போரினால் கால்களை இழந்தவர்களுக்கு இலவசமாக செயற்கைக் கால் பொருத்தும் நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக இலங்கையிலுள்ள இந்திய தூதுவர் அசோக் காந்த் நேற்று வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்தார்.
வவுனியா ஆனந்த குமாரசுவாமி நிவாரணக் கிராமத்திலுள்ள இந்திய மருத்துவ மனையில் ஜெய்ப்பூர் செயற்கைக்கால் பொருத்தும் நிபுணர்கள் குழுவினர் தங்கியுள்ளனர். சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இங்கு விஜயம் செய்திருந்தார்.
19 பேரைக் கொண்ட நிபுணர்கள் குழுவினர் செயற்கைக்கால் பொருத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 1000 பேருக்கு இலவசமாக கால்களை பொருத்துவதற்கு திட்டமிட்டுள்ளன. நேற்று வரை 32 பேருக்கு இலவசமாக கால்கள் பொருத்தப்பட்டுள்ளன என குழுவின் தலைவர் ஆனந்த சர்மா தெரிவித்தார். அத்துடன் இதுவரை தங்களால் ஒரு மில்லியனுக்கும் அதிகமாநோருக்கு கால்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை-இந்திய நட்புறவு திட்டத்தின் கீழ் இந்த செயற்பாடு நடைபெறுகிறது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தர்
Appu hammy
Is it because the elections are around the corner scared??
palli
நல்ல விடயம் உங்கள் புலம்பெயர் முகவர்கள் மூலம் விபரஙளுடன் உதவி கேட்டால் பலர் உதவ கூடும்; பல்லி கண்டிப்பாக சிறு உதவியாவது செய்வேன், நான் இருக்கும் நாட்டில் உங்கள் தோழர்களுடன் பேச முயற்ச்சிக்கிறேன்,