பான் கீ மூனின் கூற்று ஐ.நா சாசனத்தின் உயிர் நாடியைச் சிதைக்கும் செயல் இலங்கைக்கு எதிராக செயற்படுவது நியாயமற்றது – ஜீ.எல்.

gl-p.jpgஉலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் இலங்கை தொடர்பில் நிபுணர்கள் குழுவை நியமிப்பதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியிருப்பது ஐ.நா. சாசனத்தின் உயிர் நாடியைச் சிதைக்கும் செயலாகுமென்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

சகல நாடுகளையும் சமமாக மதிக்க வேண்டுமென்பது ஐ.நா. சாசனத்தின் ஜீவநாடியாக உள்ளது. சிறிய நாடுகளின் பாதுகாப்புக்காகவே ஐ.நா. சபை உருவாக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கைக்கு எதிராக செயற்படுவது எவ்விதத்திலும் நியாயமாகாதென்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.

மனித உரிமை மீறல் தொடர்பாக ஆராய்வதற்கு ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர்கள் குழு அவசியமில்லையென வலியுறுத்தித் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பொறுப்புகள்’ தொடர்பாக ஆராய்வதெனின், 118 நாடுகளின் எதிர்ப்பினைக் கருத்திற்கொள்ளாமல், நிராகரிக்க முடியாது. சில நாடுகளின் மனித உரிமைகள் மீறப்பட்டதற்கான சாட்சியங்கள் இருந்தும், அந்த நாடுகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை’ என்று தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் இலங்கை பெற்றுள்ள வெற்றி இன்று சர்வதேச சவாலை எதிர்நோக்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களின் நிலைப்பாட்டுக்கும் இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் நிலைப்பாட்டுக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளதாக ‘நெருக்கடிகள் தொடர்பான சர்வதேச குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தாகவும் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார். புலம்பெயர் தமிழர்கள் குழுவில் புலிகளுக்கு ஆதரவானவர்கள் இன்னமும் தமிழீக் கோட்பாட்டைக் கைவிடவில்லை.

ஆனால், இலங்கையில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் கொண்டிருக்கும் நிலைப்பாடு முற்றிலும் மாறுபாடானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர் இவர்கள் இங்கு அரசியல் கட்சிகள் மூலம் மாத்திரமன்றி சிறு அமைப்புகள் ஊடாகவும் முயற்சிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • Ajith
    Ajith

    சகல நாடுகளையும் சமமாக மதிக்க வேண்டுமென்பது ஐ.நா. சாசனத்தின் ஜீவநாடியாக உள்ளது. சிறிய நாடுகளின் பாதுகாப்புக்காகவே ஐ.நா. சபை உருவாக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கைக்கு எதிராக செயற்படுவது எவ்விதத்திலும் நியாயமாகாதென்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்
    You are right professor. sri Lanka constitution also says equal rights to every citizen. Sri lanka government formed to protect its civilians, not to kill tamil civilians. It is in the interest of Sri Lankan’s UN wants to investigate the war crimes and human right abuses. People need freedom and good governance, not white van rule.

    Reply
  • thurai
    thurai

    மனித உருமை இலங்கை அரசாங்கத்தினாலும், பயங்கரவாதப் புலிகளாலும் மீறப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் மீது குற்ரம்சாட்டும் போது உலகமுழுவதும் வாழும் ஈழத்தமிழரை பயமுறுத்தியும், ஏமாற்ரியும் வாழ்ந்த,வாழும் புலிகளின் ஆதரவாளர்களின் மீதும் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

    துரை

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ஐயா கற்றறிந்த பேராசிரியரே,
    முன்னர் ஜீ.எஸ்.பி + தேவையில்லை நாம் சமாளிப்போம் என்றீர்கள், பின்னர் ஒரு படி மேலே போய் ஐரோப்பிய யூனியன் துரோகம் இழைக்கிறது என்றீர்கள், பின்னர் ஏழைமக்களின் வயிற்றில் அடிக்கிறார்கள் என ஒப்பாரிவைத்தீர்கள்..எல்லாவற்றுக்கும் உச்சமாக ஐரோப்பிய யூனியனுக்கு எதிராக வழக்குப்போடப்போகிறோம் என்கின்றீர்கள். இப்போ பேச்சுவார்த்தை என்கிறீர்கள்.

