள் எப்படித் தெரிவு செய்யப்படுகிறார்கள்?’, ‘இவர்கள் யாரைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள்?’, ‘இவர்கள் பணம் கொடுத்து முக்கியத்துவம் பெறுகிறார்கள்’ என்று கூறுவது உங்கள் அற்பத்தனத்தையும் இயலான்மையையும் கூட படம் இட்டுக் காட்டுகிறது. மீண்டும் அடித்துச் சொல்கிறேன் இங்கு சுத்துமாத்து ஒன்றும் இல்லை. உங்களுடைய இயலான்மையையும் சோம்பேறித் தனத்தையும் தவிர வேறென்ன.

Religious_Conflictஅடுத்து நான் இந்து மதத்தைப் பற்றி எழுதிய குறிப்பு பலரை ஆத்திரப்படுத்தி இருப்பதை நன்குணர்வேன். சில வேளைகளில் சில உண்மைகள் கசப்பாக இருந்தாலும் அதை சொல்லித்தான் ஆக வேண்டும். மதங்கள் அனைத்தும் மக்களின் மூட நம்பிக்கைகளையும், பயத்தையும், பலவீனங்களையும் மூலதனமாகக் கொண்டு கட்டப்பட்ட விடயம்தான். இதில் சந்தேகம் இல்லை. இந்து மதம் குறிப்பிட்ட பிரதேசத்தின் கலை, கலாச்சாரம், பழக்க வழக்கங்களை மெருகூட்டி வளர்த்தது எல்லாம் உண்மைதான். அதேநேரம் இந்து மதத்தில் புரையோடிக் கிடந்த பல விடயங்கள்தான் ஏனைய மதங்கள் வளர உரமிட்டன என்ற வாதத்தையும் மறுக்க முடியாது. நிர்வாகத்திலும் புதிய அம்சங்களை உள்வாங்குவதிலும் கிறிஸ்தவமதம் ஒருபடி முன்நிற்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.

கத்தோலிக்க மதமாக இருந்தால் என்ன அல்லது சக கிறிஸ்தவ அமைப்புக்களாக இருந்தால் என்ன (மெத்தடிஸ்ட், Church of England, Evangelical, Sevenday Appostits, Jevokah witness), அவ் அமைப்புக்களிடம் ஒரு பலமான கட்டுமானத் திட்டம் இருக்கின்றது. அடிப்படை வரையறைகள் இருக்கின்றன. யார் என்ன செய்யலாம் என்ற அடிப்படை உடன்பாடு இருக்கின்றது. அதுதான் இந்த மதங்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

சிக்காக்கோ தொடக்கம் சாவகச்சேரி வரை உள்ள கத்தோலிக்க ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள் பதியப்பட்டு அதில் எத்தனை பேர் படிக்கிறார்கள், எத்தனை பேர் பூஜைப்பலியில் பங்கு கொள்கிறார்கள் என பதியப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஒரு தனிப்பட்டவர் எந்தவொரு கிறிஸ்தவ ஆலயத்தையும் தொடக்கவும் முடியாது. அவ்வாறு தொடர்ந்தால் அது நிலைக்கவும் முடியாது. அவ் அமைப்பின் கட்டுமானம் அப்படி. அது மட்டுமல்லாமல் ஆலயத்தின் பெயரால் சேர்க்கப்படுகின்ற பணம் முழுவதும் மீண்டும் அமைப்புக்குள் உள்வாங்கி பின்னர் அதன் பெரும்பகுதி சமூகத்திற்கு அல்லது குறிப்பிட்ட மதத்தைப் பரப்புவதற்கு உபயோகிக்கப்படுகிறது. இந்த விடயங்கள் உணரப்படாமல் அவன் கள்வன், இவன் கள்வன், போப் ஒரு நாஜி, வண பிதா ஜேம்ஸ் பக்திநாதர் ஒரு புலி என கதை அளப்பது இயலாமையின் வெளிப்பாடும், காழ்ப்புணர்ச்சியின் உச்சக் கட்டமும் தவிர வேறொன்றும் இல்லை.

சரி இப்படியெல்லாம் feel பண்ணுபவர்கள் இந்துமத வளர்ச்சிக்கு என்ன வேலையை ஆணித்தரமாக செய்துள்ளனர் அல்லது செய்து கொண்டிருக்கின்றனர்? ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கு முன் நாங்கள் எல்லோரும் பட்டம் விட்டோம்’ என்ற கதையெல்லாம் ‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில்…..’ என்ற கூட்டணி சென்ரிமென்டைவிட வேடிக்கையானது. குறைவான வாடகைக்கு பலகாலம் மூடிக்கிடந்த தவறனையை (Pub), பலசரக்குக் கடையை வாங்கி அதை ஏதோவொரு ஆலயம் என்று பெயரிட்டு வருடாவருடம் இந்தியாவிலிருந்து சுகிசிவத்தை வரவழைத்து அவருடைய அலம்பலை குந்தியிருந்து கேட்டுவிட்டுப் போவதால் மட்டும் மதம் வளர்ந்து விடாது.

கிறிஸ்தவம் உட்பட மதங்கள் அனைத்தும் ஒரு பேய்க்காட்டு மாய வித்தைதான். அது அழியவும் மாட்டாது. அழிக்கப்படவும் முடியாது. ஆனால் இந்த மத நிறுவனங்கள் எவ்வாறு சமூகத்திற்கு அதிக பலனைக் கொடுக்கும் என்பதிலேயே கவனம் செலுத்தப்படல் வேண்டுமே தவிர, வேறொன்றும் பயனைத் தராது.

