சில இந்து மத ஆலயங்கள் முற்றாக வருமானம் ஈட்டும் வியாபார நோக்கங்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டன. அந்தவகையில் தனி நபர்களாலும் குழுக்களாலும் வியாபார நோக்கங்களுக்காக ஆலயங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. தனிநபர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஆலயங்கள் தனிநபர்களின் வர்த்தக நிறுவனங்கள் போன்றே செயற்படுகின்றன. அவற்றின் வருமானங்கள் தனிநபர்களையே சென்றடைகின்றது. ரூற்றிங் முத்துமாரி அம்மன் ஆலயம் வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலயம் என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயம் என்பன அரசியல் நோக்கங்களுக்கு வருமானத்தைப் பெறும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றது. இவற்றில் வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலயம் அரசியல் பிளவுக்குள் சென்ற போது அதனை ரூற்றிங் முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகம் ந சீவரட்ணம் கைப்பற்றுவதற்கு எடுத்த முயற்சி பலனளிக்கவல்லை. இது நீதிமன்றம் வரை சென்று ரூற்றிங் முத்தமாரி அம்மன் ஆலயத்திற்கு பல்லாயிரம் பவுண்கள் நஸ்டம் ஏற்பட்டது.
ஆலயங்கள் ஆன்மீகத்தையும் மனஅமைதிக்கான சூழலை ஏற்படுத்துவதற்குப் பதிலாக பணத்தினைக் குறியாகக் கொண்டு செயற்படுகின்ற தன்மை பரவலாகக் குற்றம்சாட்டப்பட்டு வருகின்ற விடயம். பல்வேறு கஸ்டங்கள் மத்தியிலும் ஆலயம் செல்பவர்கள் இறைவனுடன் தங்கள் கஸ்டங்களைப் பகிர்ந்துகொண்டு மனநிறைவை வேண்டிச் செல்கின்றனர். ஆனால் ஆலயத்தில் உள்ள அர்ச்சகர்களும் நிர்வாகிகளும் மனுக் காட்டைக் கொடுத்து என்ன மீல் வேண்டும் என்பது போல அர்சனை விலைப் பட்டியலை வழங்கி செலவான அர்ச்சனைகளைச் செய்ய அடியார்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.
என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு தனது பிறந்ததினத்தன்று வழிபட்டுவிட்டு வரச் சென்ற பெண்ணுக்கு அர்ச்சகர் 30 பவுண்களுக்கு அர்ச்சனை செய்வதற்கு அழுத்தம் கொடுத்து மறுக்க முடியாமல் அப்பெண் 30 பவுண்களுக்கு அர்ச்சனை செய்துவிட்டு வந்துள்ளார். மிகுந்த கஸ்டத்தில் வாழ்கின்ற அப்பெண் அன்று ஆலயத்திற்குச் சென்றது அவருக்கு பெரும் பணச் செலவை ஏற்படுத்தி இருந்தது. அப்பெண் இதனை தனது நண்பிக்கு போன் எடுத்துக் குறைப்பட்டுள்ளார்.
அதே என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயத்தின் அர்ச்சகர்கள் தங்கள் ஆலயத்திற்கு வந்த வழிபட்டால் பல்வேறு நோய்கள் நீங்கும், மகப்பேறு கிடைக்கும், பரீட்சையில் சித்தியடையலாம் என்பது போன்ற அறிவிப்புக்களையும் விளம்பரங்களையும் மேற்கொண்டு வந்துள்ளனர். கீழே பெப்ரவரி 28 மாசி மகத் திருவிழா தொடர்பாக என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயம் வெளியிட்ட தூண்டுப் பிரசுரம் இவ்வாறு சொல்கின்றது:
‘வட இலண்டன் என்பீல்ட் நாகபூசணி அம்பாள் திருவருள் துணைநிற்க மார்க்கண்டேய முனிவர்களால் அருளிச் செய்யப்பட்ட தேவி மகாத்மியம் என்னும் 700 சுலோகங்களை அம்பிகையின் திருவருள் வேண்டி யார் பாராயணம் செய்கிறார்களோ அவர்களின் துன்பங்கள் நீங்கி, நோயற்ற வாழ்வும், ஐஸ்வரியமும், உயர் பதவிகளும் பெறவும், கிரக பீடைகள் நீங்கவும், புத்திர சௌபாக்கியமும், பரீட்சையில் சித்தி பெறவும், சீக்கிரம் விவாகம் நடந்தேறவும், கவலைகளும் கஸ்டங்களும் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும். எனவே அடியார்கள், என்பீல்ட் நாகபூசணி அம்பாள் திருவருள் வேண்டி வெள்ளி தோறும் ஆலயத்திற்கு வருகை தந்து கீழ்காணும் சுலோகங்களை 9 தடவைகள் பாராயணம் செய்து பாலாபிசேகம் செய்து அர்ச்சனை வழிபாடு ஆற்றி நல்வாழ்வு வாழப் பிரார்த்திக்கின்றோம்.’
என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயத்தின் துண்டுப் பிரசுரம்
இந்தப் பால் குடம் ஒன்றின் விலை 10 பவுண்கள். அர்ச்சனை வேறு விலைகளில் உள்ளது. பெரும்பாலும் ஆலயங்கள் எல்லாமே தாங்கள் ஊரில் உள்ளவர்களுக்கு உதவுகின்றோம் என்ற போர்வையிலேயே வழிபாடுகளை நடாத்துவதாகத் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த வழிபாடுகளால் ஈட்டப்படும் வருமானம் ஊருக்கு செலவு செய்யப்படும் விபரங்கள் பற்றிய வெளிப்படையான கணக்கு விபரங்களை ஆலயங்கள் வெளியிடுவதில்லை. அதனால் அவ்வாலயங்கள் பற்றிய நம்பகத் தனமை ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.
தவறான விளம்பரங்களைச் செய்து பலவீனமான நிலைப்பட்டவர்களிடம் பணம் பறிக்கின்ற விடயம் இந்துமதத்திற்கு மட்டுமான பிரச்சினையல்ல. வௌ;வேறு மதநிறுவனங்களும் இதனைச் செய்கின்றன. குறிப்பாக பிரித்தானியாவில் உள்ள சமூகப் பத்திரிகைகளில் இவற்றுக்கான விளம்பரங்களுக்கு குறையிருப்பது இல்லை. ஆனால் இவை பிரித்தானிய வர்த்தக மதிப்பீட்டு முகவரகத்தின் விதிமுறைகளுக்கு அமைவதில்லை. இதுதொடர்பாக வர்த்தக மதிப்பீட்டு முகவரகம் பிபிசி க்கு தெரிவிக்கையில் இப்பிரச்சினை பரவலாகக் காணப்படுவதாகவும் அதன் பாதிப்பின் ஆழம் அளவிடமுடியாததாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு தீங்கு ஏற்படும் என்ற பயத்தினாலும் சிலர் வெட்கம் காரணமாகவும் முறையிடுவதில்லை என அவர்கள் தெரிவித்து இருந்தனர்.
