பிரிட்டன் மேலும் ஒரு மில்லியன் பவுண் மனிதாபிமான உதவி

மனிதாபிமான உதவியாக மேலும் ஒரு மில்லியன் பவுண் நிதியை இலங்கைக்கு வழங்குவதாக பிரிட்டன் நேற்று அறிவித்தது. ஏற்கனவே கடந்த 18 மாத காலத்தில் பிரிட்டன் மொத்தம் 12.5 மில்லியன் பவுண் நிதியை மோதலினால் இடம்பெயர்ந்த மக்களின் ஆதரவுக்காக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வன்னியில் நிலக்கண்ணி அகழ்வு நடவடிக்கைகளுக்கும் பிரிட்டன் உதவியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட மேலதிக ஒரு மில்லியன் பவுண் நிதி நலிவடைந்த குடும்பங்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் மீளப் பெறுவதற்கான தொழில் நுட்ப நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் பீட்டர் ஹெய்ன்ஸ் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • sumi
    sumi

    பிள்ளையையும் கிள்ளுவோம் தொட்டிலையும் ஆட்டுவோம்…இதேகதிதான் நாடு கடந்த தமிழீழத்திற்கும் என்று சொல்லாமல் சொல்லுகின்றதா பிரித்தானிய அரசு???

    Reply
  • Ajith
    Ajith

    Britain is very clear about its impartial stand alike China or India. China and India spent billions to destroy tamils.

    Reply