புத்தாண்டுப் பண்டிகையை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் வேலைக்கு திரும்புவதற்காக நேற்று (15) முதல் விசேட ரயில் மற்றும் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனையொட்டி 26 மேலதிக ரயில்களும் 400 இ. போ. ச. பஸ்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு கூடுதலான தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
வழமையாக சேவையில் ஈடுபடுத்தப்படும் ரயில்களுக்கு மேலதிகமாக பண்டாரவளை நுவரெலியா, ரம்புக்கன, மாகோ, காலி ஆகிய இடங்களில் இருந்து கொழும்புக்கு மேலதிக ரயில்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியது.
இதேவேளை மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படும் இ. போ. ச. பஸ்கள் குறித்த டிப்போக்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் 19ம் திகதி வரை அவை சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் இ. போ. ச. கூறியது.