Santhi
கடவுள்மாரும் கூடி, கடவுள் நம்பிக்கையை வைத்து, ஏமாற்றிப் பணம் பறிப்பவர்களும் கூடிவிட்டது. எங்கடை சனம் இவ்வளவும் சாகும்போது வராத கடவுள் இவர்கள் கேட்டவுடன் மட்டும் நித்திரையை விட்டு எழும்பி வரவா போகுது? தட்டுங்கள்! கொடுங்கள்! ஏமாறுங்கள்!
NANTHA
இந்து ஆலயங்களிலுள்ள ஐயர்மாருக்கு “சம்பளம்” என்பது கோவில் உரிமையாளருக்கும் ஐயர்மாருக்கும் இடையிலுள்ள ஒப்பந்தம் மூலம் வழங்கப்படுகிறது. அது எந்த நாட்டிலும் சட்டம் அங்கீகரிக்கும் ஒரு விஷயம் ஆகும்.
மற்றைய மதத்து ஆலயங்களில் கடவுள் “என்ன” கொடுப்பார் என்று பிரசங்கம் செய்கிறார்கள் என்றும் அந்த பிரசங்கம் செய்பவர்களுக்கு யார் சம்பளம் கொடுக்கிறார்கள் என்றும் ஜெயபாலன் அறிந்து எழுதினால் நல்லது.
DEMOCRACY
/ரூற்றிங் முத்துமாரி அம்மன் ஆலயம் வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலயம் என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயம் என்பன அரசியல் நோக்கங்களுக்கு வருமானத்தைப் பெறும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றது./– நல்ல காலம்,கழுவுகிற மீனில் நழுவுகிற மீனான,ஜெயதேவனையும்,புங்குடு தீவு கிருஷ்ணபிள்ளையும் இதில் சேர்த்தீர்கள்.புலி எதிர்ப்பு என்ற போர்வையில்,எங்கே இவர்கள் பிளையா(ன்)ர் பிடிக்க “அனுமாரக மாறி” நாங்கள் இராவணன்(திராவிடர்) இல்லை “ஜெய் அனுமான்” என்று குரங்காக மாறிவிடுவார்களோ என்று நினைத்தேன்!.”யுனிவர்சல் திங்கிங்” அவ்வளவு சுலபமில்லை அண்ணே!. “Tuesday, 30 March, 2010
CERN expected to start high-powered particle collisions today
The Large Hadron Collider is expected to slam particles together at its highest energy level yet, Wednesday. The world’s largest scientific experiment at CERN, just outside Geneva, and is attempting to find so-called dark matter. The experiment is an attempt to recreate the conditions right after the Big Bang nearly 14 billion years ago. Reporter Alex Helmick talks with Mike Lamont, head of CERN’s accelerator operations group, about the experiment.”…..http://worldradio.ch/wrs/news/switzerland/cern-expected-to-start-high-powered-particle-colli.shtml?18494
இளங்கோ
ஜெயபாலன்,
/தங்கள் ஆலயத்திற்கு வந்த வழிபட்டால் பல்வேறு நோய்கள் நீங்கும், மகப்பேறு கிடைக்கும், பரீட்சையில் சித்தியடையலாம் என்பது போன்ற அறிவிப்புக்களையும் விளம்பரங்களையும் மேற்கொண்டு வந்துள்ளனர். கீழே பெப்ரவரி 28 மாசி மகத் திருவிழா தொடர்பாக என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயம் வெளியிட்ட தூண்டுப் பிரசுரம் இவ்வாறு சொல்கின்றது:/
துண்டு பிரசுரத்தில் ” தங்கள் ஆலயத்திற்கு” என்று குறிப்பிடப்பட்வில்லை?,
தேவி மகாத்மியம் பாராயணம் செய்வதால் துன்பங்கள் நீங்கும் என பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வேத்ம் சொல்லியுள்ளது. அதனை கிண்டலாக நீங்கள் எழுதுவது இந்துக்களை புண்படுத்தாதா? வேறு மத புனிதநூல்களிலுள விடயங்களை இதே போன்று உங்களால் விமர்சிக்க முடியுமா? கடந்தகாலத்தில் விமர்சித்த எழுத்தாளர்கள் பட்ட அவ்ஸ்தகள் பற்றி கேள்விப்படவிலையா?
/ பெரும்பாலும் ஆலயங்கள் எல்லாமே தாங்கள் ஊரில் உள்ளவர்களுக்கு உதவுகின்றோம் என்ற போர்வையிலேயே வழிபாடுகளை நடாத்துவதாகத் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த வழிபாடுகளால் ஈட்டப்படும் வருமானம் ஊருக்கு செலவு செய்யப்படும் விபரங்கள் பற்றிய வெளிப்படையான கணக்கு விபரங்களை ஆலயங்கள் வெளியிடுவதில்லை. அதனால் அவ்வாலயங்கள் பற்றிய நம்பகத் தனமை ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது./என்பீல்ட் ஆலயம் ஊருக்கு செலவு செய்வதாக விளம்பரம் செய்திருந்தால் ஏன் அதனை இணைக்கவில்லை?
இளங்கோ
/தவறான விளம்பரங்களைச் செய்து பலவீனமான நிலைப்பட்டவர்களிடம் பணம் பறிக்கின்ற விடயம் இந்துமதத்திற்கு மட்டுமான பிரச்சினையல்ல. வௌ;வேறு மதநிறுவனங்களும் இதனைச் செய்கின்றன. குறிப்பாக பிரித்தானியாவில் உள்ள சமூகப் பத்திரிகைகளில் இவற்றுக்கான விளம்பரங்களுக்கு குறையிருப்பது இல்லை/சமூகப்பத்திரிகை உதயனின் ஆசிரியர்? யார் என்று குறிப்பிடமுடியுமா?
BC
ஒரு விபத்து ஏற்பட்டு மருத்துவர் அநியாய கட்டணம் கேட்டும் கொடுப்பது வேறு மிகுந்த கஸ்டத்தில் வாழ்கின்ற அப்பெண் என்ன தேவைக்காக 30 பவுண்கள் அர்ச்சகருக்கு கொடுத்தவர்?
இந்து கடவுளின் அடியார்களாக இருந்து யேசுவின் பிள்ளைகளாக மாறிய தமிழர்களின் பிரச்சனையும் கட்டுரையில் சொல்லப்பட்டது தான்.நோய், திருமணமாகியும் பிள்ளையில்லை, வேலை போய்விட்டது, அல்லது வேலை போனால் வீடு வாங்கிய கடனை எப்படி கட்டுவது என்ற பயம்.
palli
எல்லா கடவுளுமே இப்போது வெண்டிக்காய் வேண்டினால் முருக்கங்காய் இலவசம் என்பது போல் வியாபார நோக்குடந்தான்
செயல் படுகிறது;உலகம் மட்டுமல்ல கடவுள்கூட விளம்பரத்தை நம்பியே வாழவேண்டி உள்ளது,:
NANTHA
இந்து மதம் பற்றி இந்துக்கள் விமர்சனம் பண்ண உரிமை உண்டு. ஆனால் ஜெயபாலன் “நம்பிக்கைகள்” பற்றி கிண்டல் பண்ணியது இந்து மத எதிர்ப்பு பிரச்சாரமாக அல்லது கடவுள் இல்லை என்று கூறுபவர்களின் பிரச்சாரமாகவே புலப்படுகிறது.