சிலருக்கு தண்ணி அடிப்பதில் ஒரு சந்தோசம், ஒரு மனநிறைவு! சிலருக்கு மார்க்சிசம் கதைப்பதில் ஒரு மனமகிழ்ச்சி! இன்னும் சிலருக்கு தண்ணி அடித்து மார்க்சிசம் கதைப்பதில் பரமதிருப்தி! ஆனால் பலருக்கோ கோயில் சென்று தரிசிப்பதில் உள மகிழ்ச்சி, நிறைவு. இருந்துவிட்டு போகட்டும் பிரச்சினையில்லை. மனிதம் என்றாலே பலவீனம்தானே. இதில் நாம் மட்டும் விதிவிலக்கா என்ன?

300 வருடங்களுக்கு முன் பாதிரி வந்து எங்களை சுத்திப் போட்டார்கள் என்ற வாதத்தில் உண்மை இருக்கலாம். அதே கதையை இப்போதும் அளப்பது கிறிஸ்தவ மதங்களின் கெட்டித்தனத்தை காட்டுவதைவிட மற்றைய மதங்களின் பலவீனத்தைத்தான் காட்டுகிறது. இந்து மதத்தினர் எல்லாம் சரியான ‘இனசன்ட்’ என்று ஜோக் அடித்துவிட வேண்டாம்.

300 வருடத்திற்கு முன் போவானேன். இன்று லண்டனிலுள்ள இந்து ஆலயங்கள் என்ன செய்கின்றது. ‘உயர்வாசக் குன்று’ என்று அழகாக அழைக்கப்படும் ஆச்சுவே முருகன் ஆலயம் ஆலயத்திற்கு முன்னால் உள்ள கடைகளை வாங்கி வாடகைக்கு விட்டுள்ளது. நாகபூசனி அம்மன் ஆலயம் புலிகளின் வருமானத்திற்காகக் கட்டப்பட்டது. . ரூட்டிங் சீவரத்தினம் ஐயாவின் முத்துமாரி அம்மன் ஆலயம் புலிகளை வளர்ப்பதாக என்று கூறிக்கொண்டாலும் சீவரத்தினம் ஐயா தன்னையும் சேர்த்து வளர்த்துக் கொண்டார். இல்பேர்ட் தூள் விநாயகர் சொல்லவே வெண்டாம். இலண்டனில் உள்ள ஆலயங்களின் வருமானத்தில் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் தாயக மக்களுக்காக பல்வேறு பணிகளை முன்னெடுக்கின்றது. ஏனையவை தங்கள் வருமானத்தில் எத்தனை சதவீத வீதத்தை திரும்பவும் அந்த மக்களின் நலனுக்காக செலவிடுகின்றன.

கிறீஸ்தவ மதம் ஒன்றும் புனிதமான மதம் கிடையாது. அவர்களும் ஆயுதக் கொம்பனிகளில் முதலீட்டை வைத்துள்ளனர். இங்கு நான் எந்த மதத்திற்கும் நற்சான்றிதழ் வழங்க கட்டுரை எழுதவில்லை. கிறிஸ்தவ மதம் கள்வர் காடையரின் மதம் என்பதுபோல் பின்னூட்டம் விட்ட நண்பர்களின் கருத்தை கவனத்தில் எடுத்தால் என் மனைவி பத்தினிதான் ஆனால் சூனியக்காரன்தான் வசியம் செய்துபோட்டான் என்ற மடமையான கருத்துக்கு ஒப்பானது. அதனையே இங்கு சுட்டிக்காட்டினேன்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

22 Comments

  • palli
    palli

    மீண்டுமா ஒரு புயல்; உங்களை நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டீர்களா??

    Reply
  • Sivam
    Sivam

    “உன்னைத் திருத்திக்கொள். சமூகம் தானாக திருந்திக்கொள்ளும்.”

    Reply
  • Kalai
    Kalai

    ஊருக்குத்தானே? இந்த உபதேஸம்.
    வண ….. கொன்ஸ் நான் உங்கள் கருத்த முழுமையுடன் ஆதரிக்கிறேன்.ஆசீர்வதைப்பீரே ஆண்டவரெ! ஆள்பவரே!!

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    அப்போது, கஷ்டப்பட்டு, சுத்தமாக “டாய்லட் கழுவினால்தான்” மினிஸ்டரையெல்லாம் சந்திக்கக்கூடிய அளவுக்கு முன்னேறமுடியும் என்கிறீர்கள்!. அதைவிட மிகவும் கஷ்ட்டப்பட்டு, “சுதந்திரத்திற்கு எல்லாம் போராடினால்” அமைச்சர்களையெல்லாம் பார்க்கமுடியாது என்பதே, “எதார்த்தம்” என்கிறீர்கள்!, ஒத்துக் கொள்கிறேன் ஆண்டவரே!. எல்லாம் “எக்சேஞ் ரேட்” செய்த புண்ணியம்!. இரண்டு பவுண்டானாலும், இலங்கை ரூபாய்க்கு, 130 ரூபாவாச்சே, 130 ரூபாவாச்சே!.
    இலங்கைப் பணத்தில், இலங்கையில் சம்பளம் கொடுத்தல், “டாய்லட் கழுவி பேர் வங்கும் புலவராக” மாறுவீர்கள?!. இக்கட்டுரையில் வரும் படத்தைப் பார்த்தால் “பிரிட்டிஷ் டமில் போரத்திற்கு” மகாராணி கொடுத்த கேடயம் போலுள்ளதே?.

    Reply
  • T Constantine
    T Constantine

    Democracy
    Remember – Karuna is a Minister now / Duglas is a senior Minister / Pillayan is a Cheif Minister

    Having bit of brain some time useful as well.!!

    Reply
  • Pandiyan Thambiraja
    Pandiyan Thambiraja

    கொன்ஸ்ரன்ரைன் அவர்களே! நீங்கள் ரொம்ப நல்லவர் அண்ணே! இந்த களேபரத்திற்குள் உங்களை நீண்ட காலமாக காணவில்லை நாட்டில் அபிவிருத்தியை தொடங்கி விட்டீர்கள் என முட்டாள்தனமாக நினைத்து விட்டேன்.

