2010 தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை – மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற அரசு முயற்சிக்கும் : த ஜெயபாலன்

Election Poster 2010* இலங்கை பாராளுமன்றத்தின் 14வது தேர்தலும் விகிதாசாரத் தேர்தல் முறைiயின் ஆறாவது தேர்தலும் சுயாதீனமான முறையில் நடந்து முடிந்துள்ளது. கண்டி, திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள் அங்கு ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக உடனடியாக அறிவிக்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் ஆணையாளர் இது பற்றிய முடிவை நாளை அறிவிப்பார் எனத் தெரிய வருகின்றது.

* ஏனைய 20 தேர்தல் மாவட்டங்களின் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது. வெளியான 180 முடிவுகளில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 117 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 46 ஆசனங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 12 ஆசனங்களையும் ஜனநாயகத் தேசிய கூட்டணி 5 ஆசனங்களையும் பெற்றுள்ளது.

* இன்னமும் கண்டி 12 ஆசனங்களும் திருகோணமலை 4 ஆசனங்களுமாக 16 ஆசனங்களுக்கான முடிவுகள் வரவேண்டிய நிலையில் மொத்தமான 196 ஆசனங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதத்திர முன்னணி 7 சக 2 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 5 ஆசனங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரு ஆசனங்களையும் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கணிப்பின்படி ஆளும் ஐக்கிய மக்கள் சுதத்திர முன்னணி 126 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 51 ஆசனங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களையும் ஜனநாயகத் தேசிய கூட்டணி 5 ஆசனங்களையும் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

* தேசியப் பட்டியலில் வழங்கப்படவுள்ள 29 ஆசனங்களில் 17 ஆசனங்களை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு 5 முதல் 10 ஆசனங்கள் வரை தேவைப்படலாம்.

* மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைவதற்கு முயற்சிக்கலாம் அல்லது ஏனைய கட்சிகளில் இருந்து குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சிலரை வாங்குவதற்கு அரசு முயற்சிக்கும்.

* இத்தேர்தல் சிறுபான்மை இனங்களைப் பொறுத்தவரை மிகவும் பாதகமாகவே அமைந்துள்ளது. சிறுபான்மை இனங்களின் ஆதரவின்றியே பெரும்பான்மைக் கட்சிகள் ஆட்சியமைக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவின்றியே மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற முடியும் என்பதும் நிரூபனமாகியுள்ளது.

* இத்தேர்தல் முடிவுகளின்படி வெற்றி பெற்ற கட்சிகளில் இருந்து பல புதுமுகங்கள் சில பிரபல்யங்கள் பாராளுமன்றம் செல்லவுள்ளனர்.

* இத்தேர்தலில் பல பத்துக் கட்சிகள் சில பத்து சுயேட்சைக் குழுக்கள் போட்டியிட்ட போதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயகத் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய நான்கு கட்சிகள் மட்டுமே பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன. எந்தவொரு சுயேட்சைக் குழுவையும் மக்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* யாழ்ப்பாணம்ää மட்டக்களப்புää வன்னி ஆகிய தமிழ் மாவட்டங்கள் தவிர்ந்த அனைத்து மாவட்டங்களிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூடுதல் ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

* தமிழ் மாவட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மையான ஆசனங்களைப் பெற்ற தனிக் கட்சியென்ற இடத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

* இருந்த போதும் தமிழ் மாவட்டங்களிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6 ஆசனங்களைப் பெற்றுள்ளது. எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

* தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலு இழக்கப்படுவது தவிர்க்க முடியாததானாலும் அக்கட்சி 14 அல்லது 15 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்க வெற்றியே.

* இத்தேர்தலைப் பொறுத்தவரை ஜனதா விமுத்தி பெரமுனையும் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஜனத்தா விமுத்தி பெரமுனை 39 ஆசனங்களில் இருந்து முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் இணைந்து அமைத்த ஜனநாயகத் தேசிய முன்னணி 5 ஆசனங்களை மட்டுமே பெற்றுள்ளது.

* ஐக்கிய தேசியக் கட்சியும் தனது வாக்குப் பலத்தை இழந்து மிக மோசமாக இழந்துள்ளது. எந்தவொரு மாவட்டத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியால் கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

* தமிழ் மாவட்ட தேர்தல் முடிவுகளின் படி பல்வேறு தமிழ் அரசியல் குழுக்களும் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வி ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் தலைவர் சிறிதரன் ஆகியோர் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு உள்ளனர்.

* குறிப்பாக கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் செல்வராஜா, பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் புலம்பெயர்ந்த மக்களின் ஆதரவைப் பெற்றிருந்த போதும் தாயக மக்களால் நிராகரிக்கப்பட்டு உள்ளனர். இத்தேர்தல் புலம்பெயர் மக்களுக்கு தாயக மக்கள் வழங்கிய ஒரு பாடமாகவும் அமைந்து உள்ளது.

* இவர்களைவிடவும் தமிழீழ விடுதலைப் புலிகளால் பாராளுமன்றம் அனுப்பப்பட்டு பின் கட்சி தாவிய தங்கேஸ்வரி கதிர்காமநாதனும் மற்றம் விக்கிரமபாகு கருணாரட்ணாவுடன் இணைந்து கொண்ட ந சிறிகாந்தா, எம் கெ சிவாஜிலிங்கம் ஆகியோரும் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.

* தமிழ் தேசியக் கூட்டமைப்பு 14 – 15 ஆசனங்களை வென்ற போதும் அதில் போட்டியிட்ட சில முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களும் தோல்வியைச் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

* இடதுசாரிக் கட்சிகளால் சுயேட்சைக் குழுக்கள் பெற்றுக் கொண்ட வாக்குகளைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இவர்கள் மக்கள் மத்தியில் இருந்து மிகவும் அந்நியப்பட்டு உள்ளமை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு உள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

39 Comments

  • T Constantine
    T Constantine

    இடதுசாரிக் கட்சிகளால் சுயேட்சைக் குழுக்கள் பெற்றுக் கொண்ட வாக்குகளைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இவர்கள் மக்கள் மத்தியில் இருந்து மிகவும் அந்நியப்பட்டு உள்ளமை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு உள்ளது.

    Above is not correct – All the leftist are in London and Canada busy writing ‘pinnotttam’

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…Above is not correct – All the leftist are in London and Canada busy writing ‘pinnotttam’…//
    You are contradicting yourself (as usual). Sure they are in London, Berlin, Toronto, Sydney (what a coincidence)writing in the middle of the night.
    So they can’t even see themselves, It is correct to say “அந்நியப்பட்டு உள்ளமை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு உள்ளது.”

    Reply
  • Ajith
    Ajith

    இலங்கை பாராளுமன்றத்தின் 14வது தேர்தலும் விகிதாசாரத் தேர்தல் முறைiயின் ஆறாவது தேர்தலும் சுயாதீனமான முறையில் நடந்து முடிந்துள்ளது
    I do not understand the meaning of free (சுயாதீனமான) election. Attacking MTV/Sirasa, Rigging of votes are good examples of free election.

    ஏனைய கட்சிகளில் இருந்து குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சிலரை வாங்குவதற்கு அரசு முயற்சிக்கும்.
    This is the beauty of Rajapakse family. It is a very good investment for high returns.