இந்துக் கோவில்களுக்குள் புலிகளும் கிறிஸ்தவர்களும் புகுந்து அட்டகாசம் செய்யத்தொடங்கிய நாளிலிருந்து நான் கோவில்களுக்கு போவது கிடையாது. கோவிலுக்குப் போகாமல் இருக்கவும் இந்துக்களுக்கு சுதந்திரம் உண்டு. கோவிலுக்குப் போனாலும் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது “கட்டாயம்” அல்ல. அர்ச்சனை செய்ய வேண்டும் என்று போகும் போது மனித உழைப்பு சம்பந்தப்படுகிறது. அதன் பெறுமானத்தை யார் கொடுப்பது?
இந்துக் கோவில்களில் “பங்கு” என்று சொல்லி பதிவுப்புத்தகங்கள் வைத்து மாத வசூலிப்புக்கள் நடை பெறுவது கிடையாது. ஒரு கோவிலில் “பண வசூலிப்பு” அதிகம், நியாயமற்றது என்று கருதினால் அந்த கோவிலுக்குப் போவதை நிறுத்திக் கொள்ளலாம். அதை யாரும் எதிர்க்கப் போவதில்லை.
கட்டுரையின் தலைப்பைப் பார்த்தால் இந்துக்களின் வேத ஆகமங்களில் “ஏதோ” பூசைகளுக்கு கட்டண விகிதங்கள் உள்ளது போலவும் அதனை மீறி வசூல் நடை பெறுகிறது என்றும் அதனை “ஜில்மால்”, “கோல்மால்” என்று எழுதியிருப்பது இந்துக்களுக்கு எதிரான பிரச்சாரமே ஒழிய வேறொன்றுமில்லை.
Mohamed Nisthar
Ilango, Palli, and Nantha,
I think that the writer of this article simply criticizes some of the activities of a Saiva/Hindu temple. I don’t see anything in his article which condemn any religion or particular religion.
What most of us do not understand is that religion is separate from the so-called religious activities or activities which are attributed to religion by religious ministers( Iyar, Imam, Priest,Monks or Rabbi)
It would be easier for us to understand religion more,if we are able to distinguish religion from things being done as religious rituals in the name of religion.
Ilango
நிஸ்தார்!
கலிமா — இறைவன் ஒருவனே முஹம்மது நபி அவர்கள் அவனது கடைசி தூதர் என ஏற்றுக்கொள்ளல்
தொழுகை — தினமும் 5 வேளை இறைவனை வணங்குதல்
நோன்பு — புனித ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பிருத்தல்
ஜக்காத் — ஏழை எளியவர்களுக்கு உதவுதல்
ஹஜ் — புனித காஃபா ஷரீஃப்ற்கு புனித பயணம் மேற்கொள்ளல்
என லண்டன் ……..ஜில்மால் என எழுதப்பட்டால் ஏற்றுக்கொள்வீரா?
கிருபா
எழுத முடியும் / வாசிக்க நாலு பேர், அதை விவாதிக்க நாலு பேர் இருந்தால், எதையும் / எப்படியும் எழுதி எறியலாம் என்ற அறிவுடன் பலர் இப்போதெல்லாம் எழுதியெ தீருவேன், இந்த சமூகததை சீறியே தீருவேன் எனபது அடாவாடி.
இருந்தாலும், தொட வேண்டிய சில இலக்குகளை மெதுவாக குறி வைக்கிறார்க்ள் என்பதில் ஒரு தெளிவு தெரிகிறது.
ஆண்டாண்டு காலமாய் புரையோடியிருக்கும் சில சமாச்சாரங்களை, எதோநேற்று, இன்று தான் முளைதிருப்பதாய் “ஜில்மால்” விடுவதை தவிர்த்து, ஆக்கபூர்வமாய் எப்படி இவ்வாறான குறைகளை எதிர்கால இளம் சந்ததியினர் தவிர்த்து கொள்ளலாம் என எழுதியெ தீருவேன் உஙகள் இலக்குகளை மாற்றுவது நல்லது.
sumi
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள் என்பதையும் மீறி, கடவுளைவே ஏமாற்றும் அளவுக்கு தமிழன் முன்னேறிவிட்டான் என்றால் அதுவும் வெளிநாடுகளில்…இதற்கு ஒரே வழி..புலம் பெயர் நாடுகளிலுள்ள மிதமதவழிபாட்டு ஆலையங்கள் எல்லாம் வெளிநாட்டு அரசுகளால் அரசுடமையாக்கப்பட்டால் அதைவிட பக்தர்களுக்கும் உண்மையான தெய்வங்களுக்கும் நிம்மதி கிடைக்க வேறு வழியே இல்லை. அப்போதுதான் போலிகளெல்லாம் காலியாகி, சாந்தியும் சமாதானமும் நிலவும். மனிதன் மனிதனாக வாழ்வான்….இல்லையேல் அவன் என்றும் “ஈனத்தமிழன்” தான்.
thurai
புலிகள் மக்களிடம் பணம் பறித்து செய்த முதலீடுகளால் வருமான்ம் வருவதையே எதிர்பார்க்கின்றன்ர். அவர்கள் புலம்பெயர் நாடுகளில் செய்த முதலீடுகளை யாருமே முழுமையாக அறியமுடியாது. வெளிப்படையாக்த் தெரிவது சில இந்துக்கோவில்கழும், பாதிரிகழும், ஊடகங்கழுமே.
இப்போது புலத்தில் பணம் பறிப்பது தடைப்பட்டுப்போயுள்ளது. இதனால் பொய்யும், ஏமாற்ரும் பெருகியுள்ளது. இவர்கள் யாவரும் புலிகள் ஈழம் காட்டியது போல்தான் வேறு ஏமாற்றுக்களை செய்கின்றார்கள். எனவே தமிழரை ஏமாற்றுவோர் யாவரும் புலிகள்தான். இதில் இந்து, கிறிஸ்தவம் என்ற வேறுபாடு கிடையாது.
துரை
Pearl Thevanayagam
Jeyapalan should be congratulated on exposing the wide-scale corruption within Hindu Temples. Popularly known as Ealing Amman, the temple in Ealing is administered by professionals such as doctors, lawyers and acountants.
It attracts massive crowds of worshippers and the wranglings and court cases regarding this temple would make Hindu Gods blush.
It is one hell of a money-raking business all from hapless and unsuspecting worshippers who have to impart with more money than they could afford for ceremonies starting from child birth, marriage and death.
While the patrons live in Pinner an up-market residential area and Brent and Ealing Borough’s listed buildings from the huge profits made regularly, the worshippers are often working day and night in bakeries, petrol stations and shops, very often for £3.00 an hour only to enrich these fat-cats who send their kids to private schools!!
I attended a tribunal hearing for this temple (my boss was a solicitor and trustee of Ealing Amman) and even the judge cringed at the crude allegations brought against the administrator who according to the trustees did not belong to a high caste!
I recently attended a trustes meeting and the language and the noise made me wonder whether my ex-boss ever had an education or class never mind pass out as a lawyer. Her practice is also under scrutiny by the Law Society.
Ajith
“Jeyapalan should be congratulated on exposing the wide-scale corruption within Hindu Temples.”
