களுத் துறை களுகங்கையில் வீசப்பட்டு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அமில சந்தருவன் (வயது 3) நேற்று மரணமானார்.
நீரில் வீசப்பட்டதால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட சிறுவன் கொழும்பு லேடி ரிஜ்வே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டி ருந்தார். கடந்த 11 ஆம் திகதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நாள் முதல் நேற்று காலை மரணமாகும் தறுவாய் வரையில் கோமா நிலையிலேயே இருந்துள்ளார். இவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டிருந்தது. நேற்றுக் காலை 11.00 மணியளவில் சிறுவனது உயிர் பிரிந்தது.
சிறுவனின் தாய் களுகங்கையில் சிறுவனை தூக்கியெறிந்த போது களுத்துறையைச் சேர்ந்த லொறிச் சாரதியான சம்பத் ஜானக்க என்பவர் சிறுவனை மீட்டெடுத்தார்.