    சிறுபான்மை இனங்களின் ஆதரவின்றியே பெரும்பான்மைக் கட்சிகள் ஆட்சியமைக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவின்றியே மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற முடியும் என்பதும் நிரூபனமாகியுள்ளது.
    Rajapakse understood politics very well. The simple way to get racists sinhala votes is to kill as much as tamils.The proportion of Sinhalese in Sri Lanka has increased from 70% to 85% now.So, no need to worry about tamils. Within two decades it will reach 95%.

    யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி ஆகிய தமிழ் மாவட்டங்கள் தவிர்ந்த அனைத்து மாவட்டங்களிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூடுதல் ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
    Trincomalee, Amparai has now become fully Sinhala districts? Vavuniya is closing in that race.

    இத்தேர்தலைப் பொறுத்தவரை ஜனதா விமுத்தி பெரமுனையும் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஜனத்தா விமுத்தி பெரமுனை 39 ஆசனங்களில் இருந்து முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் இணைந்து அமைத்த ஜனநாயகத் தேசிய முன்னணி 5 ஆசனங்களை மட்டுமே பெற்றுள்ளது.
    Unfortunately JVP couldn’t compete with Rajapakse (Wmalawanse and Sinhala Urumaya) in racism. They should give up their alliance with minorities and should become against tamils and devolution of power to the tamils.

    இடதுசாரிக் கட்சிகளால் சுயேட்சைக் குழுக்கள் பெற்றுக் கொண்ட வாக்குகளைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இவர்கள் மக்கள் மத்தியில் இருந்து மிகவும் அந்நியப்பட்டு உள்ளமை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு உள்ளது.
    Leftist movements in the Southern Sri Lanka has sucked into sinhala racism while Northern Leftists movements not only moved to capitalist countries and engaged in propaganda for racist dictator Rajapakse and Wimal Weerawansa.

    There is no change in the election results between Presidential election and Parliamentary elections in the tamil areas. The truth of the matter is that the tamil population in the North-Eastern have reduced to 1/3 compared with 1983 by Sinhala regimes. Rajapakse will change the constitution to make sure that he remains in power for at least two decades from now and within that period, tamil representation will be further reduced to 1-2. It is the reality. The well planned project by DS Senanayake and SWRD Bandaranaiyake in 1948 soon become a complete project “Sinhala Only Sri Lanka”.

    Reply
  • மாயா
    மாயா

    மகிந்தவின் கட்சி பெரும்பான்மையாக வர வேண்டும் என்பதே , எனது விருப்பம். அது நிறைவேறியுள்ளது. அடுத்த நடவடிக்கையை அவர் சரியாக எடுப்பாராக இருப்பின் , இனவாதக் கட்சிகள் எதிர் காலத்தில் இல்லாம் போகும். நாம் அனைவரும் இலங்கையர். இனி இனவாதம் தலை தூக்கவே கூடாது.புலத்து அறிவாளிகளுக்கு நல்லதொரு பாடம். இனி வாழும் நாட்டிலாவது சரியாக நடந்தால் , அதுவே அடுத்தவனுக்கு நிம்மதி.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    தமிழர்களுக்கு ஒரு தலைவர் அல்லது தலைமை என்றுமே இருந்ததில்லை தலைமை ஒன்று இருந்திருந்தால் இன்றுள்ள நிலைமைகள் இருந்திருக்காது தலைவர்கள் இதற்காக செயற்பட்டடிருப்பார்கள்.

    புலிகள் அழிந்து ஒரு வருடமாவதற்குள்ளாகவே புலிகளின் இருந்த எச்ச சொச்சங்களையும் துடைத்தெறியப்படுவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

    ரிஎன்ஏ புலிகள் இருக்கும்போது புலிகள் என்று அமைதியாக இருந்தனர் புலிகள் அழிந்தபோது புலி ஆதரவாளர்களை வைத்து அரசை எதிர்த்தனர் இங்கேயும் புலிகளின் முட்டாள்த்தனங்களை உலகிக்கு எடுத்து காட்டப்படடது. இது முடிய புலிகளின் ஆதரவாளர்களையும் புலிகளையும் ரிஎன்ஏயிலிருந்து ஓரம் கட்டிவிட்டு புலிகளின் ஆதரவு என்ற பேச்சே இல்லாமல் ரிஎன்ஏ தனது பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்கின்றது.

    ரிஎன்ஏ, புலிகளின் புலம்பெயர் அமைப்புக்களின் ஆதரவு அணியினரையும் தோற்கடித்தின் மூலம் ஓட்டுமொத்த புலிகளையும் அவர்களது பயங்கரவாதத்தையும் முழுமையாக முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.

    இவையாவும் தமிழர் போராட்டம் இன்னும் தமிழர்களின் கைகளில் இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.

    Reply
  • Nirthanan
    Nirthanan

    //மகிந்தவின் கட்சி பெரும்பான்மையாக வர வேண்டும் என்பதே , எனது விருப்பம். அது நிறைவேறியுள்ளது. // மாயா
    சந்தோசம் மாயா. உங்களது சொந்த நம்பிக்கைகள அவர் தொடர்ந்து நிறை வேற்றட்டும். அது வரை நான் பொறுத்திருப்பேன்.

    //இவையாவும் தமிழர் போராட்டம் இன்னும் தமிழர்களின் கைகளில் இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது// த. சோதிலிங்கம். அப்ப யாரிட கையிலை இருக்கு?

    Reply
  • மாயா
    மாயா

    அனைத்து முடிவுகளையும் பார்க்கும் போது இலங்கை வாழ் அனைத்து மக்களும் ( தமிழ் – சிங்கள – இஸ்லாமிய – பறங்கி மற்றும் ஏனையவர்களும்) ஆயுத போராட்டம் ஒன்றையோ அல்லது இனவாதத்தையோ விரும்பவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இலங்கை மக்கள் தெளிவான ஒரு தீர்வை தெரியப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு இனித் தேவையானது அமைதியானதும் , பாதுகாப்பானதுமான வாழ்வேயாகும். அது கிடைக்க வேண்டுவோம்.

    Reply
  • sathees
    sathees

    வடகிழக்கிலும் ஆளும்கட்சி பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.
    கூட்டமைப்பு 12 ஆசனங்களை பெற்றிந்தாலும் கணிசமான வாக்குளைப் பெறவில்லை.
    குறிப்பாக மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சி 65ஆயிரம் – சுதந்திரக்கட்சி 62ஆயிரம், பிள்ளையான் அணி 16 ஆயிரம்
    வன்னியில் தமிரசுக்கட்சி 52 ஆயிரம் சுதந்திரக்கட்சி 48 ஆயிரம் புளொட் 4 ஆயிரம், யுஎன்பி 12ஆயிரம்

    யாழ் மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி 65 ஆயிரம் ஈபிடிபி 47 ஆயிரம் யுஎன்பி 12 ஆயிரம் காங்கிரஸ் 6ஆயிரம்

    பெரும்பான்மை தமிழ்மக்கள் வாக்களிக்கவில்லை. இது கூட்டமைப்பின்மீதான நம்பிக்கையின்மையையே வெளிப்படுத்துகிறது. ஜனாதிபதிதேர்தலில் சரத் பொன்சேகாவிற்கு அளித்த 1லட்சத்து 17ஆயிரம் பேரில் 65ஆயிரம்பேரே தமிழரசுக்கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.
    டகளஸ தேவானந்தாவுக்கு இது போதுமான வெற்றி. மகிந்த அரசின் கைகளிலியேயே தமிழ் மக்களை முழுமையாக வென்றெடுக்கும் சக்தி இருக்கிறது.
    மகிந்த அரசு ஓரளவுக்கேனும் நியாயமாக நடந்துகொள்ளுமாயின் தேசியம் தன்னாட்சி என்ற குரல்கள் தன்பாட்டில் அமிழ்ந்துபோகும்.