    இப்போ என்னவென்றால் அதே கதைதான் ஐ.நாவுக்கும்.
    என்ன சொல்கிறீர்கள் இலங்கை மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களா? யார் அவர்கள் பெரும்பான்மையினரா சிறுபான்மை அங்கத்தினரா? யாரைச் சொல்கிறீர்கள். கொஞ்சம் தெளிவாகச் சொன்னால் குறைந்துவிடுமா பேராசிரியர் அவர்களே?

    //…ஏமாற்ரியும் வாழ்ந்த,வாழும் புலிகளின் ஆதரவாளர்களின் மீதும் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்….//thurai
    சட்ட நடவடிக்கை அந்தந்த நாடுகளில் எடுக்கப்படுவது தெரியாது போலும். மேலும் ஐ.நா அறிக்கையில் புலிகளையும் தான் குற்றம் சாட்டியுள்ளனர். நன்றாக எடுக்கட்டும் எல்லா உண்மையும் வெளிவரட்டுமே!

    Reply
  • Ajith
    Ajith

    மனித உருமை இலங்கை அரசாங்கத்தினாலும், பயங்கரவாதப் புலிகளாலும் மீறப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் மீது குற்ரம்சாட்டும் போது உலகமுழுவதும் வாழும் ஈழத்தமிழரை பயமுறுத்தியும், ஏமாற்ரியும் வாழ்ந்த,வாழும் புலிகளின் ஆதரவாளர்களின் மீதும் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.//துரை

    ராஜபக்ச புலிகளை கொன்ற பொன்செகாவுக்கு விசாரனை சட்டநடவடிக்கைகள் இரானுவநடவடிக்கை எடுக்ககுறார் ஆனால் புலி கருனா பிள்ளையான் அமைச்சர் பதவி.

    Reply
  • sumi
    sumi

    ஐ.நா வின் பாதுகாப்புச்சபை மனித உரிமைகள் மீறல் விவகாரத்தில் இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போகின்றதா அல்லது ராஜபக்ச குழுவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போகின்றதா? ஏனென்றால் 1990ல் ஐக்கிய தேசீயக்கட்சியின் ஆட்சியின்போது ஐ.நாவின் அனுசரணையுடன் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பியும் அகதிமுகாம்களில் வாழ்ந்து வந்த அகதிகளில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டும்,கொலை செய்யப்பட்டும், இதுவரை காணாமல் போயுள்ளவர்கள் பற்றி எவ்வித கவலையோ நடவடிக்கையுமோ எடுக்கத்தவறிய ஐ.நா, தற்போது மட்டும் மனித உரிமை பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கின்றது. கொள்கையளவில் மட்டும் சமத்துவம் பேசும் ஐ.நா-இலங்கையில் மட்டும் இரட்டை வேடமா? இதன் பின்னணி என்ன?

    Reply
  • Ajith
    Ajith

    sumi,
    There is nothing new about UN action against human right abuses by rogue states. You re right UN should not stop with Rajpakse group but also take action against the genocide of tamils since 1958. However, there is a difference here. Rajapakse has agreed with UN to appoint an impartial inquiry into what happened in Vanni. There were substantial evidence to proof that Rajapkse government ordered to bomb hospitals, no-fire zone. He alos ordered to kill surrendred fighters and people. There are evidence of mass murders of hundreds of civilians by Rajapakse government. The number of people massacred within last few days was around 40,000. There are enough evidences to prove Rajapakse government ordered killing of politicians and journalists. All this happened when Rajapakse was president. So, he has to take accountability for what happened under his rule. Actually all these days UN was in action because of the pressure from India.
    Do you think the international body should keep silence only against Rajapakse Government?
    Do you think there is nothing wrong Rakapkse’s massacre of tamils?
    Do you think that unlawful killing Rajapakse regime is above law and humanity?
    Do you think tamils have no right to live in that island?

    Reply