    முதலில் இந்த கீபோட்……விடமாட்டார்கள் போலிருக்கிறதே! மாஸ்கோவில் மழை பெய்தால் மானிப்பாயில் குடை பிடிக்கும் அந்த கூட்டத்துடன் எனக்கு உடன்பாடில்லை என்பதை முன்னரும் நான் பதிவு செய்துள்ளேன். இந்த புத்தக புழுக்கள் எவ்வாறு ஒரு பிரச்சனையை மாக்ஸிஸ அடிப்படையில் பார்க்கின்றார்கள் என்றால் ஒன்றுக்கு ஒன்று முரணாக, எதிர் எதிர் கருத்துக்கள் வருமாறு பல அணிகளாக பிரிந்து பேசுகின்றார்கள். எழுதுகிறார்கள். ஆனால் பிரச்சனை என்னவென்றால் புலிகள் இருக்கும் வரை இவர்களை விமர்சிக்காமல் இப்போது விமர்சனம் செய்வது எங்கோ உதைக்கிறது.

    சினிமாவில் ரஜனிகாந்த் பால் விற்று கிரனேட் கல் விற்று பணக்காரன் ஆகிய மாதிரி நீங்களும் சொல்வது ரொம்ப ரூமச்! எனக்கு தெரிந்தும் தெரியாமலும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கோழி பொரித்தும் பாண் சுட்டும் கக்கூஸ் கழுவியும் இருக்கிறார்கள். ஆனால் உங்களைப் போன்று (வசதியாக நீங்கள் இருப்பின்) எத்தனை வீதமானோர் உயர்வடைந்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் தான் கூறவேண்டும்.வேலை கொடுத்தவனுக்கு நன்றியுள்ளவனாக நீங்கள் மாத்தரமே இருந்ததாக தயவு செய்து எண்ண வேண்டாம்.

    மேலும் நீங்கள் ராஜேஸ் அக்காவின் அழைப்பை ஏற்று இலங்கை சென்று வந்து எழுதிய கட்டுரைக்கு பதில் கட்டுரையில் நண்பர் வடக்கான் ஆதாம் கேட்ட கேள்விகளுக்கு இன்றுவரை பதில் கூறவில்லை. அங்கு போய் பேசியது என்னவென்று எங்களுக்கு கூற மறுத்து சண்டித்தனம் செய்வது அழகல்ல. முன்பு கொழும்பை தலமையாக கொண்ட தமிழ் தலமைகள் வடக்கு கிழக்கு மக்களின் பிரதிநிதியாக இருக்கிறார்கள் என குறைகண்ட நீங்களும் உங்கள் நண்பர்களும் இப்போது லண்டன், பரீஸ் ,நியுயோர்க், கன்பரா என மையம் கொண்டு தலமை கொடுக்க நினைப்பது கொடுமை!! நீங்கள் சென்றதை குறை கூறவில்லை. ஆனால் உங்கள் நோக்கம் பற்றி அறியும் முழு உரிமையும் எமக்கு உண்டு. அத்துடன் சென்ற நபர்கள் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. பெயர் தெரிந்த நபர்கள் எல்லாம் கடந்த தேர்தலில் தோழர் மகிந்தவை ஆதரித்தார்கள் என்பதிலிருந்து உங்களது நோக்கம் எமக்கு ஓரளவிற்கு தெரியும். நாங்கள் கணித்த கணிப்பு மிக சரியானதே.

    Reply
  • gopal
    gopal

    கொன்ஸ்ரன்ரைன் சரியாய்த்தான் சொன்னீங்கள் bit of brain இருப்பவர்கள்தான் மினிஸ்டராக முடியும்

    Reply
  • மேளம்
    மேளம்

    //அவ் அமைப்புக்களிடம் ஒரு பலமான கட்டுமானத் திட்டம் இருக்கின்றது. அடிப்படை வரையறைகள் இருக்கின்றன. யார் என்ன செய்யலாம் என்ற அடிப்படை உடன்பாடு இருக்கின்றது. அதுதான் இந்த மதங்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைகின்றது//. கட்டுரையாளர்.

    >யார் என்ன செய்யலாம் என்ற அடிப்படை உடன்பாடு இருக்கின்றது>.கோவிந்தா.. கோவிந்தா… அதுதான் ஜேர்மனியும்- சுவிசும் கடந்த ஒருவாரமா நாறுதே….. பாதிரிமார்…. பொடியன்மார் புடிச்சி… தட்டுக்கோடு விளையாடின லீலைகள்….. வெளிச்சத்துக்கு வந்து….. ஐயகோ! கொங்சம் தாங்கள் தாங்கள் வாழ்கின்ற நாட்டுல என்ன நடக்குதெண்டு கொங்சமாது…. அந்த நாட்டுமொழி டீவி> றேடியோ> இதுகளையும் கொஞ்சம் பாத்திட்டு…. கேட்டிட்டு…. எழுதுங்கோ எப்பயும் இந்த 300 வருச கதையமட்டும் சொல்லப்படாது… எழுதப்படாது.

    மேளம்

    Reply
  • மாயா
    மாயா

    //மேளம் on March 23, 2010 7:55 pm ஐயகோ! கொங்சம் தாங்கள் தாங்கள் வாழ்கின்ற நாட்டுல என்ன நடக்குதெண்டு கொங்சமாது…. அந்த நாட்டுமொழி டீவி> றேடியோ> இதுகளையும் கொஞ்சம் பாத்திட்டு…. கேட்டிட்டு…. எழுதுங்கோ //

    மேளத்துக்கு , இந்த மத்தளம்….
    சுவிஸ் புதுமைகளில் , ரவி சங்கர சாமியாரை புலிகள் அழைத்து பெரிசா உண்டியல் குலுக்க முடியல்லயாம். சாமியாரே , 400 பேர் கூட வரவில்லை என்று பகிரங்கமாக கூட்டத்தில் சொன்னாராம். எத்தனை ஆயிரம் ஜெனீவாவில போய் கத்தினாங்க. கொடி மரம் ஏறினாங்க. இப்ப நிலமையே மோசமாகிட்டுது.