Pearl Thevanayagam
Mr Pearl,
Why Mr Jeyapalan fails to expose the wide-scale corruption within Christian churches and Buddhist temples. Corruption is not specific to hindu temples. There are number of Christian priests cheat poor Christians for same. The beliefs of the people may be right or wrong it is the peoples choice. It is the people who donated money to the temple have to raise their voice if there is something wrong.
“It is one hell of a money-raking business all from hapless and unsuspecting worshippers who have to impart with more money than they could afford for ceremonies starting from child birth, marriage and death.”
We tamils who live in this country are not came from elsewhere, all came from Sri Lanka or India. In hinduism there is no forced conversion by flase promises as in other relegions.They have got good knowledge and understanding of the hindu relegion and its practices. It is their right.
NANTHA
Pearl:
How far you are honest? I heard you tried to enter as a Teacher in Sri Lanka’s LTTE area?
I hope you are not a HINDU. You better tell about the frauds in your Church!
Ajith
Sumi,
In which world you are living? According to you tamils sre cheats including you if you are a tamil. Sri Lankan President Rajapakse and Douglas last Thursday visited Nallur temple for what? To kill the god?
Pearl Thevanayagam
I did Nantha try to enter Jaffna pretending to be an teacher because I wanted the truth about Navaly bombing where 165 Tamil civilians were bombed by the airforce and our very own Tamilian Lakshman Kadirgamar ordered ICRC to retract its statement that the Airforce bombed and killed tamils including women and children who sought refuge n a church in 1995.
Journalists were not allowed access to the North North i put my life on the line and I was arrested for being an informer for the LTTE.
As Graham Greene said,`it is better to lie than hurt with truth if it means exposing facades’ or soemthing to that effect.
I had no choice. There was censorship and truth was a hard commodity. I told a white lie to get at the truth.
Is it a sin?
I am a Catholic but my relatives are Hindus.
Perhaps the reason enlightened Tamils converted to Catholicism was because Hindus had so many hang-ups with regard to their castes and subjugated low-class Hindus into obeying them and parting with their hard-earned money to the Hindu Priests who profess to cure everything from asthma to arthritis if only they could produce offerings in gold, mutton and other feasts.
So get out of your hippocrasy and stop feeding on the innocence of God-fearing Hindus.
Ajith
இப்போது புலத்தில் பணம் பறிப்பது தடைப்பட்டுப்போயுள்ளது. இதனால் பொய்யும், ஏமாற்ரும் பெருகியுள்ளது. இவர்கள் யாவரும் புலிகள் ஈழம் காட்டியது போல்தான் வேறு ஏமாற்றுக்களை செய்கின்றார்கள். எனவே தமிழரை ஏமாற்றுவோர் யாவரும் புலிகள்தான். இதில் இந்து, கிறிஸ்தவம் என்ற வேறுபாடு கிடையாது.
Mr. Thurai,
There are few people like trying to cheat tamils. LTTE sincerely fought for rights of tamils, not like people hide under Rajapakse’s Sinhala only Sri Lanka. LTTE is tamil people’s choice. Why only 400 people went to receive Rajapakse who went to Nallur temple to cheat tamils though he spent billions to people like you for propaganda. Tamils are very clear about who are the real cheats and who are the real. You are right, LTTE is the choice for all irrespective of any religion or caste. LTTE did not run their struggle in the name of relegion as Rajapkase do with Buddha.
Pearl Thevanayagam
There will be an uprising whether the LTTE is a spent force or biding their time until the Tamil sycophants and self-servers who venerate before the ruling party which would seek Tamils who have narrow self-interest.
As long as Tamils cling onto their entrenched beliefs that caste could obfuscate them from their superior beliefs they would remain a sorry example of cut above the rest then they could say goodbye to Tamil autonomy far excluded from race, religion and caste.
Tamils aka Kadirgamar, Palakidnar,Devanayagam and Thiruchlvam sold our mess for a pottage in that they espoused more their own entreched positions above the good of Tamil liberties.
The LTTE leader who saw through all this facade is no more but his legacy lives on.
Imposters we have many but just Tamils quite a small number.
These numbers are going nowhere and the LTTE’s aspirations did not die with the annihilation of Pirabakaran and hs coteries.
A most virulent force of Pirabakaran is evolving and the Rajapakse govt. should be constantly look over its shoulders.
NANTHA
Pearl Thevanayagam
நீங்கள் புலிகளின் ஆளாக அங்கு பிரவேசித்துவிட்டு இப்போது கதையளக்க வேண்டாம். கத்தோலிக்க பாதிரிகள் புலிகளின் “எடுபிடிகள்” என்பது மாத்திரமல்ல ஆயுத விற்பனையாளர்களும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்!
இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தமிழர்களுக்கு கத்தோலிக்கர் என்ன செய்ய புறப்பட்டீர்கள்? மத மாற்றம் என்பதை தவிர வேறெதுவும் கிடையாது. புலிகள் போன்ற “கிரிமினல்” கும்பல்களோடு உங்கள் கத்தோலிக்க கூட்டம் சேர்ந்து செய்தது என்ன? பல பாதிரிகள், புலிகள் என்போர் தமிழர்களிடம் கொள்ளையடித்து சொத்து சேர்த்ததுதான் அவர்களின் சாதனை.
வத்திக்கானிலுள்ள போப் ஒரு நாசி என்பது உலகறிந்த விடயம். ஹிட்லருக்கு ஆசீர்வாதம் வழங்கிய பாதிரிகளும் போப்புக்களும் “இந்து” தமிழர்களுக்காக போராடுகிறார்கள் என்று பம்மாத்து விடத் தேவையில்லை. புலிகளும் கத்தோலிக்க கும்பலோடு சேர்ந்து ஹிட்லர் பாணியிலேயே ஆயிரக் கணக்கில் தமிழர்களைக் கொன்றுள்ளனர்.
இந்து சமயமும், பௌத்த சமயமும் “சமயங்களே” அல்ல என்று தற்போதுள்ள போப் கூறிய பின்னரும் உங்களின் “தமிழ்” என்று புகுந்து இந்துக்களை கொள்ளையிட்டு போப்புக்கு சேவகம் செய்யும் வேலைகள விட்டுவிட்டால் நல்லது.
மதம் மாறியவர்கள் எல்லோரும் பைபிளைப் படித்துவிட்டுத்தான் மதம் மாறியவர்களோ? யாழ்ப்பாணத்துப் பாதிரிகள் தங்களை “உயர் சாதிகள்” என்று பிரகடனப்படுத்துவதன் நோக்கம் என்ன?
பாதிரி இம்மானுவல் புலிகளை “DIVINE SOLDIERS OF CHRIST” என்று புலம்பியதன் அர்த்தமும் நோக்கமும் என்ன? இந்து மத பிரச்சனையா அல்லது தமிழ் பிரச்சனையா?
வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டையில் இந்துக்களையும் யூதர்களையும் வாளால் வெட்டிக் கொன்றதுதான் வரலாறு. இலங்கையிலும் அதுதான் நடந்தது. யாழ்ப்பாண மன்னர் பரம்பரை கோவாவில் கொல்லப்பட்டது எதற்காக?