    Reply
  • sumi
    sumi

    பட்டுத்துணிக்கு ஆசைப்பட்டு கோமணத்தையே இழந்து நிற்கும் புலம் பெயர்ந்த தமிழினம் இனியாவது அடக்கி வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இத்தேர்தலின் உண்மையான வெளிப்பாடாகும்.இந்நிலையில் நாடுகடந்த தமிழீழம் ஒரு கேடா?

    Reply
  • Ajith
    Ajith

    sumi
    Sinhala racisim is now at its peak. It is the duty of every tamils to get together to fight vigorously against this racist sinhala race. It is the tamils aspirations that is continuously expressed by the tamils since independence for justice and equality. Tamils still hold that view and that is clearly expressed even in this election. The courage of the tamils shown during this election (voting for TNA and rejecting the elections which was held under unlawful and violent conditions is a clear message to Rajapakse tamils are not prepared to accept any form Sinhala oppression of Tamils. It is not the diaspora’s greedyness to get more than what they deserves. Is it wrong for ask for a equal rights with Sinhala masters? Do you mean tamils should be slaves of Sinhala Masters?
    Tamils should continue to fight democratically and rightfully to achieve their rights. politics never stay same. Dictators life is very short and justice will prevail.

    Reply
  • BC
    BC

    Sathees, இலங்கை தமிழர்கள் பற்றி ஒரு ஊடுருவிய பார்வை உங்கள் உடையது.
    Sumi, புலம் பெயர்ந்த தமிழினம் எதையும் இழக்கவில்லை. இழந்தது புலத்தில் உள்ள அப்பாவிகள். புலத்தை சொல்லி புலம் பெயர்ந்தது சுருட்டியது .அதை மேலும் தொடர விரும்புகிறது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமலேயே சிங்களப் பெருண்பான்மை ஆட்சியமைக்க முடியுமென்பதை நிரூபிக்கவே, விகிதாசாரத் தேர்தல் முறையைக் கொண்டு வந்தார். அது பல ஜனாதிபதித் தேர்தல்களிலும் தற்போதைய பாராளுமன்றத் தேர்தலிலும் இலகுவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்ப்பகுதிகளில் பெருண்பான்மையான மக்கள் தேர்தலைப் புறக்கணித்தமைக்கு காரணம், தமிழ்க்கட்சிகளிலுள்ள நம்பிக்கையின்மை மாத்திரமல்ல, மகிந்த அரசு மீது அவர்களுக்குள்ள நம்பிக்கையின்மையும் ஒரு காரணம் என்பதை நாம் புறந்தள்ளிவிட முடியாது. வாக்களித்த தமிழ் மக்களும் ஆயுதக் குழுக்களிலிருந்து அரசியல் செய்ய வந்தவர்களையோ மற்றும் தமிழீழம், தனிநாடு கோரிக்கை வைத்தவர்களையோ ஏற்க விரும்பவில்லை என்பதைத் தெளிவாகவே கூறியுள்ளனர். விதிவிலக்காக டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் தனிநபராக யாழ் மாவட்ட மக்களுக்குச் செய்த சேவைகளுக்காக தமிழரசுக் கட்சிக்கு அடுத்தபடியாக வர முடிந்துள்ளது. கஜேந்திரன் மற்றும் பத்மினி போன்றவர்கள் இம்முறை மண்ணைக் கவ்வியுள்ளமை 2004 இல் பெருவாரியான கள்ளவோட்டுகளால் வெற்றி பெற்றதை கட்டியம் கூறி நிற்கின்றது. திடீரென ஞானோதயம் வந்தவர் போல் தமிழீழம் பற்றி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கையிலெடுத்ததை, மக்கள் இரசிகக்கவில்லையென்பதை அவரையும் ஓரம் கட்டிப் புரிய வைத்துள்ளனர். மொத்தத்தில் எனி தமிழ்ப் பகுதிகளில் எவரும் உசுப்பேற்றிவிடும் அரசியல் செய்து வெற்றி பெற முடியாதென்பதை தெளிவாகவே தெரிவித்துள்ளனர். அதே போல் வெளிநாட்டில் “புலன்” பெயர்ந்து போனோரின் அறிக்கைகளோ, நடவடிக்கைகளோ தாயகத் தமிழர்கள் ஏற்றுக் கொளள்ளப் போவதில்லையென்பதையும் பொட்டிலடித்தது போல் புரிய வைத்துள்ளனர்.

    எனி மகிந்த அரசு கட்டுரையாளர் சொன்னது போல் மூன்றில் இரண்டு பெருண்பான்மையைப் பெறும் முயற்சியில் இறங்கும். பெரும்பாலும் மிகக் குறைவான எண்ணிக்கையே தேவைப்படுவதால் ஏனைய கட்சிகளின் எம்பிக்களை விலைக்கு வாங்கும் முயற்சியையே செய்ய முனையும்.
    அப்படிப் பெறப் போகின்ற பெருண்பான்மையை வைத்து மகிந்த அரசு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றதென்பதே இன்று பலரின் முக்கிய கேள்வியாகத் தொக்கி நிற்கின்றது. முக்கியமாக தாயகத் தமிழ் மக்களின் நம்பிக்கை மகிந்த அரசின் மீது படிப்படியாக குறைந்து வருகின்றது. புலிகள் தோற்கடிக்கப்பட்டபின் மகிந்த 13வது சரத்தை மட்டுமல்ல, அதற்கு மேலேயும் சென்று தமிழ் மக்களுக்கான தீர்வொன்றை வைக்கப் போவதாக அறிவித்தார். பின்பு ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே அறிவித்து அதில் வெற்றி பெற்றதும் தமிழரின் தீர்வுத் திட்டத்தை அறிவிப்பதாக அறிவித்தார். ஜனாதிபதித் தேர்தலிலும் அமோக வெற்றி கிடைத்ததும், பாராளுமன்றத் தேர்தலையும் அறிவித்தார். அதன் பின்பு 13வது சரத்தை அடிப்படையாக வைத்து தமிழருக்கு தீர்வு வைக்க முடியாது. அதற்காக தான் ஒரு புதிய திட்டத்தை வைத்திருப்பதாக அறிவித்தார். இறுதியாக நாடாளுமன்றத் தேர்தலின் முன்பாக தமிழருக்கு தேவை ஆரசியல் தீர்வல்ல, இருக்க இடமும் வாழ்வாதாரமுமே என்று மிகவும் சுரத்துக் குறைந்து போன கருத்தையும் அருள் மொழிந்தார். இதன் மூலம் மகிந்தவின் மூன்றில் இரண்டு பெருண்பான்மை நோக்கம் தமிழருக்கான தீர்வுக்கானதல்ல என்பதும் புரிகின்றது.