    இதுக்குள்ள சுவிஸ் திருமண வீடொன்றில் நடந்த கலகலப்பு. சே…கைகலப்பை சுவிஸ் தின ஏடுகளும் , தமிழ் இணையங்களும் இப்படிக் கொண்டு வந்துள்ளன. athirady.info/2010/03/23/64374?xssid=8r7e4g54fdx78rg5f4

    Reply
  • palli
    palli

    // இவன் கள்வன், போப் ஒரு நாஜி, வண பிதா ஜேம்ஸ் பக்திநாதர் ஒரு புலி என கதை அளப்பது இயலாமையின் வெளிப்பாடும், காழ்ப்புணர்ச்சியின் உச்சக் கட்டமும் தவிர வேறொன்றும் இல்லை//

    //வருடாவருடம் இந்தியாவிலிருந்து சுகிசிவத்தை வரவழைத்து அவருடைய அலம்பலை குந்தியிருந்து கேட்டுவிட்டுப் போவதால் மட்டும் மதம் வளர்ந்து விடாது.//

    மேலே பேசிய கட்டுரையாளர் கீழே ஏன் ஏசி உள்ளார், இவரா ஒரு சமூகம்பற்றி சிந்திக்க முடியும்; சுகி சிவத்தின் கருத்தும் சிலருக்கு பிடிக்கும் என்பதை இவர் மறுப்பதால் இவருக்கு ஏழு செவ்வாய் உண்டு;

    .//“உன்னைத் திருத்திக்கொள். சமூகம் தானாக திருந்திக்கொள்ளும்.”//
    இது எமக்காக சொல்லியதானால் சிவம் எமது பல பின்னோட்டத்தை கவனிக்கவில்லை போலும்; இருப்பினும் பொதுவாக சிவத்தின் கூற்று நியாயமானதுதான்;

    //எழுதுங்கோ எப்பயும் இந்த 300 வருச கதையமட்டும் சொல்லப்படாது… எழுதப்படாது//
    மேளம் இதை சத்தமாய் சொல்லுங்கள் பலருக்கு காது கேளாது;

    Reply
  • kalaignar
    kalaignar

    http://news.bbc.co.uk/1/hi/world/europe/8578064.stm
    Pope’s sex abuse letter breaks Vatican taboo
    In an unusual Vatican document, Pope Benedict has issued a heartfelt personal apology to the people of Ireland and to thousands of victims of sexual abuse in past decades by Roman Catholic priests there.
    About 15,000 Irish people who attended church-run schools and institutions when they were children and claim to have been abused by priests and teachers have received so far over one billion euros in compensation from a state redress board
    ……………………

    Reply
  • kalai
    kalai

    கொன்ஸ்ரன்ரைனுக்கு முதலிடுகள் (Investment) பற்றி நல்லாகவே தெரிந்திருக்கிறது எந்தக்கோயில் எங்கே கடை வாங்கியிருக்கிறது என்று வரிகிரமாக சொலுறார். எனக்கும் நிறைய ஆசைகள் மனதில் உண்டு. ஆனால் பிறந்த ராசியோ தெரியேலை ஒண்டுமே சரி வருகுதில்லை.உழைக்கிற காசு வீட்டு வாடகைக்கும் பில் கட்டவும் தான் காணக் குடியாத இருக்கு. இதர செலவுக்கு Tax Credit £212.60,Child Benefit £ 140.00 per month ய் வைத்து குடும்பத்தை கொண்டு நடத்திறதே பெரிய திண்டாடமா இருக்கு. எனது காரை ராதாவிடம் கொண்டுபோனால் சொல்லுவாங்கள் உதை இரும்பு விலைக்கு வித்துட்டு ஒரு “கார் ” வாங்கு என்று. அரசாங்கம் என் காருக்கு £2000.௦௦ கொடுக்குதாம் அதுவும் ஏழு நாளையிலை காலாவதியாகுது. தலை கிழா நின்றாலும் புது கார் வாங்க முடியாது. ஆசை தான் முடவன் கொம்பு …..?

    ஊரிலை க.பொ.த சித்தியடந்துவிட்டு 1989 March உக இற்கு வந்தனான். Basic Computer skil, English as second Language, Foundation course, Health &safty, Food hygiene, Maual handling என கொஞ்சம் தேவைக்கு படித்துவிட்டு வேலை செய்யிறேன். கொன்ஸ்ரன்ரைனுக்கு Investment விபரம் தெரிந்த மாதிரி எனக்கு Cleaning விபரம் நல்லா தெரியும்.(தொழில் ரீதியா) Fairy liquid உடன் Bleach கலந்து கோப்பை கழுவினால் பளிச் என்றிருக்கும்(Mixing chemical May harm to Lungs,May releases dangerous gases; All ways follow the HS) என்பதுவும் தெரியும். Bathroom,kitchen tiles, Taps clean பண்ண Water Marks போக என்ன chemicals உபயோகிக்க வேணும், Toilet Lime scale போக என்ன செய்ய வேணும் என நல்லா சுத்தம் பண்ணி முதலாளி இடம் நல்ல பெயர் வாங்கியாச்சு. மேலை வர வேணும் எண்டு சக தொழிலாளியையும் போட்டும் குடுத்தாச்சு என்னத்தை செய்தாலும இந்த இருபது வருசமா ஏழுலை வியாழனும் அட்டமத்திலை சனியனும் மாறி மாறி குந்துதுகள்.

