சென்னையில் நடைபெறவுள்ள ‘Role in Ethnic Reconciliation and Economic Reconstruction – இன மீளுறவை ஏற்படுத்துவதற்கான பாத்திரமும் பொருளாதார மீள் கட்டுமானமும்’ என்ற கருத்தரங்கில் ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க முயற்சி எடுத்துள்ள வி மனோகரி கீழுள்ள கேள்விகள் தொடர்பான பதிலை புலம்பெயர்ந்தவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றார். இந்த ஆய்வுகள் தொகுக்கப்பட்டு நூலாக்கப்பட்டு மத்திய அரசின் முன்வைக்கப்படும் என்றும் வி மனோகரி அனுப்பி வைத்துள்ள மின் அஞ்சலில் குறிப்பிட்டு உள்ளார். இக்கருத்தரங்கிற்கு தேசம்நெற் இணையத்திற்கு எவ்வித தொடர்பும் கிடையாத. ஆயினும் கேட்கப்பட்ட கேள்விகள் தொடர்பாக தேசம்நெற் வாசகர்களின் கருத்துக்களை பலரும் அறிவதில் பாதகம் இல்லை. ஆதனால் கீழுள்ள கேள்விகள் தொடர்பாக உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யவும்.
Q.1. How do you see the Sri Lankan Diaspora after the LTTE’s defeat?
கே1: எல்ரிரியின் தோல்விக்குப் பின் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
Q.2.What are the important political developments among the Sri Lankan Tamil diaspora after May 2009?
கே2: மே 2009க்குப் பின் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் உள்ள முக்கிய அரசியல் நடவடிக்கை என்ன?
Q.3. Non-LTTE Tamil diaspora- any change of political strategy and how are they influencing the Sri Lanka government and the West? Sri Lankan Muslim diaspora parties?
கே3: – புலிகள் அல்லாத புலம்பெயர்ந்த தமிழர்கள் – இலங்கை அரசு மீதும் மேற்குலகு மீதும் செல்வாக்கு செலுத்தும் வகையில் அரசியல் செயற்திட்டம் அமைந்துள்ளதா? புலம்பெயர்ந்த இலங்கை முஸ்லீம் கட்சிகளின் நிலையென்ன?
Q.4. What do you think the government should do to engage diaspora? What are the hindrances faced by diaspora in playing a political or economic role in Sri Lanka?
கே4: புலம்பெயர்ந்தவர்களுடன் தொடர்புகனை ஏற்படுத்த அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என நினைக்கின்றீர்கள்? புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையின் அரசியல் பொருளாதாரத்தில் ஈடுபடுவதில் எதிர்கொள்ளும் தடைகள் என்ன?
Q.5. How did Sinhalese diaspora respond and what activities did they undertake?கே5: புலம்பெயர்ந்த சிங்களவர்கள் எவ்வாறு பரதிபலிக்கின்றனர்? எவ்வாறான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர்?
Q.6. Were/Are there any attempt by the Sri Lankan High Commissions (SLHC) in the West to engage Tamil diaspora in ethnic reconciliation?
கே6: மேற்குலகில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுடன் இன மீள்உறவை ஏற்படுத்த ஏதாவது முயற்சிகளை எடுத்துள்ளதா?
Q.7. In your view, what should be the role of SLHC in engaging diaspora, to solve the conflict at home?
கே7: இலங்கையில் உள்ள இன முரண்பாட்டை தீர்ப்பதில் புலம்பெயர்ந்தவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதில் இலங்கைத் தூதரகங்களின் பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?
Q.8. What kind of involvement is there among the Tamil diaspora to economically develop the Tamil provinces in Sri Lanka? What initiatives did the diaspora take up?
கே8: இலங்கையில் உள்ள தமிழ் மாநிலங்களை பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்வதில் புலம்பெயர்ந்த தமிழர்கள் எவ்வாறு ஈடுபடுகின்றார்கள்? எவ்வாறான முன்முயற்சிகளை புலம்பெயர்ந்தவர்கள் எடுத்துள்ளனர்?
Q.9.What steps do you think the Sri Lankan government should take to solve the ethnic differences?
கே9: இன வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு எவ்வாறான படிகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?
Sen
Below is the proposal of the Tamil Solidarity in Britain
பின்வருவனவற்றின் அடிப்படையில் அணிதிரட்டலுக்கான கோரிக்கைகளை உருவாக்குவோம்.
1
உடனடியாக யுத்தத்தை நிறுத்து
இராணுவ அடக்குமுறையை உடனடியாக நிறுத்தித் தமிழ் மக்கள் வாழும் இடங்களில் இருந்து இராணுவத்தைத் திரும்பப்பெறு. மக்கள் கடத்தப்பட்டுக் காணாமற் போய்க் கொண்டிருப்பதை நிறுத்து.