    முன்பு ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஆறில் ஐந்து பெருண்பான்மையோடு 1977 இல் ஆட்சியமைத்த போது,கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்பபடுத்தாது விட்டதால்த் தான் நாடு இந்த நிலைமைக்கு வந்ததென்பதை மகிந்த அறியாதவரல்ல. அதே தவறைப் போலவே தனக்குக் கிடைத்த சந்தர்ப்த்தையும் பாழடிக்கப் போகின்றாரா அல்லது பயங்கரவாதத்தை ஒழித்து சாதனை படைத்தது போல், நாட்டில் புரையோடிவிட்ட இனப்பிரைச்சினையையும் தீர்த்து எதிர்கால சரித்திரத்தில் இடம் பிடிப்பாரா?? இவற்றிற்கான விடை என்னவென்பதைத் தீர்மானிப்பது எனி மகிந்தவின் கைகளிலேயே……….

    Reply
  • thurai
    thurai

    சிங்கள அரசும், சிங்கள மக்கழும் சர்வதேசமும் ஈழத்தில் வாழும் தமிழர் மேல் இரக்கப்படுமளவிற்கு புலம் பெயர்தமிழர்கள் நடந்து கொள்வதே தற்போது தேவையானது. இதனைக் கருத்திற் கொள்ளாது மேற்கொள்ளப்படும் அனைத்து செயற்பாடுகழும் தமிழரின் அழிவில் வாழ்வோரின் செயல்களேயாகும்.

    துரை

    Reply
  • Aras
    Aras

    தனக்குக் கிடைத்த சந்தர்ப்த்தையும் பாழடிக்கப் போகின்றாரா அல்லது பயங்கரவாதத்தை ஒழித்து சாதனை படைத்தது போல், நாட்டில் புரையோடிவிட்ட இனப்பிரைச்சினையையும் தீர்த்து எதிர்கால சரித்திரத்தில் இடம் பிடிப்பாரா?? ”

    சுருதி மாற்றி பாடுவதாக தெரிகிறதே. இதுவரை உங்கள் பின்னூட்டங்களை வாசித்த ஞாபகப்படி நீங்கள் மகிந்தவின் அல்லது அவரின் அரசு மீது மிகுந்த நம்பிக்கையுடையவராக ஆதரவாளராகவே தென்பட்டீர்கள். தமிழரும் சிங்களவரும்சேர்ந்து வாழ முடியும் என்ற கருத்துப்படும்படியும் எழுதி வந்தீர்கள். இப்போது இனப்பிரச்சனை ,தீர்வு என சொல்கிறீர்களே?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…சிங்கள அரசும், சிங்கள மக்கழும் சர்வதேசமும் ஈழத்தில் வாழும் தமிழர் மேல் இரக்கப்படுமளவிற்கு புலம் பெயர்தமிழர்கள் நடந்து கொள்வதே தற்போது தேவையானது…..//thurai

    சொந்தச்சகோதரர்கள், சிறுபான்மையே இல்லை….இவ்வாறு இன்னோரன்ன ‘கதைகள்’ சொன்னவர்களை வெளிநாட்டில் உள்ளவன் சொல்லி இரக்கப்பட வைக்க வேண்டி உள்ளது.
    உங்கள் குடும்ப அங்கத்தினரை உதைப்பதை நிறுத்தும் படி பக்கத்துவீட்டுக்காரன் கெஞ்சவேண்டுமா உங்கள் வீட்டில்?
    நல்லதோர் குடும்பம்!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // சிங்கள அரசும், சிங்கள மக்கழும் சர்வதேசமும் ஈழத்தில் வாழும் தமிழர் மேல் இரக்கப்படுமளவிற்கு புலம் பெயர்தமிழர்கள் நடந்து கொள்வதே தற்போது தேவையானது. – thurai //

    நல்ல பல கருத்துகளைத் தரும் தங்களிடமிருந்து இப்படியொரு கருத்தை எதிர்பார்க்கவில்லை. தமிழனைப் பார்த்து மற்றவர்கள் இரக்கப்படுமளவிற்கு, தமிழர்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் ஆகிவிடவில்லை. இரக்க மனப்பான்மை ஒரு இனத்தின் அடிப்படையுரிமைகளைப் பெற்றுத் தராது, மாறாக ஏதோ பிழைத்துக்கொள் என்று எதையாவது பிச்சை போடவே முன்வரும். புலம் பெயர் தமிழர்கள் தமது பிழைப்புகளுக்காக வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும், நாடு கடந்த தமிழீழத்தையும் கையிலெடுப்பதையும், தாயகத் தமிழருக்கு புத்தி சொல்வதையும், அறிக்கைகள் விடுவதையும் விட்டுவிட்டு தாம் வாழும் நாடுகளின் அரசுகளின் மூலம் முறையான ஒரு அழுத்தத்தை மகிந்த அரசு மீது கொடுப்பதற்கான தார்மீக வேலைககளைச் செய்ய முனையலாம். அது தான் தற்போதைய காலத்தின் தேவை. மாறாக வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும், நாடுகடந்த தமிழீழ அரசையும் வைத்துத் தான் தமது பிழைப்பை நடத்துவோமென்று வரிந்து கட்டிக் கொண்டு நின்றால், அதுவே மகிந்த அரசுக்கு தனது எணணங்கள் போல் நடப்பதற்கு இலகுவாகவும் வழிசமைக்கும். வெளிநாடுகளும் எமது பிரைச்சினைகளில் வழமைபோல் கண்ணை மூடி மெளனம் சாதிக்கும். மற்றும்படி வெளிநாட்டு அரசியல்வாதிகள் தமது நாடுகளில் தேர்தல் காலங்களில் மட்டும் தமிழரின் வாக்குகளுக்காக சிறிது கொட்டாவி விடுவதை எமக்கான ஆதரவாக நாம் எண்ணிவிடக் கூடாது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //சுருதி மாற்றி பாடுவதாக தெரிகிறதே. இதுவரை உங்கள் பின்னூட்டங்களை வாசித்த ஞாபகப்படி நீங்கள் மகிந்தவின் அல்லது அவரின் அரசு மீது மிகுந்த நம்பிக்கையுடையவராக ஆதரவாளராகவே தென்பட்டீர்கள்.- Aras //

    சுருதி மாற்றிப் பாட வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. தவறுகளை யார் செய்தாலும் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் ஒவ்வொருவருக்கும் உண்டு. அந்த வகையில் மகிந்தவின் சில ஆரம்ப கால நடவடிக்கைகள் நம்பிக்கையளிப்பதாக இருந்ததால் ஆதரவான கருத்துகளையும் தப்பான சில நடவடிக்கைகளை கண்டித்தும் கருத்து எழுதியிருந்தேன். தற்போது மகிந்தவின் தமிழர்களுக்கு ஒரு தீர்வு ஏற்படுத்துவதில் வரும் கருத்துகள் ஒவ்வொரு முறையும் சுருதி குறைந்தே வந்துள்ளது. தமிழர்களுக்கு 13 வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் மட்டுமல்ல அதற்கு மேலாகவும் சென்று என்று ஆரம்பித்த கருத்து, தற்போது தமிழருக்கு அரசியல் தீர்வு தேவையில்லை என்று வந்து நிற்கின்றது. மகிந்தவின் கருத்துகளில் சுருதி குறையும் போது அதனை வரவேற்று எப்படிக் கருத்தெழுத முடியும். தற்போதும் நான் மகிந்த அரசில் முழுவதுமாக நம்பிக்கையிழக்கவில்லை. தனக்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சகல இன மக்களும் நம்பிக்கையுடனும் சம உரிமையோடும் வாழும் நிலையை மகிந்த இலங்கையில் ஏற்படுத்த வேண்டுமென்றே நான் விரும்புகின்றேன்.

