புலிகளின் கவிஞர் என கூறப்படும் புதுவை இரத்தினதுரையின் விடுதலை கோரி அவரின் சகோதரி ராசலட்சுமி தனது கணவன் பத்மநாதனுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேரில் சென்று சந்தித்து உரையாடினார்.
முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது கவிஞர் புதுவை இரத்தினதுரை தனது மனைவி மற்றும் குடும்பம் சகிதமாக படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கிச் சென்றிருந்தார். இதன் போது புதுவை இரத்தினதுரை தவிர்ந்த அவரது மனைவியும் பிள்ளைகளும் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டு திருமலையில் வசித்து வருகின்றனர்.
இத்தகவலை புதுவை இரத்தினதுரையின் சகோதரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடம் தெரிவித்ததோடு, தனது சகோதரனை விடுவித்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் போது பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புலிகளின் ஊடகப் பேச்சாளரான தயா மாஸ்டரின் சகோதரியும் இவ்வாறு தம்மிடம் உதவி கேட்டு வந்ததாகவும், தாம் அதற்கான உதவிகளைச் செய்திருந்ததாகவும், அந்த நிலையில் தயா மாஸ்டர் இன்று வடமராட்சியில் சுதந்திரமாக நடமாடித் திரிவதாகவும் தெரிவித்தார்.
புதுவை இரத்தினதுரை குறித்த விபரங்களை கண்டறிந்து அவரது விடுதலைக்காகவும் தம்மால் மனிதபிமான அடிப்படையில் உதவ முடியும் எனவும் உறுதியளித்துள்ளதோடு, அதற்கான நடவடிக்கைகளிலும் தாம் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
BC
டக்ளஸ் தேவானந்தாவின் உதவி தான் இங்கேயும் தேவைபடுகிறது.
இரத்தினதுரை வெளியே இருந்து வேறு ஒரு தமிழர் டக்ளஸிடம் இப்படி உதவி கேட்டிருந்தால் துரோகிடம் கையேந்தும் நாய் தமிழன் என்று கவிதையே பாடியிருப்பார்.
nathan
தமிழ் மக்களுக்கு கிடைத்துருக்கு ஓரு மனித நேயமுள்ள ஓருமனிதன் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா
மாயா
இனி புதுவையையும் , புலிகள் துரோகிகள் என்பர். புதுவை , டக்கிளஸை பற்றி புதுப்பாட்டு கெதியில் எழுதுவார். ரசிக்க நாங்கள் ரெடி………
thurai
உலகெங்கும் பதுங்கியுள்ள புலிகள், அவர்களை மூடி வைத்து வளர்ப்பது உலகத் தமிழர் பேரவை. இதுவரை காலமும் இவர்களிற்கு புத்தி சொன்னாலோ, தவறுகளை சுட்டிக் காட்டினாலோ கிடைப்பது துரோகிப் பட்டமும் போட்டுத் தள்ழுதலுமேயாகும். புலிக்கூட்டத்திற்கு அரசியல் தீர்க்கதரிசனம் இல்லையென்பது கூறத்தேவையில்லை.
இன்னும் எத்தனை புலிகள் அரசாங்கத்துடன் சேரப்போகின்றார்கள் என்பதை முன் கூட்டியே உலகத் தமிழர் பேரவையால் கூறவோ, கண்டுபிடிக்கவோ முடியுமா?
நாடு கடந்த தமிழ் அரசில் ஒரு நாட்டின் அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்டவர் மறுதினமே ,இலங்கை அரசுடன் போய்
சேரமாட்டாரென்பதை யாராவ்து உறுதிப்படுத்துவார்களா?
இவர்களிற்காகவும், இவர்களாலும் பிழைப்பு நடத்தும் ஜிரிவி போன்றவை இப்படியான சந்தர்ப்பவாதிகளை தெரிந்தெடுத்து அரசாங்கத்திற்கு தமிழர்களின் துரோகிகளை வினியோகம் செய்யும் நிறுவனங்களா?
துரை
NANTHA
தாடியும் தலையும் வளர்த்து முகாமுக்குள் “பொது” சனமாக இருந்த இந்த ரத்தினதுரையை முகாமில் இருந்த உண்மையான “பொதுசனம்”தான் அடையாளம் கண்டு பிடித்துக் கொடுத்தது. புலிகளோடு சேர்ந்து சில சில்மிஷங்கள் பண்ணியதாகவும் தகவல்கள் உண்டு. வெளியே வந்தால் பாடுவாரா அல்லது ஓடுவாரா என்பது பொறுத்திருந்து பார்க்கவேண்டிய விடயம்.
சாந்தன்
//….நாடு கடந்த தமிழ் அரசில் ஒரு நாட்டின் அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்டவர் மறுதினமே ,இலங்கை அரசுடன் போய்
சேரமாட்டாரென்பதை யாராவ்து உறுதிப்படுத்துவார்களா?….///
நிச்சயமாக உறுதிப்படுத்த முடியாது. ஏனென்றால் நேற்றுவரை இருந்து விட்டு இன்று சிங்கக்கொடியைப் போர்த்தி்க்கொண்டு ஸ்ரீலங்கா எம்பசிக்கு முன்னால் கொடிபிடித்தவர்கள், திடீரென இந்துப்பழங்களாக மாறியவர்கள், இன்வெஸ்ற்மன்ற் அட்வைசர்களாக மாறி ஹொட்டேல் கட்டுமாணத்துக்கு திட்டம் கொடுப்பவர்கள், இம்ம்மாற்றங்களால் ‘என்னடா இது நமக்குள்லேயும் இப்படியா’ என திகைத்து இரவிரவாக கீபோட்டை தட்டுபவர்கள், இன்றுகையைப் பிசைந்து ‘தனிமனிதன்’, ‘முன்னேற்றம்’ என கதை விடுபவர்கள் எல்லாம் இருக்கிறார் என நாம் எதிர்பார்த்தோமா? இல்லையே?
ஆனாலும் நாடுகடந்த அரசியலில் ஒரு முக்கிய விதி ஒன்றுண்டு. அதாவது ஒருவர் தடம் மாறுமிடத்து அவரை மீழப்பெற வழிவகை உண்டு. வாக்களித்த மக்கள் ஒரு கையெளுத்து இட்டு அவர் தமது கொள்கைகளுக்கு எதிராக செயற்படுகிறார் எனக்கோரி மீழ்ப்பெறலாம்.
palli
// ரசிக்க நாங்கள் ரெடி………//
நாங்க எப்பவோ ரெடி:
பாதுகாக்க தோழர் ரெடியா;
தாடி வைத்த தமிழா;
தன்னிகர் இல்லா தோழா;
என்னைநீ காப்பாற்று;
உன் புகழ் நான் பாட;
ஏதோ பல்லியால் முடிந்தத்து,
BC
பல்லின் கவிதை சுப்பர்.