சொத்து விபரங்களை வெளியிடுமாறு கோரி ஊடகவியலாளர்களுக்கு ஊடக அமைச்சினால் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. செய்தித்தாள் நிறுவனங்கள் மற்றும் செய்தி ஆசிரியர்களுக்கு இது தொடர்பான கடிதங்களை ஊடக அமைச்சு அனுப்பி வைத்துள்ளதாக, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.கனேகல தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ம் திகதிக்குள் தகவல்களை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1988ம் ஆண்டு சொத்து பொறுப்பு நிர்ணய சட்டத்தின் கீழ் , சொத்துக்கள் குறித்த தகவல்களை வெளியிடுமாறு ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சகல ஊடகவியலாளர்களுக்கும் இந்த உத்தரவு குறித்த கடிதங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1975ம் ஆண்டு அமுல்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான சட்டம், 1988 ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது.
NANTHA
இது ஒரு நல்ல முடிவு.