    Reply
  • BC
    BC

    துரை கூறியது புலம் பெயர்ந்தவர்கள் இலங்கை அரசை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீண்டி அதனால் இலங்கை தமிழர்களுக்கு பாதிப்பு வந்தால் அதை வைத்து தாங்கள் லாபம் அடையும் முயற்சியை தான் என்று நினைக்கிறேன்.
    Aras ன் அவதானிப்பு சரியானது.

    Reply
  • Ajith
    Ajith

    // சிங்கள அரசும், சிங்கள மக்கழும் சர்வதேசமும் ஈழத்தில் வாழும் தமிழர் மேல் இரக்கப்படுமளவிற்கு புலம் பெயர்தமிழர்கள் நடந்து கொள்வதே தற்போது தேவையானது. – thurai //

    For Sinhala Government and Sinhala people, voting to TNA is a crime. During the election campagin Gotapaya Rajapakse declared that TNA should be banned and it is accepted by the governments. Tamils are unwanted by the Sinhala. Todays news confirms that Tamils should beg from Rajapakse to get their water and food.
    செட்க்குள முகாம் மக்கள் மீது படையினர் கண்மூடிதனமான தாக்குதல்

    வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள இராமநாதன் நலன்புலி முகாமில் மக்களுக்கான குடிநீர் விநியோகம் முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் இதுதொடர்பில் அங்கு அமைக்கப்பட்டுள்ள அரச செயலகத்திற்கு மக்கள் சென்று விசாரித்தபோதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
    இவ்வாறு சென்ற மக்கள் மீது சிறீலங்கா படைஅதிகாரி nஐயவீர என்பவரே தாக்குதல் நிகழ்த்தியதாகவும் நீங்கள் தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்ததால் அவர்களிடமே சென்று தண்ணீரை கேளுகள் என்று கூறி விரட்டி அடித்ததாக தெரியவருகிறது.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….தாம் வாழும் நாடுகளின் அரசுகளின் மூலம் முறையான ஒரு அழுத்தத்தை மகிந்த அரசு மீது கொடுப்பதற்கான தார்மீக வேலைககளைச் செய்ய முனையலாம்……///

    ’புலன்’ பெயர்ந்தவர்கள் கொடுக்கும் ‘அழுத்தங்கள்’ எல்லாம் புண்ணாக்கு வேலை. ஏகாதிபத்திய உள்நுளைவுகளுக்கு விளக்குப்பிடிக்கும் வேலை எனச் சொன்னார்கள். அவை இப்போது ‘தார்மீகமாக’ மாறிவிட்டன ! ஒருவேளை இங்கிலாந்தில் அசைலம் அடிச்சு இருந்தவர் இப்போ யாழ்ப்பாண எம்.பி ஆக வாய்ப்பு ஏற்பட்டதாலோ?

    Reply
  • thurai
    thurai

    பார்தீபனின் கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்கின்றேன். புலிகழும் புலத்துத் தமிழர்கழும் இதுவரை செய்த செயல்கழும், நடத்தைகழுமே ஈழத்தமிழரை அரசியல் அநாதைகளாக்கியது. சிங்கள அரசிற்கு உலகின் ஆதரவை பெற்றுக்கொடுத்தவை புலத்துத்தமிழர்களின் செயல்களேயாகும். இலங்கையில் புலிகள் அழிக்கப்பட்டுள்ளனர். ஆனால் புலிக்குணம் இலங்கையிலும் புலங்களிலும் இன்னமும் வாழ்கின்றது.

    இவர்களின் பேச்சுக்கழும், செயல்கழுமே தமிழரிற்கு முதலெதிரிகள். இதனால் நல்லெண்ணம் கொண்டோர் பிரச்சினைகளிலிருந்து ஒதுங்கியே செல்கின்றனர். இந்த நிலமை மாற யாவரும் ஒன்றுபட்டு செயல்படவேண்டும்.

    துரை

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // ’புலன்’ பெயர்ந்தவர்கள் கொடுக்கும் ‘அழுத்தங்கள்’ எல்லாம் புண்ணாக்கு வேலை. ஏகாதிபத்திய உள்நுளைவுகளுக்கு விளக்குப்பிடிக்கும் வேலை எனச் சொன்னார்கள். அவை இப்போது ‘தார்மீகமாக’ மாறிவிட்டன ! ஒருவேளை இங்கிலாந்தில் அசைலம் அடிச்சு இருந்தவர் இப்போ யாழ்ப்பாண எம்.பி ஆக வாய்ப்பு ஏற்பட்டதாலோ? //

    நான் சொல்லாதவையைச் சொன்னதாகச் சொல்லி, புலன் பெயர்ந்ததுகள் செய்த அர்த்தமற்ற ஆர்ப்பாட்டங்களையும் பொதுமக்களுக்குக் கொடுத்த இடையூறுகளையும் நியாயப்படுத்த முனைய வேண்டாம். உசுப்பேற்றிவிடும் அரசில் ஒன்றும் அந்த மக்களிடம் எனியும் எடுபடாதென்பதைப் புரியாமல் கதைக்க வேண்டாம்.

    // பார்தீபனின் கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.- thurai //
    நன்றி உண்மைகளை உள்வாங்கி பகிர்தமைக்கு. ஆனால் இதனைக் கூட சரியாகப் புரியாமல் இன்னும் சிலர் இங்கு உள்ளனர்.

    Reply
  • NANTHA
    NANTHA

    இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டாலே வெளிநாடுகளில் “உண்டியல்” நிறையும் என்று பலர் அலைவது தெரிகிறது.

    புலிகளின் பிரச்சார இணையத் தளங்களிலும் தொலைக்காட்சியிலும் மாத்திரம் செட்டி குளம் முகாமில் இராணுவத்தினர் தாக்கினர், தண்ணீரை நிறுத்தினர், என்றெல்லாம் படுபொய் ஒன்றை அவிழ்த்து விட்டுள்ளனர். முகாம்களுக்கு தொலைபேசி வசதிகள் உண்டென்பதும் அங்குள்ளவர்கள் உறவினர்களோடு பேச முடியும் என்ற விபரத்தையோ முகாம்களின் தொலைபேசி எண்களையோ இதுவரையில் இந்த “அசகாய சூரர்கள்” தங்கள் செய்திகளில் குறிப்பிட்டது கிடையாது. அந்த விபரங்களைப் பிரசுரித்தால் குட்டு உடைந்து கூட்டம் கலைந்து விடும் என்ற பயமும் காரணமாக இருக்கலாம்!