2
தடுப்பு முகாம்களை மூடு.
தேர்வு செய்யப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் மூலம் மக்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைகளான உணவு, தங்கும் வசதி, மருத்துவத் தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்.
3
போர் வெறி பிடித்த இராஜபக்ச அரசுக்கு ஒரு சதமோ ஒரு துப்பாக்கி குண்டோ வழங்காதே.
இந்தியா, சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல், ஈரான், யப்பான், மற்றும் இதர நாடுகள் இலங்கை அரசுக்கு வர்த்தக, இராணுவ உதவிகள் வழங்குவதை உடனடியாக நிறுத்து. இந்நாடுகளின் இராணுவப் பங்களிப்புக்கு எதிராக அந்நாட்டுத் தொழிலாளர்கள் அணிதிரள்வதை ஆதரிப்போம்.
4
அனைவருக்குமான ஜனநாயக உரிமைகளை உத்தரவாதப்படுத்து.
பேச்சுரிமை,ஊடக உரிமை,சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களினதும் தொழிற்சங்க உரிமை, இனம் மதம் சாதி பால் வேறுபாடின்றி அனைவரது உரிமைகளையும் சமமாக மதிக்கும் கட்சிகள் சுதந்திரமாக இயங்க தேர்தலில் பங்குபற்றும் உரிமை, முதலான அனைத்து ஜனநாயக உரிமைகளையும் உத்தரவாதப்படுத்து.
5
ஒன்றுபட்ட தொழிற்சங்கங்களை உருவாக்குவதற்கான ஆதரவைத் திரட்டுவோம்.
கூட்டமைக்கும் அல்லது அணிதிரள்வதற்கான உரிமையை வழங்கு. கொலை மற்றும் காணாமற் போகின்றவர்கள் பற்றிக் கண்காணிக்கும் ‘மக்கள் கண்காணிப்பு குழு’ போன்ற அமைப்புகள் சுதந்திரமாக பணியாற்றும் உரிமையை வழங்கு.
6
சுயநிர்ணய உரிமையை உத்தரவாதப்படுத்து
(நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயமான மக்கள் பிரதிநிதிகளின் கண்காணிப்பில் வாக்கெடுப்பு மூலமோ அல்லது ஒரு சட்ட நிர்ணய சபையை உருவாக்குவதன் மூலமோ அல்லது வேறேதாவது முறையிலோ சுயநிர்ணய உரிமையைப் பாதுகாப்பதற்கான வழியேற்படுத்து.) வறிய மக்கள், தொழிலாளர்கள் ஒன்றுபடுதலின் அடிப்படையில் மக்கள் தம் எதிர்காலத்தைச் சுயமாக நிர்ணயிப்பதற்கான ஆதரவைத் திரட்டுவோம்
thurai
முதலில் புலிகளின் ஆதாரவளார்கள் இன்னமும் இலங்கையின் அரசை தமிழர்களின் எதிரியாகவே பிரச்சாரம் செய்வதும், இலங்கை அரசு தமிழரனைவரையும் புலிகளென என்ணுவதையும் தவிர்க்க வேண்டும்.
புலிகளின் பின்னணியில் வளர்ந்த அமைப்புகள் யாவும் இலங்கைத்தமிழரின் பிரச்சினைகளில் தலையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அதன் பின்பே புலத்திலுள்ள தமிழர்கள் அனைவரும் இலங்கைத்தமிழர்களாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு வழிபிறக்கும்.
துரை
Ajith
Q.1. How do you see the Sri Lankan Diaspora after the LTTE’s defeat?
I donot accept that LTTE is defeated. In reality it is Sinhala government is defeated. Today, SRI Lanka being identified as a nation of worst human right abusing and accused for war crimes and genocide. Tamil dispora should engage with civilised world to brought those criminals to face the justice.
Non-LTTE Tamil diaspora- any change of political strategy and how are they influencing the Sri Lanka government and the West? Sri Lankan Muslim diaspora parties?
This question raises suspicion about the intention of the Manori. There are no LTTE-diaspora and non-LTTE diaspora. It would be easy to categorise Rajapakse sponsored diaspora and non-Rajapakse sponsored diaspora.
What do you think the government should do to engage diaspora? What are the hindrances faced by diaspora in playing a political or economic role in Sri Lanka?
Nothing. Leave the tamils to decide their fate in their homeland. Recognise their right of self-determination. Respect the human rights and freedom of the tamils.Remove all the forced Sinhala settlements and military occupation.