    Reply
  • NANTHA
    NANTHA

    //சிக்காக்கோ தொடக்கம் சாவகச்சேரி வரை உள்ள கத்தோலிக்க ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள் பதியப்பட்டு அதில் எத்தனை பேர் படிக்கிறார்கள், எத்தனை பேர் பூஜைப்பலியில் பங்கு கொள்கிறார்கள் என பதியப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஒரு தனிப்பட்டவர் எந்தவொரு கிறிஸ்தவ ஆலயத்தையும் தொடக்கவும் முடியாது. அவ்வாறு தொடர்ந்தால் அது நிலைக்கவும் முடியாது. அவ் அமைப்பின் கட்டுமானம் அப்படி. அது மட்டுமல்லாமல் ஆலயத்தின் பெயரால் சேர்க்கப்படுகின்ற பணம் முழுவதும் மீண்டும் அமைப்புக்குள் உள்வாங்கி பின்னர் அதன் பெரும்பகுதி சமூகத்திற்கு அல்லது குறிப்பிட்ட மதத்தைப் பரப்புவதற்கு உபயோகிக்கப்படுகிறது. இந்த விடயங்கள் உணரப்படாமல் அவன் கள்வன், இவன் கள்வன், போப் ஒரு நாஜி, வண பிதா ஜேம்ஸ் பக்திநாதர் ஒரு புலி என கதை அளப்பது இயலாமையின் வெளிப்பாடும், காழ்ப்புணர்ச்சியின் உச்சக் கட்டமும் தவிர வேறொன்றும் இல்லை.//

    போப் ஒரு நாசி என்பது உலகார்ந்த உண்மை. பாதிரி ஜேம்ஸ் பத்திநாதன் அடைக்கலம் கேட்ட சிறுவர்களை புலிகளிடம் கொடுத்துவிட்டு தல மறைவாகி பின்னர் யுத்த சூனியப் பிரதேசத்தில் புலிகளோடு மீண்டும் “பிள்ளை” பிடிக்க திரிந்தவர். அவை உண்மையின் வெளிப்பாடுகளே தவிர வேறொன்றுமில்லை.

    கிறிஸ்த ஆலயங்கள், அவற்றின் மதம் பரப்பும் விளையாட்டுக்கள் என்பன நிறுவன மயப்படுத்தப்பட்டவை. இலாபம் நோக்கி செயல் படுபவை. அவற்றுக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம் என்று கொன்ஸ்டன்டையின் திருவாய் மலர்ந்தால் நல்லது.

    கிறிஸ்தவ /கத்தோலிக்கர்கள் காட்டாத காழ்புணர்வை இங்கும் யாரும் காட்டவில்லை. கொலைகாரர்களோடு பாதிரிகள் ஒட்டி உறவாடியதில் எத்தனை கோடி பணம் சம்பாதித்து இப்போது “உல்லாச பயண” விடுதிகள் கட்ட அலைகிறார்கள் என்று தெரிவித்தால் நல்லது.

    ஆயினும் மதங்கள் பற்றி சில உண்மைகளை சொன்னதில் எனக்கும் உடன்பாடு உண்டு.

    நான் வாழும் கனடாவில் பாதிரிகளின் “செக்ஸ்” விளையாட்டுக்களால் பல மேற்றிராசனங்கள் “பூட்டப்பட்டு” வெகு காலமாகிறது. நஷ்ட ஈடு கொடுத்து மாளவில்லை.

    பாதிரிகளின் உபத்திரவங்கள் தாங்க முடியாமல் மேற்கு நாடுகள் பாதிரிகள் மீது பாதிக்கப்பட்டவர்கள் ஐம்பது ஆண்டுகள் கடந்தாலும் வழக்கு தொடரலாம் என்றும் நஷ்ட ஈடு கோரலாம் என்றும் சட்டம் கொண்டு வந்துள்ளன. அதனால் பாதிரிகளுக்கு மேற்கு நாடுகள் இப்போது லாபம் காட்டுவதை விட நஷ்டத்தையே கொடுக்கின்றன.

    அதனால்த்தான் போப் தனது “அறுவடை” இந்தியாவிலும் இலங்கையிலும் என்று அறை கூவியதை ஞாபகமூட்ட விரும்புகிறேன். அப்படி சட்டம் இல்லாத நாடுகள் பாதிரிகளின் “அறுவடைக்கும்” பணம் திரட்டவும் அதிக சந்தர்ப்பம் வழங்குகின்றன.

    “கடவுள்” வியாபாரம் முதல் அதிகம் தேவையில்லாத ஒன்று. லாபம் வந்தால் கடவுள் அருள் பாலிக்கின்றார். நஷ்டம் வந்தால் “பாவிகளுக்கு” தண்டனை கொடுக்கிறார். அவ்வளவுதான் என்று ஒரு பிரசங்கம் போதும்.

    கடவுள்(பக்தி) வியாபாரத்தின் இறுதி முடிவு அதுவே!

    //கிறிஸ்தவம் உட்பட மதங்கள் அனைத்தும் ஒரு பேய்க்காட்டு மாய வித்தைதான். அது அழியவும் மாட்டாது. அழிக்கப்படவும் முடியாது. ஆனால் இந்த மத நிறுவனங்கள் எவ்வாறு சமூகத்திற்கு அதிக பலனைக் கொடுக்கும் என்பதிலேயே கவனம் செலுத்தப்படல் வேண்டுமே தவிர, வேறொன்றும் பயனைத் தராது.//

    இலங்கையில் விசேடமாக தமிழ் பேசுபவர்களுக்கு மத நிறுவனங்களால் நஷ்டம் மாத்திரம் கிடைத்துள்ளது. ஆயினும் லாபம் அடைந்தவர்கள் பாதிரிகளும் வெளிநாட்டு ஆயுத வியாபாரிகளும் மாத்திரமே என்பதும் உண்மை!

