முல் லைத்தீவு மாவட்டத்தில் மீளக் குடியமர்த்தப்பட்டிருப்போருக்காக 3700 வீடுகளை புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டிருப்பதாக மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி செல்வராஜா தெரிவித்தார். இதேவேளை மோதல்களின் போது சேதமடைந்த 2 ஆயிரம் வீடுகள் புனர்நிர்மாணம் செய்யப்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அபிவிருத்திகளை முன்னெடுக்கவும் இடம்பெயர்ந்தோருக்கு பல்வேறு உதவி களைச் செய்யவுமென முன்வந்த தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் 15க்கு ஜனாதிபதி செயலணி அனுமதி வழங்கியுள்ளது.
அதனடிப்படையில் யுஎன். ஹெபிட்டாட், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், நர்ட் ஆகிய தன்னார்வு நிறுவனங்களே வீடுகளை அமைத்துக் கொடுக்க முன்வந்துள்ளன.
பார்த்திபன்
அறிவிப்புகள் வருமளவிற்கு செயற்பாடுகள் நடைபெறுவதாகத் தெரியவில்லை. நினைவுச் சின்னங்களும் இராணுவ முகாம்களும் அமைக்கும் வேகத்தில், பாதியையாவது அகதிகளாக அலையும் மக்கள் விடயத்திலும் அரசு காட்ட வேண்டும். அந்த மக்கள் படும் அவலங்கள், அங்கு சென்று திரும்பிய சுகி சிவம் அவர்களின் பார்வையில்…
http://www.tubetamil.com/view_video.php?viewkey=8dd67da25a2dcab4ac8f
மாயா
மக்களைக் கொல்ல காசு கொடுத்தவர்கள், மக்கள் வாழக் காசு கொடுப்பதில்லை. அந்த அளவு ஈழ மக்கள் ஈர மனம் படைத்தவர்கள்.
சுகி சிவம் கூட இந்தியாவின் பாதுகாப்பைத்தான் முக்கியமாக எண்ணுகிறார். பிரபாகரன் வருவார் என பேசும் , தமிழக அரசியல் கோமாளிகளுக்கு எதுவும் சொல்லவில்லை.
35 வருட யுத்த பூமியை ஓரிரு வருடங்களில் வசந்தம் வீச வைக்க முடியாது.
உதாரணத்துக்கு , சுவிஸில் சிறீலங்கன் டயஸ்பொரா அமைப்பு , வன்னி போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கூடியது. இன்னும் ஒரு பால் பக்கட் கூட கொடுக்க இவர்களால் முடியவில்லை. இன்னும் யாப்பையும் , பெயரையும் திருத்துவதிலேயே காலத்தை கழித்துக் கோப்பி குடித்து , மின் அஞ்சல் யுத்தமே நடக்கிறது.
புலிகளோ, இன்னமும் வட்டுக் கோட்டையில் கொடி ஏற்றவும் , நாடு கடந்து தமிழீழம் பெறவும் முனைகின்றனர். உன் குடும்பம் மேல் , உனக்கு ஈரம் இல்லையென்றால் எதிரியின் மனதில், ஈரம் உண்டாக வேண்டுமென்று நீ எப்படி நினைப்பாய்?
நம்மை விட அவன் எவ்வளவோ பரவாயில்லை. இது அந்த வன்னி மக்கள் சொல்வது.
நாம் இன்னும் உண்மையாக இல்லை. பேசுவதிலும் , எழுதுவதிலுமே வீரர்களாக இருக்கிறோம். இதுவே உண்மை.
palli
பார்த்திபன் நல்ல ஒரு பதிவு. உங்களுடையது (சுகி சிவம்) யதார்த்தம் இதுதான்; உங்கள் தேடல் தொடர பல்லியின் வாழ்த்துக்கள்.
மாயா
இன்று கிளிநொச்சியிலிருந்து ஒருவர் தொடர்பு கொண்டார். சுகி சிவம் அவர்கள் சொல்வது குறித்து கதைக்கக் கிடைத்த போது , இதைத்தான் அரசாங்கம் செய்யப் போகிறது என்றார். 3 வருடங்களுக்குள் உள்ள சொத்துகளுக்கோ, வீடுகளுக்கோ உரிமை கோராவிட்டால் அதை அங்கே வீடு வாசல் இல்லாமல் இருப்பவர்களுக்கு எடுத்துக் கொள்ளலாமாம்.
எனக்குத் தெரிந்த மல்லாவிக் குடும்பம் ஒன்று திரும்பிச் சென்ற போது , அவர்களது வீடு , வீடிழந்த ஒரு தமிழ் குடும்பத்துக்கு கொடுக்கப்பட்டிருந்தாம். இவர்கள் அரசாங்க அதிபரை சந்தித்த பிறகு , அவர்களுக்கு வேறு ஒரு இடம் வழங்கப்பட்டதாம். அவர்களுக்கு இன்னுமொரு இடம் கொடுக்கப்படும் வரை , இருந்த வீட்டிலேயே இருக்க விடுமாறு அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டாராம்.
இது போன்ற நல்லதும் அங்கே நடக்கிறது. அந்த மக்கள் வாழ்வு வளமானால் அதுவே போதும்.