கத்தோலிக்கர்கள் அல்லாதவர்களைக் கொல்ல வேண்டும் என்பது வத்திக்கான் இன்றும் மறுக்காத கொள்கை!
கத்தோலிக்க போர்த்துகீசர் யாழ்ப்பணத்தில் இந்துக் கோவில்களை அழித்து கொள்ளையிட்டதும் “தமிழ்” மொழியில் வந்த பற்று என்று சொல்லுகிறீர்களோ? ஒல்லாந்தர் வந்து கத்தோலிக்க கொடூரங்களை நிறுத்தியதுடன் கத்தோலிக்க மதத்தையும் தடை செய்தார்கள். கத்தோலிக்க பாதிரிகள் புலிகளுடன் சேர்ந்து “இழந்த” கத்தோலிக்க” இராச்சியத்தை கட்டிஎளுப்பவே முயன்றனர். அதனால்த்தான் புலிகள் இந்துக் கோவிலுக்கு போன துரையப்பாவை கொன்றதுடன் ஒல்லாந்தரால் நிர்மாணிக்கப்பட்ட கோட்டையையும் அழிக்க முயன்றனர்.
நவாலியில் புலிகள் கோவில்களுக்குள் ஒளிந்திருந்து தாக்குதல் நடத்திய கதைகள் எங்களுக்கு தெரியும். புலிகள் இந்துக் கோவில்களை கேவலப்படுத்தினார்கள். பிரேதங்களை இந்துக் கோவில்களுக்கு முன்னால் காட்சிக்கு வைத்தார்கள்.
இந்துக்களின் பிள்ளைகளைப் பிடித்து புலிகளிடம் கொடுப்பதில் கத்தோலிக்க பாதிரிகள் இறுதிவரை செயல் பட்டனர்.
வத்திக்கானுக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்?
Rohan
நந்தா //இந்து சமயமும், பௌத்த சமயமும் “சமயங்களே” அல்ல என்று தற்போதுள்ள போப் கூறிய பின்னரும் உங்களின் “தமிழ்” என்று புகுந்து இந்துக்களை கொள்ளையிட்டு போப்புக்கு சேவகம் செய்யும் வேலைகள விட்டுவிட்டால் நல்லது.//
இந்து சமயமும், பௌத்த சமயமும் “சமயங்களே” அல்ல என்று தானே அந்தச் ‘சமயங்களே’ சொல்கின்றன.
சமயம் என்பதை எவ்வாறு வரையறுக்கிறோம்?
அது ஒரு புறம் இருக்க, சாதி பேசி எம்மினத்தவனையே வேறுபடுத்திப் பார்த்ததற்கும் விதவை என்று வெள்ளை உடை அணிந்து மொட்டை போட்டு பெண்களை ஒதுக்கியதற்கும் சமயத்தைக் காரணம் காட்டிய இந்து சமயத்தில் வந்து விட்டு நாம் மற்றவர்களைக் குறை கூறுகிறோம்!
இந்த கிறிஸ்தவர்கள் வந்திருக்காவிட்டால் இன்னமும் அடிமை குடிமை எல்லாம் இருந்திருக்கும்!
thurai
புலிகள் தமிழர்களிற்காகவே போரிட்டார்களா?
நான் புலியென சொன்னவரெல்லாம் தமிழர்களிற்காகவா புலிகழுடன் இருந்தார்கள்?. சிங்கள இராணுவத்தை கொல்வதும், தமிழர்களின் ஏனைய அமைப்புகளை அழித்த்தும், புலிகளிடமிருந்த தவறுகளைச் சுட்டிக்காட்டியோரை துரோகிகளாக்கி கொலை செய்ததும் புலிகள் தாங்கள் வாழ்வதற்கேயன்றி தமிழர்களின் நன்மைக்காவல்ல.
தமிழர்களின் உருமைகளை நோக்காகக் கொண்டு விடுதலைப் போரில் ஆயுதமேந்தியும், ஆயுதமேந்தாமலும் உயிரை கொடுத்த
அனைவரும் மதிக்கப்பட வேண்டியவர்களேயாகும்.
இதில் புலியென்ற முத்திரையுடன் வாழ்ந்தவர்கழும், வாழ்பவர்கழும், புலிகள் விட்ட தவ்றுகளை சுட்டிக்காட்டாது
சுயநலவாதத் தன்மையுடன் இன்றும் வாழ்பவர்கள் தமிழர்ளை ஏமாற்றி வாழ்பவர்களின் கூட்டமேயாகும்.
தமிழினத்தை விட புலிகளை மேலாக மதிப்போர், சாதியும், சமயமும் தமிழருக்குள் என்ன கொடுமைகள் செய்தனவோ அதனிலும் மேலான கொடுமைகளைச் செய்த புலிகளை வள்ர்த்தவர்களாவார்கள்.
துரை
thurai
//நவாலியில் புலிகள் கோவில்களுக்குள் ஒளிந்திருந்து தாக்குதல் நடத்திய கதைகள் எங்களுக்கு தெரியும். புலிகள் இந்துக் கோவில்களை கேவலப்படுத்தினார்கள். பிரேதங்களை இந்துக் கோவில்களுக்கு முன்னால் காட்சிக்கு வைத்தார்கள்.//நந்தா
நவாலி தேவாலயத்தாக்குத்லில் இறந்த தமிழர்களைப் பற்றியும் இது புலிகளின் திட்டமிட்ட செயலென்பதையும் யாராவாது
மறக்க முடியாது. புலிகளிற்கு இந்துவும் மொன்றுதான் கத்தோலிக்கமும் ஒன்றுதான்.
கிறிஸ்தவக்கோவில்களில் கொத்து ரொட்டி வியாபாரம், இந்துக்கோவில்களில் வியாபாரம் முழுவதும் அவர்களே.
துரை
Ajith
கத்தோலிக்க பாதிரிகள் புலிகளின் “எடுபிடிகள்” என்பது மாத்திரமல்ல ஆயுத விற்பனையாளர்களும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்!
Nantha Pirbaharan is a real hindu . The fundamental to hinduism is love, honest and respecting all humans irrespective of the background of any individual. As Nisthar points out the true relegion is different from what is practiced by few so called relegious fundamentalists. Nantha cannot understand anything other than anti LTTE. LTTE did not come from elsewhere, it is a home grown liberation organisation that fully committed for liberation of tamil homeland from the oppression of Sinhala Buddhists (not real) fundamentalists. Almost over 95% of tamils were behind LTTE and its call for independence. Not only LTTE all armed groups formed in the late 1970’s had the same objectives.
He talks all the nonsense of the history of the world. There is a time human ate other humans. Wars, invasions and forced occupations are not specific to any relegion or any race. Our Hinduism is much older than other relegions. However, wars, invasion and occupations were also prevailed since the orgin of hinduism. Today we are in a world that respect humanity and rights of individuals and groups. Today, there are no wars in the name of Christianity or Hinduism. Unfortunately there are still wars and human destruction in the name of Buddhism and Islam by fundamentalists of Buddhists like Rajapakse and Islamists like Osama Bin Laden. This is the real threat to the world and humanity. Those who love humanity should unite to get rid of these brutal dictators in the name of peace.