    ஐநூறு வருடங்களாக “அரசியல்” பலத்தோடு கிறிஸ்தவ நிறுவனங்ககள் இயங்கியதன் மூலம் அவர்களால் பலவற்றை சாதிக்க முடிந்துள்ளது. சுதந்திர இலங்கையில் இந்து/பவுத்த மதங்களின் செல்வாக்கு தொடங்கியவுடன் பாதிரிகள் “தமிழுக்குள்” புகுந்து அரசியல் பண்ணி மீண்டும் லாபம் அடைந்துள்ளனர். அதன் ருசியை தொடரவே “தமிழர் பேரவை” என்று பாதிரி இம்மானுவல் அலைகிறார்!

    Reply
  • BC
    BC

    //கொன்ஸ்ரன்ரைன்- மேற்கு நாடுகள் அனைத்துமே முதலாளித்துவ சுரண்டலை மேற்கொள்கின்ற நாடுகளே. எனக்கு முதலாளியாக வேண்டும் என்று சின்னச் சின்ன ஆசைகள் இருந்தது இங்கு வந்தேன்.//
    மாக்ஸிஸவாதிகள் ஏன் மேற்கு நாடுகள் வந்தார்கள் என்ற உண்மையை வெளிப்படையாக போட்டு உடைத்துள்ளீர்கள்.

    //அது அழியவும் மாட்டாது. அழிக்கப்படவும் முடியாது. ஆனால் இந்த மத நிறுவனங்கள் எவ்வாறு சமூகத்திற்கு அதிக பலனைக் கொடுக்கும் என்பதிலேயே கவனம் செலுத்தப்படல் வேண்டுமே தவிர வேறொன்றும் பயனைத் தராது.//
    அது எப்படி? மற்ற இனத்தவர்களில் சேர்ச்சுக்கு போவோரின் தொகை வீழ்ச்சியடையும் போது தமிழர்களில் மட்டும் கோவிலுக்கும் சேர்ச்சுக்கும் அதிகரிப்பதேன்? அதுவும் சைவ கடவுளை கும்பிட்டுவிட்டு யேசுவை கும்பிடுவது ஏன்? (தேசம் ஆசிரியர் ஜெயபாலன் சொன்ன மாதிரி மாற்று மதத்தையும் மதிக்கப் பழகி உள்ளனர் என்பது ஏற்க முடிவில்லை.)

    Reply
  • thurai
    thurai

    //இலங்கையில் விசேடமாக தமிழ் பேசுபவர்களுக்கு மத நிறுவனங்களால் நஷ்டம் மாத்திரம் கிடைத்துள்ளது. ஆயினும் லாபம் அடைந்தவர்கள் பாதிரிகளும் வெளிநாட்டு ஆயுத வியாபாரிகளும் மாத்திரமே என்பதும் உண்மை!//நந்தா

    மேல்குல இந்துக்களிற்கு நஸ்டமேற்பட்டதென்பதே உண்மை. அல்லாவிடில் இன்று இந்துக்களால் தாழ்த்தப்பட்டவ்ர்களிற்கு
    தமிழனாகப் பிற்ந்தும் தமிழ் வாசிக்க முடியாத நிலமைதான் இருக்கும். பாதிரிகளின் பாடசாலையில் படித்த தமிழர்களே
    சாதியிற் குறைந்தவர் கல்வியில் மேம்படுவதைப் பொறுக்கமுடியாமல் விசமூட்டி கொன்ற சம்பவங்கழுமுண்டு.

    உலகமுழுவதும் இந்துக்கோவில் கட்டிய புலிகளிற்கு உண்டியலை நிரப்பி ஆயுத வியாபாரம் செய்தவர்களில் முதலிடம் இந்துக்களேயாகும். பாதிரிகள் இரண்டாமிடமாகும்.

    நந்தா குறிப்பிடும் தீய செய்ல்கள் குறிப்பாக பாதிகளையேயாகும். இந்துக்களாகவிருந்து உலகமுழுவதும் மோசடிகள் செய்துவாழும் ஈழப்பிறப்பான இந்துக்களை நந்தாவிற்குத் தெரியாதா?

    கொடிய குணங்கழும் உலக மனித சமூகத்தால் ஏற்கமுடியாத பழக்க வழக்கங்கழும் இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தமிழரிடமேயுண்டு. தாழ்த்தப்பட்டவரின் இந்துகோவிலிற்கு உயர்சாதிகள் போகப் படாதென்று புலத்தில் விள்ம்பரப்படுத்திய இந்துக்கள் யாரையாவது உலகில் குற்ரம் சுமத்த தகுதியற்ரவர்கள்.

    நந்தா ஓர் இந்துவாக இருப்பினும் ஈழத்து இந்துகுலம். தமிழரை சிங்களவர் கொடுமைப் படுத்தியதை விட தமிழரைக் கொடுமைப் படுத்தியது ஈழ்த்து இந்துகுலமே என்பதை மறக்கவேண்டாம்.

    துரை

    Reply
  • Hazan
    Hazan

    லண்டன் கோயில்கள் பக்தர்களிடம் சுரண்டிய பணத்தை தாயகத்துக்குச் செலவிட வேண்டும் அங்கு இன்வெஸ்மென்ட் செய்ய வேண்டும் என்பதுதான் கொன்ஸ்ரன்ரைனின் கவலை. அப்படிச் செய்யும் பட்சத்தில் இவர்களின் சுத்துமாத்துக்களை கொன்ஸ்ரன்ரைன் மூடிமறைத்து விடுவார். ரில்கோ புறப்பட்டியுடன் சேர்ந்து செய்யும் பிஸ்னஸ் மாதிரி எனலாம். ரில்கோவும் கோயில்கள் மாதிரி தமிழ்ச் சனத்தின் காசைச் சுத்தியது மட்டுமல்ல புலிகளுடனும் சேர்ந்தும் உழைத்தது. வணங்காமண் ரில்கோ திலகரின் லேற்ரஸ்ட் சுத்து. அவர் இப்போ யாழில் கொட்டல் கட்டுவதால் கொன்ஸ்ரன்ரைன் அவையைப் பற்றிக் கதைக்கார். கோயில்காரரும் தாயகத்தில் கொட்டல் கட்டினால் புலிக்கதையோ தூள்க் கதையோ கதைக்க மாட்டீங்கள்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    துரை,
    //…உலகமுழுவதும் இந்துக்கோவில் கட்டிய புலிகளிற்கு உண்டியலை நிரப்பி ஆயுத வியாபாரம் செய்தவர்களில் முதலிடம் இந்துக்களேயாகும். பாதிரிகள் இரண்டாமிடமாகும்…..//