    அமோக வெற்றி பெற்றுள்ள மஹிந்த கூட்டணிக்கு கட்சி தாவ பலர் தயாராகியுள்ளனர். இதுவரையில் தேசம் நெற்றில் டக்லஸ் மீது வசைப் புராணம் பாடியவர்கள் கண்டிப்பாக அங்குள்ள மக்களின் நாடித்துடிப்பை அறியாதவர் என்பதும் தற்போது தெளிவாகியுள்ளது.

    பொய்களையும் மாயைகளையும் உற்பத்தி செய்து அரசியல் செய்த தமிழ் ஈழக் கோஷ்டிகள் இனி நாட்டுப் பிரிவினை இல்லை என்று சொல்லிய சம்பந்தன் பின்னால் சென்று “ஜனநாயக நீரோட்டத்தில்” கலந்து முத்தியடைய முயற்சிப்பது புத்திசாலித்தனமாக இருக்கும்.

    Reply
  • thurai
    thurai

    இலங்கையில் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர். தேர்தலும் நடந்து முடிந்து விட்டது. இனிமேல் எங்களிடம் எழும் எண்ணங்கழும், எழுதும் கருத்துக்கழும் வாசிப்பவர்களிடம் நல்லெண்ணங்களை வளர்ப்பவனாக அமையவேண்டுமே தவிர பகைமையுணர்வை வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    புலியின் ஆதரவாளர்களாக இருந்தவர்கழும், செயற்பாட்டாளர்கழும் இன்று என்ன நிலமையில் வாழ்கின்றார்கள் என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும். இவர்களில் யார் கண்மூடிக் கொண்டு செயற்பட்டார்கள், யார் சுயநல எண்ணங்கழுடன் செயற்பட்டார்கள், செயற்படுகின்றார்கள் என்பதை ஒவ்வொருவரும் தாம் வசிக்கும் இடங்களில் கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும்.

    இதன் மூலமே நல்லெண்ணமும், பரந்த அறிவுமுள்ளவர்கள் தமிழர் மத்தியில் தோன்றுவதற்கு எங்களால் உதவ முடியும்.

    துரை

    Reply
  • PALLI
    PALLI

    //பார்த்திபன் சுருதி மாற்றி பாடுவதாக தெரிகிறதே. //
    அப்படியா ஆக பார்த்திபன் கருத்துக்களை தாங்கள் தொடர்ந்து படிக்கிறியள்; இப்போது சொல்லுங்கள் பார்த்திபன் புலி எதிர்பாளர் மட்டுமா? அல்லது தமிழர் நலன் கருதி கருத்து எழுதுபவரா? ஒரே சுருதியில் பாட பார்த்திபன் பரபரபுக்கு எழுதவில்லை, தமிழர் நலன் கருத்தி எழுதுவதால் அதுவும் தேசத்தில் எழுதுவதால்(சுகந்திரமாய்) இலங்கை அரசியல் மாற்றத்துக்கு தகுந்தா போல் கருத்துக்களும் மாறதான் செய்யும், ஈழம் அல்லது புலம் பெயர்ந்த ஈழம் என்பது போல் பார்த்திபன் என்றும் பாட மாட்டார் என்பது அவரது கடந்த கால எழுத்துக்களில் தெரியவில்லையா?? அரசின் தவறான செயல்களை இடைதங்கல் முகாம் வரை சுட்டி காட்டியுள்ளார்; பல்லவியை மட்டும் கவனிக்காமல் சரணத்தையும் கவனியுங்கள்;

    Reply
  • PALLI
    PALLI

    //அமோக வெற்றி பெற்றுள்ள மஹிந்த கூட்டணிக்கு கட்சி தாவ பலர் தயாராகியுள்ளனர். //
    இது மறுக்க முடியாத உன்மைதான்; ஆனாலும் இதுவும் ஒரு தவறான செயல் என்பதை நாம் எழுத வேண்டும்; மகிந்தாவின் கட்ச்சியிலோ அல்லது ஆளும் கட்சியில் இருந்தால் மட்டுமே மக்களுக்கு ஏதாவது செய்யலாம் என்பது எப்படி நியாயமாகும்; சரியான ஒரு எதிர் கட்சிதான் ஒரு நாட்டின் ஆட்ச்சியை நிதானமாக கொண்டு செல்லும் என அண்ணா சொல்லுவாராம், ஆக வெற்றியின் பக்கம் சாய்வதை விட்டு மக்கள் பக்கம் உங்கள் கவனத்தி திருப்பி அடுத்த வெற்றியை தேடுங்கள்; வரும்காலம் உங்களை பாராட்டாவிட்டாலும் வசைபாடாமல் இருக்கும்;

    Reply
  • Ajith
    Ajith

    இலங்கையில் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர். தேர்தலும் நடந்து முடிந்து விட்டது. இனிமேல் எங்களிடம் எழும் எண்ணங்கழும், எழுதும் கருத்துக்கழும் வாசிப்பவர்களிடம் நல்லெண்ணங்களை வளர்ப்பவனாக அமையவேண்டுமே தவிர பகைமையுணர்வை வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    So , it is a clear understanding among a group that was against tamils. All these days you all your thoughts, actions are to create a wrong impression among readers. Unfortunately the readers understood your motives and actions were not your owns and it came from somewhere. What a cheats?

    What you mean by elections are over? Is it to say there will no elections in Sri Lanka. It is only a rule by dictator “King Mahinda7”? You worked tirelessly for Rajpakse and now it is over and duty is over.

    Reply
  • sathees
    sathees

    அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பொடியப்பு பியசேனா அவர்களை மனம்திறந்து வாழ்த்துகிறேன்

    Reply
  • pandiyan
    pandiyan

    வட கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஒரு முறை தங்கள் தமிழ் தேசியம் மீதான காதலை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் ஒரு போதும் மாவை சுரேஸ் சம்மந்தருக்காக வாக்குகளை அளிக்கவில்லை. அதே வேளை சிவாஜி கஜேந்திரன் போன்றோரின் தேசியத்தின் மீது நம்பிக்கையில்லாத படியால் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை.வட கிழக்கு மக்கள் தாம் தமது பிரதேசங்களில் அமைதியாக வாழ்வதற்கான ஒரு சில ஏற்பாடுகளை அரசுடன் செய்து கொள்ள தங்கள் சார்பாக பேச சம்மந்தர் தலைமை அணியையே தமது தலைமைத்துவமாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

    இங்கு எழுதும் நபர்களின் விருப்பப்படி தமிழ் மக்கள் அரசிற்கு தான் வாக்கு போட வேண்டும் எனவும் புலி ஆதரவாளர்கள் கஜேந்திரனுக்கு தான் வாக்கு போட வேண்டும் என கங்கணம் கட்டி வேலை செய்கிறார்கள். இவை இரண்டையுமே தமிழ் மக்கள் நிராகரித்து விட்டார்கள். ஜனநாயகவாதிகள் என சொல்லிக் கொள்ளும் புலி எதிர்ப்பு அரச ஆதரவாளர்களைப் பார்த்து அங்குள்ள தமிழ் மக்கள் மிகவும் வெறுப்படைந்துள்ளார்கள். ஏனெனில் புலிஆதரவு கோஸ்டி தாம் இங்கு சகல உரிமைகள் பாதுகாப்பு மற்றும் வசதிகளோடு இருந்து கொண்டு அங்குள்ள சிறுவர் சிறுமிகளை சண்டைக்கு அனுப்பி பலி கொடுத்து விட்டு அங்குள்ள மக்களின் நிலமையை புரியாமல் எழுதியும் பேசியும் வருகிறார்கள். இதன் மறுதலை அங்கு புலிகள் சொல்லுவது போல கடத்தல் கொலை கொள்ளை நடைபெறுகிறது தான் என்பதல்ல.