Saravanan
இந்த கிறிஸ்தவர்கள் வந்திருக்காவிட்டால் இன்னமும் அடிமை குடிமை எல்லாம் இருந்திருக்கும்!
ஆமாம்! ஆமாம்!! இதனைத்தான் அங்கிலத்தில் பெருமையாக “Slave” என்று சொல்வார்கள் அப்படித்தானே!! கருத்தாடல் கருத்தாடல் காரர்களே!! எனக்கு எங்கயோ உதைக்கிற மாதிரி இருக்கிறது. கறுப்பின மனிதனிடம் அர்த்தம் தெரியாமல் திட்டியபோது உதை வாங்கியவனாசே!! சொந்த அனுபவத்தால் வரலாறு படித்து தெரிந்தவனாசே
NANTHA
துரை:
ஆயுதம் ஏந்துவது சமூக நன்மைக்காக இருக்க வேண்டும். தலைவருக்காக உயிரை விடுவோம் தலைவரின் ஆணைகளை நிறைவேற்றுவோம் என்று முட்டாள்தனமாக சத்தியப் பிரமாணம் செய்து கொலைகள் செய்து கொள்ளையடித்து இறுதியில் முள்ளிவாய்க்காலில் மல்லாந்தவர்களை எந்தக் காலத்திலும் மதிக்க முடியாது.
ரோகன்:
சமயம் என்பது என்ன என்று கூறுவீர்களா?
தவிர போப் இந்து சமயத்தையும், பௌத்த மதத்தையும் அழிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளதை கவனிக்க வேண்டும். “என்னுடைய கடவுள் உன்னுடைய கடவுளை விட திறமான ஆள்” என்றுதான் போப் சொல்கிறார்!
அதுசரி! பெண்களை கன்னியாஸ்திரிகள் என்று வைத்திருக்கும் பாதிரிகளை என்ன செய்ய உத்தேசம்? கருப்பனை விட வெள்ளையன் உயர்வானவன் என்று கிறிஸ்தவர்கள் சொல்லுவதை என்ன செய்யப்போகிறீர்கள்?
சாதியை ஒழிக்க மதம் மாறினால் முடியுமென்றால் கிறிஸ்தவர்களின் ஆட்சியில், அதாவது 500 வருட ஆட்சியில் அது முடியாமல் போனது ஏன்? மதர் தேராசாவும் தனது வாரிசாக மதம் மாறிய “பிராமணப்” பெண்ணை நியமித்த நோக்கம் என்ன? யாழ்ப்பாணப் பாதிரிகள் எப்போதும் “உயர் சாதி” கத்தொலிக்கரிடம் இருந்து வருவது எப்படி?
அடிமை குடிமை என்பது கிறிஸ்தவர்கள் வந்து அழியவில்லை. அந்த பாகுபாட்டை கிறிஸ்தவ ஆட்சியாளர்களும் தங்களின் லாபத்துக்குப் பயன் படுத்தினார்கள் என்பதுதான் உண்மை!
thurai
இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தமிழரிடம், தமிழ்னாகப் பிறந்த யாவரையும் தமிழனாக மதிக்காவிடினும்
மனிதனாக மதிக்கும் பழக்கமாவது இருந்ததா?இ தில் இந்துக்கழும்,கிறிஸ்தவர்கழும் அட்ங்குவர்.
எனவே சிங்களவரையும், முஸ்லிம்களையும், சர்வதேசத்தையும் குற்ரம் கூறமுன் ஈழத்தில் தமிழர் தமிழர்களிற்கும், புலிக்ள் தமிழர்களிற்கும் செய்த கொடுமைகளை கருத்திற் கொள்ள வேண்டும்.
துரை
thurai
//தலைவருக்காக உயிரை விடுவோம் தலைவரின் ஆணைகளை நிறைவேற்றுவோம் என்று முட்டாள்தனமாக சத்தியப் பிரமாணம் செய்து கொலைகள் செய்து கொள்ளையடித்து இறுதியில் முள்ளிவாய்க்காலில் மல்லாந்தவர்களை எந்தக் காலத்திலும் மதிக்க முடியாது.//நந்தா
படிக்காதவர்கழும்,பணவசதியில்லாதவர்கழுமே முன்ணனியில் நின்று போராடி உயிரை விட்டவர்கள். இயக்கத்தை ஆரம்பித்தவர்க்ழும், புலத்திலிருந்து புலியை வளர்த்தவர்கழும் தங்கள் உயிர்களையும் , உடமைகளையும் பாதுகாப்பாகவே வைத்திருந்தனர், வைத்திருக்கின்றனர்.
இதுமட்டுமல்ல பலாத்காரமாக புலிகளால் சேர்க்கப்பட்டோரே இறுதிப்போரில் முன்னரங்குகளில் போராடி உயிர்துறந்தனர். அண்மையில் வந்த தகவலின் படி மலைநாட்டுத் தமிழர்கழும் புலிகளின் படைகளில் உயர் பதவிகளில் இருந்துள்ளனர். அவர்களே இறுதியில் இறந்துமுள்ளனர்.
படிக்காதவர்க்ழும்,பணவசதி குறைந்தவர்ழும் பெரும்பான்மையாக கொண்டவ்ர்களே தமிழர்களால் தாழ்த்தப்பட்ட தமிழர்கள். அதோடு ஈழத்தமிழரில் மலைநாட்டுத் தமிழர் நிலைமை இங்கு நான் கூறவேண்டியதில்லை. இப்படியான தமிழரின் பேரழிவிற்கு வித்திட்டவர்கள் யார்? இன்றும் புலம் பெயர்நாடுகளிலிருந்து தமிழ்த்தேசியம், சுயநிர்ணயம், பேசும் உல்லாச விடுதலை வேங்கைகழும் அரசியல் கோளைகழுமேயாகும்.
இவர்களிற்கும் இறந்த்வர்களிற்கும் ஏதும் தொடர்புகள் உண்டா? இறந்த்தவர்கள் புலம்பெயர் புலிகளிற்கு விளம்பரப் பிணங்களேயாகும். தொடர்ந்தும் பிணங்களை காட்டி பிழைப்பு நடத்துவதற்கு ஜிரிவி யும் புலிகளின் ஆதரவாளர்கழும் புலத்தில் படும் பாடு சிறுதல்ல.
புலியோடு சேர்ந்து இற்ந்தவர்களெல்லாம்,புலிகழுமல்ல, புலியை எதிப்பவர்களெல்லாம் தமிழர்களை நேசிப்பவர்க்ழுமல்ல.
மரணத்தின் பின் மனிதர் யாவரும் ஒன்றே. இதனை அறியாத இந்து உய்ர் வேளாளர்களே மயானத்தில் கூட தமிழர்களிற்கு சம உருமை கொடுக்க மறுத்து, தமிழர்களிற்குள்ளேயே போரைநடத்தியவர்கள்.
// கருப்பனை விட வெள்ளையன் உயர்வானவன் என்று கிறிஸ்தவர்கள் சொல்லுவதை என்ன செய்யப்போகிறீர்கள்//நந்தா
ஆபிரிக்காவிலுள்ள, கிறிஸ்தவர்கள் என்ன சொல்கின்றார்கள். தமிழர்களில் வெள்ளையுமிருக்கு, கறுப்புமிருக்கு இதில் யார் பெரிது என கிறிஸ்தவம் சொல்கின்றது?