    ///…தமிழரை சிங்களவர் கொடுமைப் படுத்தியதை விட தமிழரைக் கொடுமைப் படுத்தியது ஈழ்த்து இந்துகுலமே என்பதை மறக்கவேண்டாம்./….//

    இரண்டு நாட்களின் முன்னர்தான் ’தனிமனிதன்’, ‘முன்னேற்றம்’, ‘உழைப்பு’ எனக் கதைத்தீர்கள். இப்ப என்னவென்றால் முதலிடம் இந்துக்கள் என ‘குழு’ வாக இணைத்து இழுத்து வீழ்த்திகிறீர்கள். ஒ…..இதுக்குள் புலிச்சிந்து பாடக்கூடியதாக இருக்கிறதல்லவா? அதுதான் சங்கதி!
    பாவம் நீங்களும் என்னதான் செய்தாலும் பழைய ‘புலிக்காச்சல்’ துரத்துகிறது போல்!

    Reply
  • Seran
    Seran

    பாண்டியனுக்கு சேரன் அனுப்பும் ஓலை

    சினிமாவில் ரஜனிகாந்த் பால் விற்று கிரனேட் கல் விற்று பணக்காரன் ஆகிய மாதிரி நீங்களும் சொல்வது ரொம்ப ரூமச்! என்று தாங்கள் எழுதியிருப்பதை கடுமையாக ஆட்சேபிக்கின்றேன்.

    சினிமாவில் ரஜனிகாந்த் பால் விற்று கிரனேட் கல் விற்று பணக்காரன் ஆகிய மாதிரி நீங்களும் சொல்வது “கொஞசம் ரூமச்! ” என்று எழுதுவதே சரியானது. இந்த தவறை உணர்ந்து திருத்திக்கொள்ளாத பட்சத்தில் பாண்டியனின் உடமைகளான பறட்டைத்தலைமுடியும், தாடியும் சேரப்பேரரசால் பறிமுதல் செய்யப்படும்.
    உத்தரவு பிறப்பித்த நாள் 25.3.2010

    சேரன்
    பேரரசு

    Reply
  • NANTHA
    NANTHA

    வத்திக்கானும் ஆயுத உற்பத்தி கம்பனிகளில் முதலிட்டுள்ளது என்று கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார். எனவே வத்திக்கானின் பிரதிநிதிகளான பாதிரிகள் புலிகளோடு சேர்ந்தது எதற்காக என்று தெரிகிறது. எனவே பாதிரிகளின் “தமிழ்” போர்வை ஆயுத விற்பனை மூலம் வத்திக்கானுக்கு பொருளீட்டுதலும் என்பதே உண்மை.

    பாதிரிகளின் “போர்த்துக்கீசர்” காலத்திலிருந்து படித்தவர்கள் பற்றி பார்த்தால் மதம் மாறியவர்களும், அந்நியர்களுக்கு விசுவாசமனவர்கலுமே என்று தெரிய வரும்.

    வெள்ளைகளின் ஆட்சி போன பின்னர்தான் பாதிரிகள் “தாழ்த்தப்பட்ட’ மக்கள் பற்றி கதைக்கத் தொடங்கினார்கள். ஆனால் பாதிரிகள் “சாதி” பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

    பண்டாரநாயக்காவின் பாடசாலைகள் தேசிய மயமாகலின் பின்னரே அனைவரும் தங்கள் மதங்களை மாற்றாமல் கல்வி பெறுகின்றனர்.

    அந்நிய நாட்டு கிறிஸ்தவர்களின் ஆட்சியில் கூட “உயர் சாதிகள்” என்பவர்களே படித்தும் பதவிகளிலும் இருந்தார்கள். இல்லை என்பீர்களா? அது எப்படி?

    Reply
  • thurai
    thurai

    //அந்நிய நாட்டு கிறிஸ்தவர்களின் ஆட்சியில் கூட “உயர் சாதிகள்” என்பவர்களே படித்தும் பதவிகளிலும் இருந்தார்கள். இல்லை என்பீர்களா? அது எப்படி?//நந்தா

    அந்நியர் வருமுன்பே தமிழரிடையே இருந்த இந்து குல உயர் சாதிகளெனப்படுவோர் மற்ர சமூகஙக்ளைச் சேர்ந்தவர்களை கல்வியறிவில் மேம்படாமல் தாழ்த்தி அடிமைகளாக்க முற்பட்டனர். ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழ் கல்வியறிவில் ஏற்கன்வே மேம்பாடடைந்த்வர்கள் ஆங்கிலேயர்களிர்கு ஏவலராக (சிற்ரசர்களாக) பத்விகளைப் பெற்ரார்கள். ஏலுமானவரை தங்கள் பதவிகளிலிருந்து கொண்டே சாதிப்பாகுபாட்டை கடைப்பிடித்தனர்.

    ஆங்கிலேய பாதிரிகள் சாதிப்பாகுபாட்டை உடைத்தெறிந்து தாழ்த்தப்பட்டோர் படித்து மேலோங்குவதற்கு வழிவகுத்தன்ர். நந்தா சொல்லும் இந்து வேளாள குல தமிழ் பாதிரிகளல்ல. இதனை உறுதி செய்ய என்னால் முடியும்.