    போர் என்பது மிக கொடியது. போர் முடிந்துள்ளது. வரவேற்கிறோம். ஆனால் அந்த மக்கள் சொல்கிறார்கள் நாளையும் போர் வரலாம். எனவே எமக்கு அரசியல் அமைப்பின் பிரகாரம் சில ஏற்பாடுகளை செய்து தரும்படி கூறுகின்றனர். இதையே அவர்கள் வாக்களிப்பின் மூலம் கூறுகின்றனர்.

    அரசியல் அவதானிகள் தமிழ் மக்களின் உயிர் நாடியை பிடித்துப் பிடித்துப் பார்க்க தவறுகிறார்கள். உதாரணமாக எனது தத்துவ மேதையான நண்பனின் தாயாரை யாழ்ப்பாணத்திற்கு தொலை பேசியில் தொடர்பு கொள்ள நேர்ந்தது.பேச்சு வாக்கில் நீங்கள் யாருக்கு வாக்கு போடுகிறீர்கள் ? என கேட்க அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை போகவில்லை என பதிலளித்தார். போகாவிட்டாலும் யாருக்கு வாக்கு போடலாம் என எண்ணியிருந்தீர்கள் எனக் கேட்க அவர் சம்மந்தரின் கட்சிக்குத்தான் என பதிலளித்தார். சம்மந்தரோ திருமலையில். ஆனால் அவர்கள் உணர்வு அவ்வாறே இருக்கிறது. நீங்களோ கல்வி மான்களிடமும் அரசியல் அபிலாசை உள்ளவர்களிடமும் பேசி விட்டு சாதாரண மக்களின் நாடித் துடிப்பை காண மறுக்கிறீர்கள்.

    13+போனஸ் 2 ஆக மொத்தம் 15 எம்பிக்களை தமிழ் அரசுக் கடசி பெற்றுள்ளது. நன்றாக வேலை செய்திருந்தால் வன்னியில்-2 யாழில் -2 மட்டக்களப்பில் 1என ஆசனங்களைப் பெற்றிருக்க முடியும். எனவே அரசு தமிழ் மக்களின் பிரதி நிதிகளாக இவர்களுடன் பேசி தமிழ் மக்களின் நல்வாழ்விற்கான வழியை ஏற்படுத்த வேண்டும்.

    இறுதியாக எனக்கொரு சந்தேகம் உள்ளது. தமிழ் தேசியம் என்பது புலிக்கும் ரிஎன்ஏக்கும் பொன்முட்டையிடும் வாத்தாகும். எனவே இனப்பிரச்சனை தீர்க்கப்படாமல் விடப்பட்டால் இவர்கள் பிழைப்பை தொடர்ந்து நடத்தும் வாய்ப்புண்டு. பாவம் தமிழ் மக்கள் அவர்களுக்கு வேறு ஒரு தெரிவு இல்லை என்பதே யதார்த்தமான உண்மையாகும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    நன்றி பல்லி தங்கள் தெளிவான கருத்திற்கு. கருத்துகள் என்றால் எவருக்காவது ஜால்ரா அடித்து எழுதுவதையே சிலர் விரும்புகின்றார்கள். அது எனக்கு ஏற்புடையதல்ல. மகிந்த அரசு நல்லது செய்த போது பாராட்டியுமுள்ளேன், தவறுகள் செய்த போது கண்டித்துமுள்ளேன். எனது நோக்கமே நல்லது நடக்க வேண்டுமென்பதே. அதற்கு மகிந்த தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாதென்பதிலேயே எனது ஆதங்கமும் உள்ளது. எனது நிலைபாட்டை புரிய முடிந்தவர்கள் புரிந்து கொண்டாலே போதும்.

    Reply
  • thurai
    thurai

    தமிழர்களிற்கு எதிராக செயற்பட்டவர்கள் யார்? புலிகளா? அல்லது புலிகளின் தவறுகளை இணயத்தளத்தின் மூலம் வெளிக் கொண்டுவந்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்களா? தமிழ் மக்களை நிம்மதியாக இலங்கையில் வாழவைத்த இலங்கை அரசாங்கம் தமிழர்களிற்கு எதிரானவர்களா? கொடூரப்புலிகளை அழிக்க கொடுரமான ஓர் ஆயுதமாகவே ராஜபக்சாவின் அரசாங்கம் செயற்பட்டது. இதனால் தமிழர்களில் அநியாய உயிரிளப்புகழும் ஏற்பட்டதென்பதுண்மையே. புலிகள் செய்யும் தாக்குதலாலும் போராட்டத்தாலும் தமிழர் அழிகின்றார்களென குற்ரம் சொன்ன்வர்களிற்கு புலிகள் கொடுத்தது மரணதண்டனை. இருந்தும் அப்போதும் இப்போதும் பிரபாகரன் கடவுள்தான் சிலரிற்கு.

    ராஜபக்சவின் காலம் மாறும், தலைமை மாறும் இலங்கையில் தமிழர் நிலமையும் மாறும். ஆனால் ஈழத் தமிழர்களின் சர்வாதிகாரியின் 30 வருட ஆதிக்கம் தமிழர் மீது இலங்கையில் இல்லையென்பதே சிலரது மனக்கவலை. இதற்கு எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் புலத்தில் வாழும் புலிகளின் ஆதரவாளர்கழும், புலம்பெயர்நாடுகளின் தளர்வான சட்டங்கழும் புலிகளின் ஏமாற்றுக்காரர்களை தொடர்ந்தும் வாழவைக்கும்.

    துரை

    Reply
  • thurai
    thurai

    புலியுடன் இருந்தவர்களெல்லாம் தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டவர்கழுமில்லை. புலியை எதிர்த்தவர்களெல்லாம் துரோகிகழுமில்லை.

    புலியென்றால் தமிழர், அரசாங்கத்துடன் சேர்ந்தால் துரோகி. இதுவே புலிகளின் தந்திரம். புலி ஆதரவாளர்களை மயக்கிய மந்திரம்.

    துரை

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //புலியென்றால் தமிழர், அரசாங்கத்துடன் சேர்ந்தால் துரோகி. இதுவே புலிகளின் தந்திரம். புலி ஆதரவாளர்களை மயக்கிய மந்திரம்.- துரை //

    முதன்முதலில் சந்தர்ப்பவாதத்திற்காக பிரேமதாசா அரசுடன் கைகோர்த்ததே புலிகள் தான். ஆனால் அது மட்டும் இராசதந்திரம். மற்றவர்கள் செய்தால் மட்டுமே அது துரோகம்.