புலம் பெயர்நாடுகளில் நிற வேறுபாடோ, இன வேறுபாடோ கிறிஸ்தவர்கள் பார்ப்பதாக நான் அறியவில்லை. அப்படி தெரிந்தால் இங்கு பகிரங்கப்படுத்தவும்.
இந்துக்கள் பரம்பரையில் வந்த கத்தோலிக்க தமிழ் பாதிரிகள் சிலர் உலகமெங்கும் சாதி வேற்றுமை பார்க்கின்றார்கள். இதனை முதலில் அக்ற்ரி விட்டு நந்தா பிறர் மீது குற்ரம் சாடடினால் ஏற்கக்கூடியதாகவிருக்கும்.
/சாதியை ஒழிக்க மதம் மாறினால் முடியுமென்றால் கிறிஸ்தவர்களின் ஆட்சியில், அதாவது 500 வருட ஆட்சியில் அது முடியாமல் போனது ஏன்//ந்ந்தா
தாழ்த்தப்பட்டவர்கள் ஆங்கிலம் படித்து, சிங்களவ்ரிடையே அரச உத்தியோகம் பார்க்கத்தொடங்கிய பின்னர்தான், சாதிபாகுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் தலைநிமிர்ந்து வாழ்ந்தனர். அல்லாவிடில் இன்றும் வேலியடைக்கவும் தோட்ட வேலைக்கும், தான் நாலு முள வேட்டியுடன்
நடமாடிக் கொண்டிருப்பார்கள்.
துரை
BC
//நந்தா-அடிமை குடிமை என்பது கிறிஸ்தவர்கள் வந்து அழியவில்லை. அந்த பாகுபாட்டை கிறிஸ்தவ ஆட்சியாளர்களும் தங்களின் லாபத்துக்குப் பயன் படுத்தினார்கள் என்பதுதான் உண்மை!//
அம்பேத்கார் பிறந்த தினமான ஏப்ரல் 14ம் தேதி அன்று நெல்லையில் தலித் கிறிஸ்தவர்கள் உரி்மை மீட்பு மாநாடு நடைபெற உள்ளது. -செய்தி
Ajith
The caste problem is nothing to with LTTE and Tamil freedom from Sinhala butcherism. Sinhala community itself divided in terms of Caste. Caste is there over million years. It is not sinhalese who gave education to poor tamils. Majority of Sinhala people were worse than the poor tamils under the oppressive high caste Sinhala. It is mad to think that sinhala rulers generous made tamils better off. They had the government and powers. Why Sinhala youths took arms if Sinhala governments were good to them.
NANTHA
//இந்துக்கள் பரம்பரையில் வந்த கத்தோலிக்க தமிழ் பாதிரிகள் சிலர் உலகமெங்கும் சாதி வேற்றுமை பார்க்கின்றார்கள். இதனை முதலில் அக்ற்ரி விட்டு நந்தா பிறர் மீது குற்ரம் சாடடினால் ஏற்கக்கூடியதாகவிருக்கும்.//
முன்னர் கிறிஸ்தவ பாதிரிகள் சாதி பார்ப்பதில்லை என்று நாள் கணக்கில் என்னுடன் விவாதம் செய்த நீங்கள் இப்போது “இந்துக்கள்” பரம்பரையில் வந்த கத்தோலிக்க பாதிரிகள்” என்று யாரை சாடுகிறீர்கள்?
அந்தப் பாதிரிகளுக்கு அங்கீகாரம் கொடுப்பவர்கள் “வெள்ளைப்” பாதிரிகள்தான் என்பதை புரிந்து கொண்டால் நல்லது! தவிர நந்தா ஒரு “இந்து மதவாதி” என்று நாட் கணக்கில் முத்திரை குத்தியவர் நீங்கள். பாதிரிகள் “இந்து மத” பரம்பரையில் வந்தார்களோ அல்லது போனார்களோ என்பது பற்றி நான் கவலைப்படவில்லை. வத்திக்கான் போப் நியமனக் கடிதம் கொடுத்த பாதிரிகள் நடந்து கொள்ளும் விதம் பற்றி நீங்கள் வத்திக்கானுக்கு அறிவிப்பது நல்லது.
பாதிரிகள் செய்யும் அட்டகாசங்களுக்கு “இந்துக்கள்” பரிகாரம் தேடுவது கஷ்டம். ஆனால் இந்துக்களின் விவகாரங்களில் தலையிட்டால் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்!
இந்துக்களுக்கு எதிராக பாதிரிகள் அட்டகாசம் பண்ணினால் அது “நல்லது” என்று ஏற்றுக் கொள்ளும் நீங்கள் பாதிரிகள் தங்கள் மந்தைகளுக்கு எதிராக செய்யும் அட்டகாசங்களை நீங்கள் போராடித் தீர்க்க வேண்டும்!
NANTHA
அம்பேத்கார் தனது வாழ் நாளின் இறுதியில் பௌத்த மதத்துக்கு மாறினார். இந்திய “தலித்துக்கள்” அம்பேத்காரின் வழியை பின்பற்றியிருக்கலாம். கிறிஸ்தவர்களாக மாறி வெளிநாட்டில், அதுவும் இந்தியாவுக்கு எதிரான வெளிநாட்டுக் கொளகைகளை வைத்திருக்கும் போப்,எலிசபெத் ஆகியோரை தங்கள் மத தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள “தலித்துக்கள்” அம்பேத்காரை எதற்காகப் பாவிக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை!
thurai
//முன்னர் கிறிஸ்தவ பாதிரிகள் சாதி பார்ப்பதில்லை என்று நாள் கணக்கில் என்னுடன் விவாதம் செய்த நீங்கள் இப்போது “இந்துக்கள்” பரம்பரையில் வந்த கத்தோலிக்க பாதிரிகள்” என்று யாரை சாடுகிறீர்கள்//நந்தா
நான் நிதானத்துடன் சிலபாதிரிகளென்றே கூறுகின்றேன். இந்து வேளாளர்களாக் இருந்து கிறிஸ்தவ பாதிரிகளான சிலர். கண்மூடித்தனமான புலி விவாதமல்ல. தமிழரென்றால் இந்துக்கள், என்பதற்கும் பிரபாகரனின் கொடூரப்புலிகள் சொன்னதுபோல் புலிகள் என்றால் தமிழர் என்பதற்கும் வேறுபாடில்லை. இரண்டுமே தமிழரை அழிவின் பாதைக்கே கொண்டு செல்லும்.
துரை
PALLI
// ஆனால் இந்துக்களின் விவகாரங்களில் தலையிட்டால் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்!//
இப்படி வீரம் பேசிவிட்டு ஏதாவது ஒரு மூலையில் கிடங்கை கிண்டி அதுக்கை போர்வையால் மூடிகொண்டு படுங்கோ; பல்லியை போல் அன்றாடம் காட்ச்சிகள் தர்மடி வங்கிகிறோம்; இதுதானே 30 வருடமாய் நடக்கிறது;; நாவடக்கம் நந்தாவுக்கு வரவே வராதா??