    துரை

    Reply
  • Suman
    Suman

    கட்டுரையை ஏதோ நல்லாகத்தான் ஏழுதியிருக்கிறீர்கள். யதார்த்தம் என்பதை மையப்படுத்தினாலும் இந்துமதம் பற்றிய விசயங்களில் யதார்த்தத்தைக் காணோம். “சிக்காக்கோ தொடக்கம் சாவகச்சேரி வரை உள்ள கத்தோலிக்க ஆலயங்கள்…….” என்று தொடங்கி வளரும் பந்தியில் கிறீஸ்தவமதங்கள் மக்களை சுயமாக சிந்திக்கவோ வாழவோ விடவில்லை என்பதை மறைமுகமாக தெரிந்தோ தெரியாமலேயே ஒத்துக் கொள்கிறீர். மக்கள் சுயஉணர்வு மிதிக்கப்பட்டு ஸ்தாபனமயப்படுத்தப்பட்டு கண்காணிப்புக் கமரா பூட்டப்பட்ட ஒரு சிறைவாழ்வை கிறீஸ்தவம் சமர்பிக்கிறது.இன்று இருக்கும் போப் பனடிக்கத ஒரு நாசி என்பதையும் அவர் எப்படி நாசியுடன் வேலை செய்தான் என்பதையும் தொலைக்காட்சி, காட்சி பத்திரிகையில் பக்கம் பக்கமாக பார்த்து வாசித்திருக்கிறோம்.

    கிறிஸ்தவத்தில் யாரும் நினைத்தவுடன் கோவில் தொடக்க இயலாது: சேர்த்தபணம் மக்களுக்கும் மதப்பரப்பலுக்கும் போகவேண்டும் என்று அளந்தீர். நான் வாழும் ஐரோப்பாவில் மூலைக்கு மூலை மிசன்கள் 2கிழமையில் பாதிரியாகலாம். சுனாமிக்கு எனச்சேர்த்த காசு பொக்கட்டுகளுக்குள் போய் பேப்பரில் போட்டு நாற்றப்பட்ட தரித்திரச் சரித்திரங்கள் போதியளவு ஐரோப்பாவில் தமிழர்களிடையே உண்டு. இந்துமதம் மக்கள் மதமாக உருவானது. அதனுடைய அடிப்படை தெரியாமல் யாரும் கோவில் தொடக்கலாம் பணம் சேர்க்கலால் என்று கண்ட நிண்டபடி கதைகளைக் கட்டமைக்காதீர்கள். இந்துமதத்தின் தோற்றம் மக்கள் மயமானது. அவனவன் தன் மனதில் கடவுளைச் சித்தரித்தானே நம்பினானோ அப்படியே தன்வணக்கத்தை மேற்கொண்டான் பின் ஒரே விதமான நம்பிக்கை கொண்டவர்கள் இணைந்து கூட்டுவழிபாட்டை மேற்கொண்டனர். இக்கூட்டு வழிபாட்டின் எழுற்சியும் வளர்ச்சியுமே கோவில் கூட்டுப்பிராத்தனை என்று உருவானது. இவை எல்லாம் பிராமணிகள் என்று ஒரு இனமுருவாகுவதற்கு முன்னரே நடந்தன.

    வர்ணாச்சாரியத்தை உருவாக்கியவர்கள் பிராமணர் என்பதை யாவரும் அறிவார்கள். மக்கள் மயப்பட்டு ஒவ்வொரு மனிதனது சுயமான நம்பிக்கை அதாவது திணிப்பற்ற நம்பிக்கை இந்துமதானதற்கான ஆதாரமே. பல கடவுள்கள் இந்துமதத்தில் இருப்பது. இதற்காக இந்துமதம் தான் சிறந்தது என்று வாதிடுவது முட்டாள்தனமானது. இந்துமதம் அன்று ஒவ்வொரு தனிமனிதனது நம்பிக்கையை மதித்தது என்பதை யாரும் மறுக்க இயலாது. இந்த மதிப்பின் முடிவுதான் 30000க்கு மேற்பட்ட மதங்களின் இணைவு. இன்று மதம் என்பது அவசியமாக இருந்தது. காரணம் மருந்து விஞ்ஞானம் என எந்த வசதியும் இல்லாத காலத்தில் எல்லாம் மனிதனின் கைகளுக்கு அப்பால்தான் இருந்தது. இதனால் மனிதன் கடவுளை நம்பினான். அனியாயங்கள் தலைதூக்கி மக்கள் விரத்திக்குத் தள்ளப்படும் போது மீட்பன் வருவான் என்று மக்கள் நம்பினர். கிறீஸ்துவின் வார்த்தைகள் சிலருக்கு நின்மதி அழித்ததனால் அவரை சிலர்பின்பற்றினர். தமிழர்களின் புலிவரலாற்றை எடுத்துப் பார்த்தாலும் இதுவே நடந்திருக்கிறது. காலங்காலமாக அடிவாங்கி ஓடியதமிழன் யாரோ ஒருவன் அல்லது இளைஞர் குலாம் எதிர்த்து நின்று திருப்பி அடிக்க முயன்று சிறு வெற்றிகளைப் பெற்றபோது நம்பினார்கள். இன்று மாக்கிசம் கதைப்பவர்களால் ஏன் அதைச் செய்ய முடியவில்லை. இதைக்கூடச் செய்யமுடியாத மாக்சிஸ்டுகள் இன்று வெடித்துக் கொட்டுகிறார்கள். மதங்களும் மாக்சிசமும் ஒன்றுதான் எல்லாமே நிஜமற்ற நிசங்கள் தான்.

    Reply
  • palli
    palli

    :://மதங்களும் மாக்சிசமும் ஒன்றுதான் எல்லாமே நிஜமற்ற நிசங்கள் தான்//
    அருமையான வாசகம் சுமன், இதில் நானும் உங்கள் அணி;

    Reply