‘தரமான பொதுக் கல்விக்கு நிதி ஒதுக்குங்கள்; அது அனைவரினதும் உரிமை’ என்னும் கோரிக்கையை முன்வைத்து இவ்வருடத்துக்கான சர்வதேச கல்விப் பிரசார வாரம் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இவ்வாரத்தின் போது மலையக கல்வி வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு அவசியம் என்ற விடயம் குறித்து பல்வேறு தரப்பினர் மத்தியிலும் வலியுறுத்தப்படவுள்ளதாக பிரிடோ நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஜோக்கிம் தெரிவித்தார் .