சாந்தன்
nantha
பதிலடி…அதிரடி எல்லாத்தையும் ஒரு சைற்றில் வையுங்கள். எப்போது ‘ஏடு தொடக்கல்’ விவகாரத்துக்கு கோவிலுக்கு முன்னால் அல்லது அந்த பாதிரியின் வீடு/அலுவலகத்துக்கு முன்னார் போராட்டம் நடத்தப்போகிறீர்கள் என்பதற்கு இன்னும் பதிலில்லை!
NANTHA
//இப்படி வீரம் பேசிவிட்டு ஏதாவது ஒரு மூலையில் கிடங்கை கிண்டி அதுக்கை போர்வையால் மூடிகொண்டு படுங்கோ; பல்லியை போல் அன்றாடம் காட்ச்சிகள் தர்மடி வங்கிகிறோம்; இதுதானே 30 வருடமாய் நடக்கிறது;; நாவடக்கம் நந்தாவுக்கு வரவே வராதா??//
பல்லிக்கு தர்மஅடி யார் கொடுக்கிறார்கள்?
பாதிரிகளுக்கு இந்து விவகாரங்களில் தலையிட்டால் தர்ம அடியும் கிடைக்கும்.
நாவடக்கம் பற்றி பாதிரிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் பாதிரிகளுக்கு அறிவுரை சொல்லுவது நல்லது!
NANTHA
இந்து வேளாளர் என்று இருந்து பாதிரிகளாக வந்தவர்கள் யாரென்று தெரியாது. ஆனால் பாதிரிகளாகி “வெள்ளாளர்” ஆகிய பாதிரிகள் பற்றி தெரியும்! உதாரணம் நெடுந்தீவு ஜோசேப்பு இராயப்பு!
thurai
//இந்து வேளாளர் என்று இருந்து பாதிரிகளாக வந்தவர்கள் யாரென்று தெரியாது. ஆனால் பாதிரிகளாகி “வெள்ளாளர்” ஆகிய பாதிரிகள் பற்றி தெரியும்! உதாரணம் நெடுந்தீவு ஜோசேப்பு இராயப்பு!//நந்தா
சில இந்துக்களின் இரத்தத்தில் சாதி வெறி உள்ளது. இவர்கள் பிறப்பினால் உயர்ந்தவர்கள் என்னும் அநாகரீகமான எண்ணங்களைக் கொண்டவர்கள். இதற்காகவே இவர்களில் சிலர் பிற மதங்களை மதிப்பதில்லை. காரணம் கிறிஸ்தவம் இடையில் வந்ததொன்று. இங்கே நந்தாவின் இந்து வெள்ளாளர் புகழ்பாடல் தெளிவாகத் தெரிகின்றது. இதுவே புலிக்கு முன்பே தமிழரை அழித்து வந்த கொடிய நோயாகும்.
துரை
chandran.raja
பச்சையுள்ள இடத்தை தேடிப்போகிறதும் குளம் கண்ட இடத்தில் …. கழுவுகிறதும் மனித இயல்பு. இப்படியான வரையறைக்குள் வந்தவர்களே இந்த வெள்ளையங்கி உடுத்த பாதிரிகள். சுருக்கமாகச் சொன்னால் கற்பனைவாத அதாவது மேல்யுள்ள உலகத்தை தமது மக்களுக்கு காட்டிவிட்டு இந்த உலக-யதார்தஉலக இன்பங்களை தமது பிடிக்குள் வைத்திருப்பதே அவர்களின் நோக்கம். இதற்கு பாதிரிமட்டுமல்ல இன்றைக்கு கண்ட
நித்தியாணதத்திலிருந்து அரசியல் போராட்டம் நடத்தும் இலங்கை புத்தபிக்குகள் வரை ஏராளமான உதாரணங்கள் இருக்கிறது. இதையாரும் பிரச்சனையாக எடுத்து விவாதிக்க புறப்பட்டால் பயன்தரப் போவது ஒன்றுமே இல்லை.
மோச்சத்தையும் மனஅமைதியையும் தேடிப்போனவர்களை அனாதரவாக அபலைகளாகவும் நடுத்தெருவில் விட்டுவிட்ட புத்தபிக்குகளை நாம் கண்டுள்ளோம். இவர்களின் காமவெறியும் சதாரண மனிதனுக்கு வரக்கூடியதல்ல. இன்று கேள்விபடுகிற குழந்தைகளின் துஸ்பிரயோகத்திற்கு வத்திக்கானே பொறுப்பு எடுக்கவேண்டும். காஞ்சிபுரதேவதாசன் கருவறையில் நவீனமுறையில் கருவூட்ட புறப்பட்டதை மறக்க முடியுமா?.
ஆக மொத்தத்தில் வாழ்வுதேடி வந்த அகதிகள் நிலையே இந்த மதகுருமாரும் பாதிரிகளும். எந்த மதகுமாருக்க்கும் இல்லாத அங்கீகாரம் பாதிரிமாருக்கும் வத்திக்கானுக்கும் இருக்கிறது. இது சதாரணமாக யாரும் எடுத்துக் கொள்ள முடியாது.
உலகில் கொடுமையானது பஞ்சமே வறுமையோ மரணமே அல்ல.இந்த மதவாதிகளே!.அதில் பலநுhறு ஆண்டுகால குற்றங்களை உள்ளடக்கியிருக்கிறது இந்த வெள்ளயங்கியும் வத்திக்கானும். இறுதியாக…1918 ம் ஆண்டு அயர்லாந்து போராட்டத்தை உள்ளடக்கி எம்.ஜி.எம் தயாரிப்பில் ஒரு பிரமாண்டமானபடம் கெலிவூட் தயாரிப்பில் வெளிவந்தது. அதன் பெயர் “ராஜன் மகள்” அதில் வரும் பாதிரியார் கண்ணுக்கு தெரியாத உலகத்தைப் பற்றி கதைக்கவில்லை. இந்த உலகத்தில் ஏற்படும் உறவுகளுக்கும் பிரச்சனைகளும் தீர்வு தேடுவதும் அல்லாமல் துன்பப்பட்டவர்களின் வாழ்வில் தாமும் பங்கெடுத்து ஒரு பங்குதந்தையாக இருக்கிறார். இந்த தன்மை கிறீஸ்தவமதத்திற்கு மட்டும் உரியதல்ல. இதை புத்தமத குருமாரிலும் இந்துமதக் குருமாரிலும் தேடிப்பிடிக்க- கண்டுகொள்ள முடியும். நான் வேண்டுவது உழைப்பாளர்களே! இனவாதத்திற்குகோ மதவாதத்திற்கோ நீங்கள் காரணியாக இருந்துவிடாதீர்கள்.எமது பணி முற்றிலும் வேறு வகையானது.
NANTHA
//இங்கே நந்தாவின் இந்து வெள்ளாளர் புகழ்பாடல் தெளிவாகத் தெரிகின்றது. இதுவே புலிக்கு முன்பே தமிழரை அழித்து வந்த கொடிய நோயாகும்.//
நான் எழுதிய “தமிழ்” துரைக்கு புரியவில்லை. இன்னுமொருமுறை படிப்பது நல்லது. ஆயினும் வழக்கமான “இந்துமத” எதிர்ப்பு மாத்திரம் தெரிகிறது.