    Reply
  • மாயா
    மாயா

    // புலத்தில் வாழும் புலிகளின் ஆதரவாளர்கழும், புலம்பெயர்நாடுகளின் தளர்வான சட்டங்கழும் புலிகளின் ஏமாற்றுக்காரர்களை தொடர்ந்தும் வாழவைக்கும்.- துரை //

    புலத்தில் புலிகளோடு இருந்த எத்தனையோ பேர் , தாயகம் போய் நல்ல கதைகளை சொல்கிறார்கள். உறவுகளையும் , பயப்படாமல் வாங்கோ என்கிறார்கள். உறவுகளும் ஏறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆனால் , இதையும் தடுக்க , இந்தியாவிலிருந்து சிலரை, புலிகள் இலவச டூர் அழைத்துப் போய் , புலிளுக்கு ஆதரவானவர்கள் வீட்டில் வைத்து , பொய்களை அவிழ்கிறார்கள். அதை அவர்கள் சென்னை வந்ததும் செய் நன்றிக் கடனுக்காக , மாவீரர் துயிலும் இல்லங்களில் ஆடுகள் மேய்கின்றன என எழுதுகின்றனர்.

    மாவீரர் இல்ங்களை ஆமிக்காரர் அழித்து விட்டார்கள் என்பதை விடுத்து ஆடுகள் மேய்கின்றன என்பதை படித்து, புலத்து புலி மந்தைக் கூட்டம் மகிழ வேண்டும். இதிலிருந்து என்ன தெரிகிறது? இறந்தோரின் உறவுகளே, சவக்காலைப் பக்கம் போவதில்லை என்பதுதான். அதாவது இப்போது சாவுகள் இல்லை என்பதுதான். சந்தோசப்படுங்கள். சாவுகளை காட்டித்தானே , வயிறு வளர்த்தனர். அதற்காகத்தானே அங்கலாய்க்கின்றனர்? இனி அது நடவாது. புலத்து பொது சனம் மாறிக் கொண்டேயிருக்கிறது. விரைவில் புலத்து ,நடத் தெருவில் பிச்சை எடுக்க வேண்டி வரும். புலத்து புலிகள் எங்கே உழைத்து வாழ்ந்தார்கள்?

    Reply
  • Ajith
    Ajith

    It is true that LTTE worked with Premadasa to get rid of India that was the common enemy. Rajapakse was against Indian invasion at that time. LTTE never surrendered tamils demand for independence like Douglas or Karuna did for ministerial posts. Today Karuna and Douglas have no freedom. They just get orders from Rajapakse.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    Ajith,
    புலிகள் சந்திரிகா அரசிடமும், மகிந்த அரசிடமும் வடக்கு கிழக்கு நிர்வாகத்தை ஏற்படுத்தி, நிர்வாகத்தை தங்களுக்குத் தரும்படி கேட்டு அடம்பிடித்ததை மறந்து விட்டு கதையளக்கின்றீர்கள். புலிகள் பிரேமதாசா அரசுடன் கைகோர்த்தது இந்திய இராணுவ வெளியேற்றத்திற்கு மட்டுமா?? மனச்சாட்சியோடு சிந்தியுங்கள். எத்தனை அரசியல் கொலைகளைச் செய்தார்கள். தமது அலுவல்கள் முடிய இறுதியில் பிரேமதாசாவையும் போட்டுத் தள்ளினார்கள். இது சந்தர்ப்பவாதமில்லாமல் வேறு என்ன??

    Reply
  • மாயா
    மாயா

    //Ajith on April 11, 2010 8:29 pm It is true that LTTE worked with Premadasa to get rid of India that was the common enemy. Rajapakse was against Indian invasion at that time. LTTE never surrendered tamils demand for independence like Douglas or Karuna did for ministerial posts. Today Karuna and Douglas have no freedom. They just get orders from Rajapakse.//

    இதையே சற்று மாற்றி யோசிங்க அஜித். கருணா, டக்ளஸ் இவர்கள் மட்டுமல்ல ஏகப்பட்ட முன்னைய போராளிகளுக்கும் , புலிகளோடு மோதல் வந்த போது, இலங்கை அரசின் உதவி தேவைப்பட்டது. இது மாதிரி உதவியைத்தான் பிரபாகரன் குழு , பிரேமாதாஸவின் உதவியாகப் பெற்றது? கருணா , டக்ளஸுக்கு இன்று சுதந்திரம் இல்லாமல் இருக்கலாம். உயிர் பயம் இல்லையே? புலி பிரபாவோடு இருந்தால் என்ன, இவர்களுக்கு உயிர் பாதுகாப்பு உண்டா?

    மாத்தையா , கிட்டு, தமிழ்ச்செல்வன் போன்ற எத்தனை பேரின் சாவுக்கு , பிரபா காரணமானார். வாழ வேண்டிய எத்தனை உயிர்கள் செத்து விட்டன. பிரபாவின் மோட்டு ஓடருக்கு சாவதை விட, மகிந்தவின் ஓடடரில் வாழ்வது மேல்.

    புலிகள் செய்தால் ராஜதந்திரம். அடுத்தவன் செய்தால் ராஜதுரோகம். நல்ல கதை அஜித்?

    Reply
  • BC
    BC

    //மாயா- கருணா , டக்ளஸுக்கு இன்று சுதந்திரம் இல்லாமல் இருக்கலாம்.//

    அன்று புலியின் ஆட்சியில் மக்களுக்கும் சுதந்திரம் இருந்து. தான் பெற்ற பிள்ளையை கூட புலி பலவந்தமாக கடத்தி கொண்டு சென்று பலி கொடுக்கும் என்பதற்காக தன்னோடு வைத்திருக்க முடியாத நிலை.

    Reply
  • Ajith
    Ajith

    புலிகள் சந்திரிகா அரசிடமும், மகிந்த அரசிடமும் வடக்கு கிழக்கு நிர்வாகத்தை ஏற்படுத்தி, நிர்வாகத்தை தங்களுக்குத் தரும்படி கேட்டு அடம்பிடித்ததை மறந்து விட்டு கதையளக்கின்றீர்கள். புலிகள் பிரேமதாசா அரசுடன் கைகோர்த்தது இந்திய இராணுவ வெளியேற்றத்திற்கு மட்டுமா?? மனச்சாட்சியோடு சிந்தியுங்கள். எத்தனை அரசியல் கொலைகளைச் செய்தார்கள். தமது அலுவல்கள் முடிய இறுதியில் பிரேமதாசாவையும் போட்டுத் தள்ளினார்கள். இது சந்தர்ப்பவாதமில்லாமல் வேறு என்ன??

    What is wrong with demanding the administration of North-East. That is the only way we can have our own administration to protect our freedom.
    Did Tigers abduct and kill people to satisfy Sinhala leadershp and Sinhala military like Douglas and Karunna doing? Poltical killing cannot be justified nut a so called democratic government openly involved with political killing is absolutely unjustifiable. Do you think Rajapakse’s killing of political leaders and journalists are justifiable.

    Reply